ட்விட்டர் காதல்

என் காதலியின் தலையில் ஒரு நரை முடி எங்கிருந்தோ வந்து விழுந்து விட்டது.

அதைக்காட்டி, கல்யாணம் பண்ணிக்கலாம், எனக்கு வயசாகிட்டே போகுது பார் என்கிறாள்.

- ஒரு குறுந்தொகை டச் தெரிஞ்சுது இதுல‌

நான் படித்த செயிண்ட் ஜோசப் பள்ளியின் கிறிஸ்துமஸ் அனுபவம் இது. ஏற்கனவே இங்கு ஒலிம்பிக் பற்றி எழுத ஆரம்பித்து பாதியில் நிற்கிறது, அதற்கே ஃபாதரிடம் அடி விழுமோ என்ற பயத்துடன் இதை சொல்ல விழைகிறேன்.

கடலூரில் உள்ள பள்ளிக்கூடங்களில் பெரும்பான்மையானவை கிறித்தவ பள்ளிகளே (செயிண்ட் ஜோசப்(மெயின்), செயிண்ட் ஜோசப்(கம்மியன்பேட்டை), செயிண்ட் ஜோசப்(கூத்தப்பாக்கம் கான்வெண்ட்), செயிண்ட் ஆன்ஸ்(சுமாரான பெண்கள்), செயிண்ட் மேரீஸ்(சூப்பர் பெண்கள்) மேலும் சில கொசுறுகள்). இங்கு நம்ம மாரிமுத்து வாத்தியார் இருப்பது செயிண்ட் ஜோசப் மெயின் பள்ளியில்.

கிறித்தவ பள்ளிகளில் பெரும்பாலும் அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறை என்ற பெயராலேயே விடப்படும். அதற்கு ஏற்றார்போல், தேர்வு நடக்கும்போது கிறிஸ்துமஸ்(முன்னதாக, விடுமுறையில் வரச்சொன்னால் யாரும் வர மாட்டார்கள்) கொண்டாடப்படும். சாதாரணமாக நடக்கும் 5 தேர்வுகளுடன் நல்லொழுக்கம்(கிறித்தவர் அல்லாதவர்களுக்கு) அல்லது மறைக்கல்வி(கிறித்தவர்களுக்கு) தேர்வு ஒரு சனிக்கிழமையில் நடக்கும். அது ஒரு 1 மணி நேரத்தேர்வுதான் என்பதால் அது முடிந்தவுடன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும்.

உண்மையில் கொண்டாடுவதென்னவோ அதிர்ஷ்ட-மாணவர்கள் தான். ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் ஒரு மாணவனை ரேண்டமாக தேர்ந்தெடுத்து(கணினி மூலம்), அவனுக்கு கிறிஸ்துமஸ் விழாவில் கிறிஸ்துமஸ் தாத்தா மூலம் பரிசு வழங்கப்படும். பரிசென்னவோ சோப்பு டப்பா அளவில்தான் இருக்கும்(எனக்கு 12 வருடங்களில் ஒரு முறைகூட கிட்டியதில்லை) ஆனால் அது பயங்கர பெருமையையும், பிறந்தநாள் புது துணி போட்ட சந்தோஷத்தையும் கொடுக்கும்.

இந்த மாரிமுத்து வாத்தியார் பற்றி சொல்லியே ஆகவேண்டும், கிட்டத்தட்ட எங்கள் பள்ளியின் மிகவும் சுறுசுறுப்பான, துடிப்பான, மிக அதிக நகைச்சுவை உணர்வு கொண்ட வாத்தியார் இவர். பார்ப்பதற்கு தாடி இல்லாத பாலைவனச்சோலை சந்திரசேகர் நல்ல சிவப்பாக இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருப்பார். உடையும் கிட்டத்தட்ட அப்படியே. இவரது வகுப்பில் பயின்ற ஒவ்வொருவரும் கண்டிப்பாக அழகான கையெழுத்துடனோ அல்லது முட்டி உடைந்தோ அடுத்த வகுப்பு செல்வது வரலாறு. எனக்கு இதுவரை இவர் எடுத்ததில்லை மன்னிக்கவும், நான் இதுவரை இவருடைய வகுப்பில் இருந்ததில்லை. ஒவ்வொரு விளையாட்டுதினத்தன்றும் லைவ் கமெண்டரி கொடுக்க இவரைத்தான் அழைப்பார்கள். மைதானமே கலை கட்டும். இவர் சென்னை பாஷையில் பேசி கலாய்ப்பது அட்டகாசமாக இருக்கும். இவர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் உன் பொண்டாட்டிய நண்டு கடிக்கோ.

ஒருமுறை ஒரு மாணவன் ஒவ்வொரு நாளும் இவரது வகுப்பில் கழிவறை செல்ல, ஒரு நாள் அவனை பிடித்து, சோதனை செய்து பிடித்தார். ஆனாலும் அடிக்கவில்லை.

இப்படிப்பட்ட மாரிமுத்து வாத்தியார்தான் ஒவ்வொரு கிறிஸ்துமஸிலும், கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வருவார். அவரது வேடம் கனக்கச்சிதமாக இருக்கும். அவர் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வாகனத்தில் வருவார். அதுவே மிகப்பெரிய வரவேற்பை பெறும். சில முறை ஃபாதரின் காரிலும், பைக்கிலும், மொபெட்டிலும், சைக்கிளிலும், மாட்டுவண்டியிலும் வந்திரங்கும் போது............... சொல்ல வார்த்தைகள் இல்லை அந்த கரகோஷத்தை சொல்ல.

மேடைக்கு அந்த தொப்பையை குலுக்கிக்கொண்டு வந்து மேடையில் இருக்கும் ஃபாதரிடம் வம்பு செய்வார். பின் சாக்லெட்களை தூக்கிப்போடுவார், இல்லாத சேஷ்டைகள் எல்லாம் செய்வார். பின் சென்னை தமிழில் ஒரு லெக்சர் கொடுப்பார். ஹூம்ம்ம்ம் Good old days. பின் பரிசுகளை வழங்குவார். எல்லாம் முடிந்தபின் ஒரு பாடலை பாடி ஆடிவிட்டு செல்லுவார்.

அடுத்த நாள், முந்தின நாள் சாயலே இன்றி தேர்வுக்கு வகுப்புக்கு வருவார். அப்போதும் அவரிடம் அந்த கிறிஸ்துமஸ் தாத்தா ஒளிந்திருப்பாரோ என்று அனைவரும் ஓரக்கண்ணால் பார்த்தபடியே தேர்வெழுதுவோம்

எங்கள் பள்ளியில் படித்த அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவை அறிமுகப்படுத்தி, இன்று வரை கிறிஸ்துமஸை நினைத்தாலே அவரது முகம் வருமளவு ஆக்கிவைத்திருக்கிறார் என்றால் மிகையல்ல.

நன்றி சார்.

சில சந்திப்புகள்

சந்திப்பு தினம்.


நிறைய கவிதைகள் பாடப்பட்டன. எல்லா தொலைக்காட்சிகளும் நேரடியாய் குண்டுவெடிப்புகளை காட்டின. அரசியல்வாதிகள் அவசர அவசரமாக நிறைய உளறிக்கொட்டினர். மக்கள் எழுச்சி அது இதுவென்று தொலைக்காட்சிகள் பேசின. அடுத்த வருடம் 1 நிமிடம் அமைதி காக்க இன்னொரு நாள் கிடைத்தது. 30 நாட்களுக்குள் மக்கள் இந்த விஷயங்களை மறந்து போவார்கள். அடுத்த தேர்தலில், எதிர்கட்சிகள் இந்நிலையை நினைவுபடுத்துவர்.

மும்பை குண்டுவெடிப்பின் மொத்த உயிரிழப்பு இன்று வரை 217.

வாரணம் ஆயிரம், அழகாக எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் கதை நகரவேண்டிய இலக்கை இழந்ததால், பாதிப்பை ஏற்படுத்தவில்லை. வழக்கம்போல் அழகான காதல்காட்சிகளும், ஹாரிஸ் உபயத்தில் கலக்கலான பாடல்களும் படத்தை இரவு 1 மணி காட்சியில் பார்த்தாலும் சலிப்பலிக்கவில்லை. சிம்ரனை நட்டநடு இரவில் பார்த்து பயப்படுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.

நீண்ட நாட்களாக படிக்காமல் வைத்திருந்த டான் ப்ரௌனின் "டிசெப்ஷன் பாயிண்ட்" படித்துக்கொண்டிருக்கிறேன். இரு அமெரிக்க ஜனாதிபதி கேண்டிடேட்களுக்கு இடையில் நடைபெறும் போட்டி என்பதால், புஷ்ஷும் ஒபாமாவும் அழகாக கதையில் ஒட்டிக்கொள்கிறார்கள் (கொள்கைரீதியாக இல்லை)

அலுவலகத்தில் இருப்பதிலேயே கடினமான காரியம், ஒரு வேலையை விட்டு மறுவேலைக்கு செல்லும் நேரம்தான். பழகிய முகங்கள், பழகிய இருக்கை, இவற்றை பிரிந்து செல்வதில் இருந்து, மேலிட ஆப்புகள் வரை சமாளிக்க தனியாக உடல் வளர்க்கவேண்டும்.
சிங்கையில் SITEX என்னும் வருடாந்திர IT Fair நடைபெற்றது. வழக்கம்போல் ஒரு பெரிய ஆஃபரும் இல்லை. USB Thumb Drive மற்றும் சில சீன எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஒவ்வொரு முறை செல்லும்போதும் விலை குறைந்துகொண்டிருக்கின்றன. போன மாதம்தான் ஒரு டெல் லாப்டாப் வாங்கியதால், இந்தமுறை எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்புகளும் இல்லாமல்தான் சென்றேன்.

வழக்கம்போல் ஒரு கவிதை:

ஒவ்வொரு இடிந்த கட்டிடமும்,
கட்டிய வரலாற்றை விட,
இடிந்த சரித்திரத்தையே
சத்தமாக உரைக்கின்றன.

முதல் உலகப்போரின்போது ஒரு ருசிகர சம்பவம் நடந்திருக்கிறது. இந்த சம்பவம் எந்த அளவிற்கு உண்மை என்பது சற்று சந்தேகத்துக்குறியது. ஏனெனில் இந்த சம்பவம் அதிகாரப்பூர்வமாக எங்கும் குறித்துவைக்கப்படவில்லை.

1914 ல், பிரிட்டிஷ் படைகளுக்கும் ஜெர்மன் படைகளுக்கும் இடையே மேற்கு முனையில் போர் நடந்து கொண்டிருந்தது. பெல்ஜியத்தின் இப்ரெ என்ற இடத்தில் கிறிஸ்துமஸுக்கு சற்று முன்பு போர் நடந்துகொண்டிருந்தது.

போர், இரத்தம், பிணங்கள் என்று மனிதமனத்திற்கு ஒவ்வாத விஷயங்களில் முழுக்க முழுக்க தங்களை மறந்து போரிட்டுக்கொண்டிருந்த வீரர்கள், கிறிஸ்துமஸ் வந்ததும் தங்களை அறியாமல் கொண்டாட்ட மனப்பான்மைக்கு சென்றனர். இவர்களை கொண்டாட எதிரி வீரர்கள் விட வேண்டுமே! 

ஆனால் இரு புற வீரர்களுக்கும் இதே மன நிலைமை இருந்ததால், இரு புற வீரர்களுக்கும் மனம் கொண்டாட்டத்தை நாடியது. முதலில் கொண்டாட ஆரம்பித்தது ஜெர்மன் படைகளே, ஜெர்மன் வீரர்கள் தங்கள் பதுங்கு குழிகளை அலங்காரப்படுத்தி மரங்களில் மெழுகுவர்த்திகளை கொளுத்தினர். 

மேலும் கிறிஸ்துமஸ் கேரல் பாடல்களையும் பாடி கிறிஸ்துமஸை கொண்டாடினர். இதைக்கேட்ட எதிர்தரப்பு ஸ்காட்டிஷ் வீரர்களையும் இந்த உற்சாகம் தொற்றிக்கொண்டது. ஜெர்மன் வீரர்கள் "Stille Nacht" பாடலை பாட ஸ்காட்டிஷ் வீரர்களோ அப்பாடலின் ஆங்கில வடிவம் Silent Night பாடலைப்பாடினர்.

ஒரு பாடல், இதயத்தை தொடும் இசை இரு எதிரிகள்(எதிர்கள் வேடம் பூண்டவர்கள்) இணைய வழிவகுத்தது.

அந்த ஜெர்மன் பாடல் இதோ


இதற்கு கொஞ்சம் மேலே போய் ஜெர்மன் வீரர்களும் ஸ்காட்டிஷ் வீரர்களும் விஸ்கி, சிகரெட், சாக்லெட் போன்றவற்றை தங்களுக்குள் பரிமாறிக்கொண்டனர்.

தங்கள் குரோதங்கள் மறைந்து அன்பை பரிமாறிக்கொண்ட நேரம், தங்களால் கொல்லப்பட்ட வீரர்களின் நினைவு வந்தது இரு புற வீரர்களுக்கும்.  மறைந்த வீரர்களுக்கு இறுதி சடங்கு நடத்தினர். அப்போது சங்கிதம் 23 ம் அதிகாரத்தில் இருந்து ஒரு வசனத்தை வாசித்து இறுதி அஞ்சலி செலுத்தி இறைவனை வேண்டினர். அந்த வசனம் 

    The Lord is my shepherd. I shall not want. He maketh me to lie down in green pastures. He leadeth me beside the still waters. He restoreth my soul. He leadeth me in the path of righteousness for his name's sake. Yea, though I walk through the valley of the shadow of death, I will fear no evil.

தமிழில்,

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.
அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.
அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

இந்த கிறிஸ்துமஸ் போர்நிறுத்தம் மளமளவென மற்ற போர்முனைகளுக்கும் பரவியது. சில இடங்களில் இரு அணி வீரர்களும் கால்பந்தாட்டம் கூட ஆடியதாகவும் கூறப்படுகிறது.

அன்பை கொண்டாடும் கிறிஸ்துமஸ் வருக. உலகத்திற்கு மீண்டும் சமாதானம் தருக.

Feliz Navidad. Merry Christmas

"பொதுவாக ஒரு கூட்டத்தில் கலப்பதென்பது எனக்கு எப்போதும் வேப்பங்காய் விஷயம்"

நான் முதல் முறை கலந்துகொள்ளும் பதிவர் சந்திப்பு இது. மேலே நீங்கள் படித்த வரிகள் என்னுடைய முந்தைய இடுகையில் இருந்து. அந்த வரிகளை மாற்றிக்காட்டிய அனைவருக்கும் நன்றிகள்.

முன்குறிப்பு: இதுதான் முதல் சந்திப்பு என்பதால், சில பெயர்களோ சுட்டிகளோ மாறியிருக்கலாம். தயவு செய்து பொறுத்துக்கொள்ளவும். பின்னூட்டத்தில் குட்டவும்

இந்த முறை மலேசியப்பதிவர் விக்னேஷ்வரன் வருவது இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது. எனவே அவருக்கு ஊரையும் அப்படியே சுற்றிக்காட்டும் நோக்கில், செந்தோசா என்னும் சிங்கைத்தீவில் இந்த சந்திப்பு அமைக்கப்பட்டிருந்தது.

நமக்கு எப்போதும் புதியவர்களை சந்திப்பது கொஞ்சம் கடினமான காரியமாக இருந்ததால்(கமெண்ட் கோவிந்து: இதுவே ஃபிகரா இருந்தா?) என்னுடன் வேலை செய்யும் இரு நண்பர்களையும் அழைத்து சென்றிருந்தேன். இந்த சந்திப்புக்கு செல்வது பற்றி அதிகம் திட்டமிடாமல் இருந்ததால் கிட்டத்தட்ட மதியம் ஊர்க்கார நண்பன் விஜய் ஆனந்தை அழைத்து என் வருகையை பற்றி சொன்னேன். அது முதல் ஒவ்வொரு அரைமணிநேரமும் என்னை அழைத்து தகவல்களை பரிமாறிக்கொண்டிருந்தார்.

என்னுடைய இரு நண்பர்களையும் அழைத்துக்கொண்டு செல்ல சற்று நேரமாகிவிட்டாலும், சம்பவ இடத்துக்கு சரியாக‌ சென்று சேர்ந்தேன். செல்லும் வழியெல்லாம் நண்பர்கள் இருவரும் எங்கே எங்கே என்று அரித்தெடுத்துக்கொண்டு இருந்ததால் ஒரு மீட்டுக்கு செல்கிறோம் என்று சொல்லியிருந்தேன். அவர்கள் இருவரும் ஏதோ பெரிய மீட்டிங் என்று நினைத்து ஃபிகர் எல்லாம் வருமா என்றெல்லாம் கேட்டுக்கொண்டே வந்தனர். வரும் வழியெல்லாம் ஒரே பிகினிகளும் ஜோடிகளும் கடற்கரையோரம் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தன. ஹூம் நல்ல இடம் பார்த்தாங்கப்பா என்று நினைத்தபடியே வந்தேன்(பின்னர் விஜய் ஆனந்த், விக்னேஷுக்கு காட்டத்தான் இந்த இடம் என்று கூறினார். அதாவது ஊர் சுற்றிக்காட்ட என்றார்)

வந்தவுடன் விஜய் ஆனந்த், எங்களை வரவேற்றார். நானும் அவரும் கடலூர் என்பதால் கொஞ்சம் ஊர்க்கதை பேசியபடியே ஆரம்பித்தோம். அந்த நேரத்தில் துக்ளக் மகேஷும் வந்து இணைந்தார். எல்லோரும் அங்கே ஏற்கன‌வே செட்டில் ஆகிவிட்டார்கள் என்று கூறினார். சென்று பார்த்தபோது நிறையபேர் கையில் பீர் டின்களுடன் இருந்தபோது தெரிந்தது இவர் கூறிய செட்டில் விஷயம்.

என் நண்பர்களிடம் ஏற்கனவே மிரட்டி அழைத்து சென்றிருந்தேன். ஒரு வார்த்தை கூட‌ உள‌ற‌க்கூடாது. என்ன‌ பேசுகிறார்க‌ள் என்று கேட்டுவைத்துக்கொள்ளுங்க‌ள், புரிந்தால் ம‌ட்டும் உங்க‌ள் க‌ருத்தைக்கூறுங்க‌ள் என்றெல்லாம் மிர‌ட்டியிருந்தேன். ஏனென்றால் இருவ‌ருக்கும் ப்ளாக் என்றால் என்ன‌வென்றே தெரியாது. அதை ஏதோ புது வ‌ஸ்து போல் நினைத்துக்கொண்டிருந்தார்க‌ள்.

அங்கிருந்த‌வ‌ர்க‌ள் கையில் பீர் பாட்டில்க‌ளை பார்த்த‌தும், என் நண்பர் பாஸ்கி முத‌லில் அணை உடைந்தார். அடுத்து சேல‌ம் ப‌ற்றி பேச‌ ஆர‌ம்பித்த‌தும், இன்னொரு ந‌ண்ப‌ரும் அணை உடைந்தார். இருவ‌ரும் புதிதாக‌ சிங்கை வந்த‌வ‌ர்க‌ள் என்ப‌தால் இத்த‌னை த‌மிழ் ந‌ண்ப‌ர்க‌ளை பார்த்த‌தும் இருவ‌ரும் பேசி ம‌கிழ்ந்த‌ன‌ர்.

அங்கு ஏற்க‌ன‌வே, கோவியார்,மலேசிய பதிவர் விக்னேஷ்வரன், ஜோச‌ப் பால்ராஜ், முக‌வை மைந்த‌ன் ராம், ஜோ மில்டன், ஜோதிபார‌தி, பாரி அர‌சு ம‌ற்றும் அவ‌ர் ந‌ண்ப‌ர் ராஜா, ப‌திவு வாச‌க‌ர் மீனாட்சி சுந்த‌ர‌ம் (இவ‌ர் புதிய‌ ச‌ட்டையில் ம‌ஞ்ச‌ள் கூட‌ அழியாம‌ல் போட்டு வந்திருந்தார்), கிரி (த‌லைவ‌ர் முத‌ல்நாள் இர‌வு வேலை பார்த்திருந்த‌தால், ஒரு அரை ம‌ய‌க்க‌த்திலேயே இருந்தார்) ம‌ற்ற‌வர்கள் ப‌ற்றி ச‌ரியாக‌ நினைவில்லை. பின்னூட்ட‌த்திற்கு பிற‌கு தேவைப்பட்டால் மீள்ப‌திவேற்றுகிறேன்.

ச‌ந்திப்பு ந‌ட‌ந்த‌ இட‌த்திற்கு அருகில் நிறைய‌ பிகினிக‌ள் சுற்றிக்கொண்டிருந்த‌ன‌(ஹூம்ம்ம்). என‌து முந்தைய‌ இடுகையில் நான் கூட்ட‌த்தில் க‌ல‌ப்ப‌து க‌ச‌ப்பாக‌ இருக்கும் என்று கூறிய‌தை வைத்து ஜோச‌ப் என்னை ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு அறிமுக‌ம் செய்துவைத்தார். என்னைப்பார்த்து ப‌ல‌ர் நான் மிக‌ இள‌மையாக‌ இருப்ப‌தாக‌ கூறின‌ர்.(க‌மெண்ட் கோவிந்து: ஆமாம் ரெம்ப‌ முக்கிய‌ம்)

என்னைப்ப‌ற்றி சில‌ வார்த்தைக‌ள் பேச‌ சொன்னார்க‌ள், மிகுந்த‌ கூச்ச‌த்துட‌ன் பேச‌ ஆர‌ம்பித்தேன், ச‌ற்று நேர‌த்தில் ச‌க‌ஜ‌மானேன். ஒரு பதிவர், நீங்க தானே இங்கே எங்கே IT Show நடந்தாலும்(கும்பல் கூடினாலும்) போய் பார்த்துவிட்டு எழுதுவீர்கள் என்றார். திரும‌ண‌ம் ஆக‌வில்லை என்ற‌தும் ஜோச‌ப், "நீ ந‌ம்ம‌ ஆளுப்பா, இங்க‌ வா" என்று அழைத்து அருகில் உட்கார‌வைத்து காப்பாற்றினார். என்னிட‌ம் யாருடைய‌ ப‌திவைப்ப‌டித்து நீங்க‌ள் வந்தீர்க‌ள் என்று கேட்ட‌ன‌ர். அப்போது அது என‌க்கு ச‌ரியாக‌ நினைவிலில்லை. ஆனால் பின்ன‌ர் "க‌ட்டுமான‌த்துறை" வ‌டுவூர்குமார் ப‌ற்றி பேச்சு வ‌ந்த‌போதுதான் நினைவில் வ‌ந்த‌து. அவ‌ர‌து பின்னூட்ட‌ங்க‌ள் என‌க்கு ஆர‌ம்ப‌ க‌ட்ட‌ங்க‌ளில் உத்வேக‌ம‌ளித்த‌ன‌.

துக்ளக் மகேஷும் தன்னைப்பற்றி அறிமுகம் செய்துகொண்டார்.

இந்நேர‌த்திலும் பிகினிக‌ள் ஆட்ட‌ம் போட்டுக்கொண்டிருந்த‌ன‌. ஒருவ‌ன் க‌ழுத்து வ‌ரை நீரில், அவ‌னுடைய‌ பிகினியை க‌ழுத்தில் உட்கார‌வைத்து, அவ‌னுடைய‌ ந‌ண்ப‌ர்க‌ள் புகைப்ப‌ட‌ம் எடுத்த‌ன‌ர்.

திடீரென்று அனைவ‌ரையும் பீர்க‌ளை சீக்கிர‌ம் குடிக்க‌வோ அல்ல‌து ஒளித்து வைக்க‌வோ உத்த‌ர‌வு வ‌ந்த‌து. பின்புதான் தெரிந்த‌து, ப‌திவ‌ர் திண்டுக்க‌ல் ச‌ர்தார்(அனுராதா க‌ண‌வ‌ர்) அவ‌ர‌து ம‌க‌ன் குடும்ப‌த்துட‌ன் வ‌ந்த‌து. அனைத்து ப‌திவ‌ர்க‌ளும் அவ‌ரை சென்று வ‌ர‌வேற்றோம். ஏற்க‌ன‌வே விக்னேஷ்வ‌ர‌ன் நினைவுப்ப‌ரிசுக‌ளை கொடுத்துவிட்ட‌தால், என‌க்கு இல்லையோ என்று நினைத்திருந்தேன், அப்போது திடீரென்று கூப்பிட்டு கொடுத்து காப்பாற்றினார். :)

சற்று நேரம் கழித்து சிங்கை நாதன் வந்து இணைந்துகொண்டார்.

ம‌கேஷ் தான் கொண்டுவ‌ந்திருந்த‌ சாக்லேட்க‌ளை கொடுத்து அனைவ‌ர் வாயையும் அடைத்தார். நிஜ‌மாக‌வே அந்த‌ சாக்லேட் சாப்பிட்ட‌தும் ப‌ற்க‌ளுக்குள் சிக்கிக்கொண்டு ச‌ற்று நேர‌ம் அமைதிகாக்க‌ வேண்டியிருந்த‌து :)

அந்த‌ க‌ட‌ற்க‌ரை அருகே அனைவ‌ரையும் புகைப்ப‌ட‌ம் எடுக்க‌ கோவியார் முய‌ற்சித்தார். பாறைக‌ள் மிக‌ பாசியாக‌ இருந்த‌தால் சில‌ முறை கால் த‌வ‌றி, அனைவ‌ரையும் க‌ல‌வ‌ர‌ப்ப‌டுத்தினார். அந்த‌ ச‌ம‌ய‌த்தில் யாரோ "அண்ணே கேமிரா ப‌த்திர‌ம்" என்றார்.
இத‌ற்குப்பின் அனைவ‌ரும் மீண்டும் எங்க‌ள் ப‌ழைய‌ இட‌த்திற்கு சென்று சேர்ந்தோம். பிகினிக‌ளின் ஆட்ட‌ம் தொட‌ர்ந்துகொண்டிருந்த‌து.

திண்டுக்கல் சர்தார் அவர்களும், ஜோதிபாரதி அவர்களும் தாங்கள் எடுத்து வந்த வடை மற்றும் சுளியன்களையும் விநியோகித்தனர்.

பதிவர் விக்னேஷ்வரன் தனது வலைப்பதிவு பயணத்தை இனிய தமிழில் பகிர்ந்தார். தனது தமிழ் வளர்ச்சியையும், மலேசிய பதிவர்கள் பற்றியும் மலேசியாவில் தற்சமயம் தமிழின் நிலைமையையும் கூறினார்.

திண்டுக்கல் சர்தார் அவர்கள் தான் கடந்து வந்த அனுபவங்கள் பற்றியும் தனது மனைவியார் அனுராதா பற்றியும் கூறியது மிக நெகிழ்ச்சியாக இருந்தது. அவரது வார்த்தைகளுக்கும் எங்கள் மனதுக்குமான இடைவெளி குறைந்துகொண்டிருந்தது. என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்கிக்கொண்டிருந்தன(Empathy). அவரும் அவரது மனைவியும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காக செய்த செயல்களும், பார்த்த பிரபலங்கள் பற்றியும் கூறினார்.

வைரமுத்துவை சென்று பார்த்தபோது, அவர் இவர்களது வார்த்தைகளை கூட கேட்கவில்லையாம். கடைசியாக இவர்கள், "சரி உங்களுக்கு நேரமில்லை என்று நினைக்கிறோம், நாங்கள் உங்களுக்கு எழுதி அனுப்புகிறோம்" என்றதற்கு, வைரமுத்து, "எழுதுங்களேன்" என்றாராம். எனக்கு கள்ளிக்காட்டு இதிகாசம் நினைவுக்கு வந்தது. எல்லாம் எழுத்துவரைதான்.

இதற்குப்பிறகு பிகினிகளும், ஜோடிகளும் மனதைவிட்டு மறைந்தன. தினமும் 10 நிமிடமாவது இன்னும் அழுகிறேன் என்றபோது, ஆணின் அழுகை பற்றி எண்ணிப்பார்த்தேன். ஒவ்வொருவரையும் மிகவும் பாதிக்கும் விஷயம் தன் அப்பாவின் கண்ணீராகத்தான் இருக்கும். அந்த தருணத்தை கண்டிப்பாக உணர்ந்தோம்.

இன்னும் அனுராதா அவர்களை அவரது மகள் வீட்டில் உண‌ர்கிறார் என்றார். கோவியார், அந்த அளவுக்கு அவர் உங்கள் உணர்வுகளில் வாழ்கிறார் என்றார். சுஜாதா கூறியது நினைவில் வந்தது.

"Nobody dies; they live in memories and in the genes of their children "

நிகழ்ச்சிக்கு புதிதாக வந்த பதிவு வாசகர் மீனாட்சி சுந்தரம், தனது அரசியல் ஆசைகளையும் தனது வருங்கால திட்டங்களையும் தெரிவித்தார். அவர் தன் கிராமத்து பஞ்சாயத்து தேர்தலில் தன் தந்தையை எதிர்த்து தோல்வி மன்னிக்கவும் வெற்றி வாய்ப்பை இழந்ததை தெரிவித்தார் (ஒரு நாயகன் உதயமாகிறான்)

அதற்குப்பின் சிறப்பு பதிவர் சாம்பார் மாஃபியா உரையாற்றினார். அவரது பெயரை யாரும் தயவு செய்து எழுதிவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். தைரியமாக எழுதியதால், ஒரு தொலைக்காட்சி நிறுவனம் அவருக்கு அனுப்பிய பாராட்டுகளை பற்றி கூறினார். மேலும் அவர் ஆங்கிலத்தில், இந்தியாவின் ஒரு முதுபெரும் பதிவர் என்ற தகவலையும் பகிர்ந்துகொண்டார்.

இவர் இட்லிவடை அணியில் இருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்தது. அதே சமயம் சிங்கை நாதன் மீதும் இதே கேள்வி வீசப்பட்டது.

மிகவும் இருட்டிவிட்டதாலும், இட்லி லிட்டில் இந்தியாவில் ஆறிவிடும் என்ற காரணத்தினாலும் சந்திப்பை முடிவுக்கு கொண்டுவந்தார்கள்.

அனைவரும் கிளம்பிக்கொண்டிருந்த நேரத்தில் பதிவர் ராம் வந்து கலந்து கொண்டார். கையில் ஒரு கேமிராவுடன் கடற்கரைப்பக்கம் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்.

இடையில் பாரி அரசு, தனது திருமண அழைப்பிதழை கொடுத்தார். திருமணம் பட்டுக்கோட்டையில் நடைபெறுகிறது. அவருக்கு பாரதி மீது எதிர்ப்பாம், ஆனால் அவரது மாமனாருக்கு பயங்கர விருப்பாம் எனவே பெண் பெயரில்கூட பாரதி இருக்கிறது. எது எப்படியோ, விரைவில் பாரி அரசு பாரதி-தாசனாக மாறப்போகிறார். :)

சந்திப்பு முடியும் நேரத்தில் அகரம் அமுதன் வந்து இணைந்துகொண்டார். எனது பெயரை மிகவும் பாராட்டினார். இந்த தமிழ்ப்பெயர் மிகவும் பிடித்திருப்பதாகவும், முடிந்தால் தன் பெயரையும் மாற்றிக்கொள்ள விருப்பம் தெரிவித்தார். ;)

சந்திப்பு முடிந்ததும், லிட்டில் இந்தியாவின் இட்லிக்காக கோவியார் வேகமாக கிளம்பினார். செல்லும்போது முகவை மைந்தன், பார் அரசு மற்றும் அகரம் அமுதன் மூவரும் கம்பன் சீதையை வர்ணித்த விதம் பற்றி விவாதித்தனர். சந்திப்பிற்கு பிறகு எங்கு செல்ல திட்டமிட்டு இருந்தார்கள் என்பது சரியாக தெரியவில்லை.

கோவியார் எங்களை பேருந்து நிலையத்திற்கு வழிநடத்தினார். நாங்கள் ஏறிய பேருந்து 3 கி.மி தூரம் கூட இல்லாத தீவை கிட்டத்தட்ட கால்மணிநேரம் சுற்றிக்கொண்டிருந்தது. அனைவரும் ஒருவேளை சிங்கை செல்லாமல் வேறு எங்கோ செல்கிறதோ என்று எண்ண ஆரம்பித்தனர். என்னிடம் பாஸ்போர்ட் வேறு இல்லாதது சற்று சற்று கலக்கம் கொடுத்தது. :)

ஜோசப் அவர்கள் ஒரு ராஜபார்வை கண்ணாடியை போட்டுக்கொண்டு, "நான் கண்ணாடி போட்டால் செல்வராகவன், கழற்றினால் தனுஷ்" என்றெல்லாம் பன்ச் டயலாக் விட்டார். பின்னர், ஒரு அணி லிட்டில் இந்தியா சென்றது. அதன்பிறகு என்ன நடந்ததென்று தெரியவில்லை. எனக்கும் மகேஷுக்கும் இந்த நிகழ்வுகளை பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக்கொண்டனர்.

டிசம்பரில் புதுகை அப்துல்லா வருவதாக தெரிகிறது. அப்போது அடுத்த மெகா சந்திப்பு நடைபெறும் என்று நினைக்கிறேன்.

தமிழ்மணத்தின் ராசி நன்றாக வொர்க் அவுட் ஆகின்றது. சென்ற பதிவின் தலைப்பில் வெறும் ஜட்டி என்ற ஒரே ஒரு வார்த்தைக்காக ஹிட் காட்டுத்தனமாக ஏறிவிட்டது.

இனி கொஞ்சம் உஷாராக தலைப்பிடவேண்டும் என்று நினைக்கிறேன். எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதை விட எந்த பதிவை ரசித்தார்கள் என்பதே முக்கியம் என்று நினைக்கிறேன்.

வர வர எதை பதிவிடுவது என்பது மிகப்பெரிய குழப்பமாக உள்ளது. கொஞ்ச நாளைக்கு தொழிற்நுட்பம் மற்றும் வரலாறு சம்பந்தப்பட்ட பதிவுகளை/மொழிபெயர்ப்புகளை இடலாம் என்று எண்ணியுள்ளேன்.

பதிவர் வட்டம் என்பது இன்னமும் எனக்கு பிடிபடாமல் தான் இருக்கின்றது. அதாவது, பதிவர் வட்டத்திற்காக எழுதுவது. எத்தனை பேர் அதை படிக்கிறார்கள் என்பதும், அது எத்தனை பேருக்கு புரியும் என்பதும் சற்று சந்தேகத்திற்கிடமான விஷயம் தான். மேலும் வரலாற்றில் இடம் பெறும்போது(கமென்ட் கோவிந்து: இது ரெம்ப ஓவர்) சற்று குழப்பங்களை ஏற்படுத்தலாம்.

மெயிலனுப்ப வேண்டிய விஷயங்களை பதிவிடுவதும், சாட் செய்ய வேண்டிய விஷயங்ளை ட்வீட் செய்வதும் அந்தந்த தொழிற்நுட்பங்களை அதற்கான பாதையில் இருந்து மாற்றிவிடும்.

புதிதாக டொமைன் வாங்கியிருக்கின்றேன். தற்போதைக்கு ரீடிரக்ட் செய்து வருகிறேன். புதிதாக தளம் வாங்கியபின் எல்லோரையும் போல் வேர்ட்ப்ரஸ்ஸுக்கு மாறிவிடுவேன். வேர்ட்ப்ரஸ் தரும் சுதந்திரம் தனிதான். ப்ளாக்கரைப்போல் புதிய xml வைத்து குழப்பாமல். தெளிவாக php இல் இருப்பது மிகப்பெரிய பலம்.

இந்த விவரங்கள் எல்லாம் பதிவுலகில் கொட்டை தின்று பழம் போட்டவர்களுக்கு இதெல்லாம் "என்னது இந்திராகாந்தி செத்துட்டாங்களா?" வகை மேட்டர். :)

சரி இந்த வாரம் வீக்கென்டில் சிங்கையில் சிங்கை தெற்காசிய முனைய பதிவர் சந்திப்பு !
நடைபெறவிருக்கிறது. பொதுவாக ஒரு கூட்டத்தில் கலப்பதென்பது எனக்கு எப்போதும் வேப்பங்காய் விஷயம். உடல்நிலை வேறு சற்று மோசமாக இருப்பதால், முடிந்தவரை முயற்சி செய்யலாம் என்று எண்ணியுள்ளேன்.

நிகழ்ச்சி பற்றிய தகவல்கள்:
நாள் : நவம்பர் 1, 2008
இடம் : செந்தோசா சுற்றுலாத்தலம் டால்பின் லகூன் கடற்கரை அருகில்
நேரம் : மாலை 4 - 8

கடைசியாக ஒரு ஹைக்கூவுடன்,

மீன்கடையில்
இறந்த மீனின் வாயில் விழுகின்றது
மழைத்துளி

Content is no longer available...

சிங்கப்பூர் வந்து நீண்ட நாட்கள் ஆனபின் திடீரென்று பழைய தமிழ் படங்களில் சிங்கை எப்படி இருந்தது என்று பார்க்க ஆவலுடன், பல படங்களையும் பாடல்களையும் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். அந்த வரிசையில் நினைத்தாலே இனிக்கும் படத்தில் இருந்து இப்பாடலை கேட்டேன்.

நிறைய முறை கேட்ட பாடல் தான், இருந்தாலும் அப்பாடலின் இசையும் பாடிய விதமும் துள்ளல் ரகம். எம்.எஸ்.வி பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

எஸ்.பி.பியும் தன் பங்கிற்கு பாடலை அட்டகாசப்படுத்தியிருக்கிறார். அழகான ஏற்ற இறக்கங்களுடன் அவர் பாடும் விதம் அருமை. குறிப்பாக, "மன்மதன் வந்தானா, சங்கதி சொன்னானா?" இடத்தை அவர் பாடும் போது, குரல் பல பரிணாமங்களை எட்டுகிறது.

தலைவர் ரஜினியின் ஸ்டைல் உச்சகட்டத்தில் இருக்கின்றது. அவரது ஸ்டைலும், டான்ஸும் அருமை. பிக கருப்பாக, எண்ணெய் ஒழுகும் முகத்தோடு இருந்தாலும், அட்டகாசமாக இருக்கிறார்.

ஏதோ லென்ஸ் ஃபில்டர் எல்லாம் போட்டு, கெடுத்து வைத்திருக்கிறார்கள் பாடலை. ஒருவேளை அந்தகால கிராஃபிக்ஸாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்படி இத்தனை துள்ளல்களோடு இருக்கும் இப்பாடலைப்பார்த்து ரசியுங்கள்.இந்த முறை இந்திய பயணத்தின்போது(சிங்கப்பூரில் இருந்து) பல திட்டங்களோடு சென்றிருந்தேன். ஆனால் இறுதியில் ப்ராஜெக்டில் இருந்து வேலை வந்து விட்டதால், வீட்டை விட்டு வெளியே கூட செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே மாட்டிக்கொண்டேன். ஆற்காட்டார் புண்ணியத்தில் கரண்ட் வேறு இல்லாத‌தால் ஏரியா விட்டு ஏரியா மாறி சென்று கொண்டிருந்தேன்(ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொரு நேரத்தில் கரண்ட் கட் செய்யப்படுவது மரபு)

இப்படிப்பட்ட நேரத்தில் நீண்ட நாட்களாக படிக்க எண்ணியிருந்த புத்தகங்களை படிக்க துவங்கினேன். சென்னை ஹிக்கிம்பாதம்ஸ் புத்தகக்கடையில் தமிழுக்கான பகுதி மிகக்குறைவாகவே இருந்தாலும் கிட்டத்தட்ட முக்கிய புத்தகங்கள்(நல்ல விளம்பரப்படுத்தப்பட்ட அல்லது பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்கள்) கிடைக்கின்றன. சென்ற முறை ராகுல் சாங்கிருத்தியாயனின் வால்கா முதல் கங்கை வரை கூட அங்கு தான் வாங்கினேன்

ஆனால் இந்த முறை சாருவின் ஸீரோ டிகிரியும், ராஸலீலாவும் வாங்க முடிவு செய்து சென்றேன். ஆனால் ஸீரோ டிகிரி கிடைக்கவில்லை. ராஸலீலா மட்டுமே கிடைத்தது. அருகிலேயே வாத்தியாரின் "ரத்தம் ஒரே நிறம்" புத்தகமும், ஆங்கிலத்தில் புகழ் பெற்ற ராபின் ஷர்மாவின் "The Monk Who Sold His Ferrory" தமிழாக்கம் "தன் பொக்கிஷத்தை விற்ற துறவி" புத்தகமும் கிடைத்தன.

வாங்கியவுடன் "ரத்தம் ஒரே நிறம்" புத்தகத்தை பிரித்து மேய்ந்தேன். ஆட்டோவில் வரும்போதே புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். இந்த புத்தகம் பற்றி ஏற்கனவே யாழிசை ஒரு இடுகை இட்டிருக்கிறார். வழிமொழிகிறேன்.

பிறகு ஆரம்பித்தேன் ராஸலீலாவை, கிட்டத்தட்ட 700 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது. இந்த புத்தகம் ஒரு திரைப்படம் பார்ப்பது போல்தான் இருந்தது. வெறித்தனமாக அந்த முழு புத்தகத்தையும் 1 நாளில் படித்து முடித்தேன். என் அம்மா, அப்படி என்னத்த தான் படிக்கிற? இதுக்கு தான் ஊரில் இருந்து வந்தியா? என்று அலுத்துக்கொண்டது வேறு கதை.

ஒரு டைரியை படிப்பது போலத்தான் இருந்தது இப்புத்தகம் படிப்பது. சாருவின் வித விதமான சம்பவங்களின் தொகுப்பு. அவரது தபால் அலுவலக வாழ்க்கை பற்றிய அவரது கதைகள், நீண்ட நாட்கள் முன்பு படித்த ருஷ்ய சிறுகதைகளை நினைவுபடுத்தின. நம்மை பெருமாளுடன் இணைத்து பார்க்கமுடிகிறது. இந்த பக்கங்களை படிக்கும்போதே ஏதோ அரசு அலுவலகத்திற்குள் நுழைந்தது போல் இருந்தது, அரசு அலுவலகங்களுக்கென்று ஒரு தனி வாசனை உண்டு. அந்த வாசனை படிக்கும்போது வந்தது.

பெருமாளிற்கு மட்டும் எப்படி இவ்வளவு நண்பர்கள் விதவிதமாக கிடைக்கின்றார்களோ தெரியவில்லை. ஹூம்ம்ம்ம்

பிற்பாடு வருகின்ற வித விதமான பெண்களும், அவர்கள் பெருமாளிற்கு அடிக்கின்ற ஆப்புகளும் முழுக்க முழுக்க எதார்த்தம். அதிலும் அந்த மலேசியப்பெண் இந்தியா வரும்போது சந்திக்கவில்லை என்பது பற்றி பெருமாளின் வருத்தங்கள், நான் இந்தியா சென்று நண்பர்களை கூட சந்திக்காமல் திரும்பி வந்த சம்பவங்களை நினைவுபடுத்தின. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித காரணங்கள் உண்டு. அது அவரவர்களுக்கு பொருத்தமானதாகவே தோன்றும். அடுத்தவர்களுக்கு அது தோன்றாததுதான் வாழ்க்கையின் எதார்த்தமான சுவாரசியம்.

பெருமாள் நல்ல சுகவாசியாகத்தான் இருந்திருக்கிறார், தற்கொலை செய்துகொள்ளும் அந்த அமெரிக்கப்பெண்ணைப்போல் நடைமுறையில் பல பெண்களை பார்க்கமுடியும். என்ன ஒன்று, முக்கால்வாசிப்பேர்ஆண்களை தற்கொலை செய்யத்தூண்டி விடுவார்கள்.

பிற்பாடு வந்து செல்லும் அந்த சி மேட்டர்களும், உலகவங்கி விவகாரங்களும் எனக்கு "Lock Stock and Smoking Barrels" படத்தை நினைவூட்டின.

ஆனால் புத்தகத்தின் எரிச்சலான விஷயங்கள் எங்கு பார்த்தாலும் மேலோங்கி இருக்கும் ஒரு ஆதிக்கத்தனம் மற்றும் மேதாவித்தனம் (போன்று காட்டிக்கொள்ள முயலும் ஒரு தன்மை). ஒரு down to earth approach இல்லாதது நாம் சில கதைகளோடு இணைவதில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.

அடுத்த எரிச்சல், எங்கும் அடைத்திருக்கும், ஈமெயில் மற்றும் SMS களும். சில உறவுகளை கொண்டாடுவதும், அது முறியும் போது ஏறி மிதித்து அதன் மீது மூத்திரம் பேய்வதும் ஒரு வித சாடிசத்தை காட்டுகின்றது.

மொத்தத்தில் படிக்கவேண்டிய உணரவேண்டிய ஒரு படைப்பு, ஆனால் முழு புத்தகத்தையும் அல்ல என்பது என் அனுபவம்.

அடுத்த புத்தகமான "தன் பொக்கிஷத்தை விற்ற துறவி", இன்னும் நான் முழுதாக படித்து முடிக்கவில்லை. நான் படித்த வரையில் ஓரளவிற்கு நன்றாக இருக்கின்றது. ஆனாலும் ஆங்கிலத்தில் படிக்கும் போது இருந்த ஒரு கவர்ச்சி இந்த தமிழ்நடையில் இல்லை.

மேலும் புத்தகத்தின் லேஅவுட் கண்றாவியாக உள்ளது. ஃபான்ட் படிக்கத்தூண்டாமல், புத்தகத்தை மூடத்தூண்டுகின்றது. ஹும்ம்ம்ம் படித்துப்பார்த்து சொல்கிறேன்.


வால் நட்சத்திரம் பாடல்கள்

ஏற்கனவே நாம் கேட்டு ரசித்த, ஹிந்தி பாடல்களின் தமிழாக்கம் தான்.

அதே ஷங்கர் மஹாதேவன் பாடல்கள். என்ன இந்த முறை பாடல் வரிகள் அவருக்கு சுதந்திரத்தை சற்று குறைத்தது போல் தோன்றுகின்றது. குறிப்பாக "இரயில் பயணங்கள்" பாடலில் என் அம்மா வரிகள் வரும் இடங்கள், ஹிந்தியின் "மேரி மா" போல் அழுத்தமாக இல்லாதது போல் ஒரு உணர்வு.

எனக்கு இந்த முறை பிடித்த பாடல், "பம்பம் பாடு" பாடல், அமீர்கானின் அதே ஆரம்ப பாடலை வைத்துக்கொண்டு அட்டகாசமாக ஆரம்பிக்கின்றது பாட்டு. துள்ளல் சற்றும் குறையாமல் செல்வது மிகப்பெரிய பலம் இப்பாடலுக்கு.

"தொடுவானம்" பாடல் மிக அருமை. அட்டகாசமான பாடப்பட்டுள்ளது.

எல்லா பாடல்களும் நன்றாகவே உள்ளன. :)

ஆக மொத்தத்தில் கடையில் கொஞ்சம் சாப்பிட்ட குலாப் ஜாமூனை வீட்டில் அம்மா செய்தது போல் இருக்கின்றது. அடித்து தூள் கிளப்பலாம்.

இப்படம் தமிழ்நாட்டின் மூலை எங்கும் சென்று சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு எண்ணம்.

வெண்ணிலா கபடி குழு.முதல் முறை கேட்டபோது பாடல்கள் நன்றாக இருப்பது போல தோன்றுகின்றது. ஒரே ஒரு முறை தான் கேட்டிருக்கிறேன்.

கபடி கபடி பாடல் ஷங்கர் மஹாதேவன் குரலில் பட்டாசாக இருக்கின்றது. ஆனால் புதிதாக பெரிதாக சொல்லும் அளவு இப்பாடல் இல்லை, வழக்கமான பாடல் தான்.

லேசா பறக்குது பாடல் மீண்டுமொரு டெம்ப்ளேட் பாடல். பின்னணியில் ஒலிக்கும் இசை அழகான ராட்சசியே பாடலை நினைவூட்டுகின்றது. பெண்குரல் அட்டகாசம், குழைந்து நழுவி ஓடுகின்றது. இப்பாடலுக்கு நாயகி நம்ம சரண்யாவை நினைத்துப்பார்க்கும் போது பாடல் ஹிட் என்று கண்முன் தெரிகின்றது :) ஜெயம்கொண்டான் படத்தில் சரண்யாவை அந்த பாவனா பாடலில் ஒளிப்பதிவில் ஓரங்கட்டினாலும், அனைவரையும் கவர்ந்த‌தென்னவோ சரண்யா தான்.

" பட பட " பாடலும் கேட்க நன்றாக உள்ள ஒரு டெம்ப்ளேட் பாடல்.

சிங்கப்பூர் comex 2008

மீண்டும் ஒரு IT fair சிங்கப்பூர் சன்டெக்கில் 28.08.2008 முதல் 31.08.2008 வரை நடைபெறுகின்றது. வழக்கம்போல் 1,2,3,4 மற்றும் 6 வது வளாகங்களில் கம்பெனிகள் கடைவிரித்துள்ளனர். பொதுவாக இவை வெறும் Crowd-pullers தான். பெரிய தள்ளுபடியோ சலுகைகளோ எதிர்பார்க்க முடியாது. பல கம்பெனிகள் ஒரே இடத்தில் குவிந்திருப்பதால், தேர்ந்தெடுக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆப்பிள் தனது ஐபாட்‍களுக்கு 20% கழிவு தரப்போவதாக அறிவித்துள்ளது. (கடை எண்கள்: 8108,8236,6138)

ஜி.பி.எஸ் சமாச்சாரங்கள்(சிங்கப்பூருக்கு சுத்தமாக தேவை இல்லாத ஒன்று) இம்முறை பல சலுகைகளுடன் கிடைக்கும் என்று நினைக்கிறேன். HP-யில் 499$ க்கும் MIO-வில் 268$க்கும் கிடைக்கின்றது.

லேப்டாப்புகளை பொருத்தவரை லெனோவோ நிறைய தள்ளுபடியில் கிடைக்கின்றது. மற்ற கம்பெனிகளும் இன்னும் சில நாட்களில் நிறைய சலு்கைகளுடன் கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளன.

கேமிராக்களும் குவிந்து இருக்கின்றன. கிட்டத்தட்ட அனைத்து கம்பெனிகளும் கடை விரித்துள்ளன. விலை ஒன்றும் பெரிய மாற்றம் இல்லை.

பல கடைகள் பந்திக்கு முந்து கணக்கில் பல பொருட்களை தள்ளிவிடுகின்றனர். இவற்றை வாங்குவது அவ்வளவு எளிதல்ல.

பிரிண்டர் வாங்க இது நல்ல தருணம். நிறைய கம்பெனிகள் சலுகைகள் அளிக்கின்றன. Brother Printer வாங்கினால், கேர்ட்ரிட்ஜ் விலை குறைவு என்பதால், அதிக உபயோகங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஸ்கானர்கள் மற்றும் பிரின்டர்கள் சேர்ந்த ஆல்‍ இன் ஒன் வகை வாங்கச்செல்பவர்கள், ஸ்கானர் வெளியில் அமைந்தவாறு இருப்பவற்றை வாங்குவது நல்லது.

iSmart கம்பெனி எக்ஸ்டெர்னல் ஹார்ட்டிஸ்க் போன்ற பொருட்களை நிறைய தள்ளுபடியில் தருவதாக தெரிகின்றது. கடை எண் B6438

Ovation கம்பெனியும் நிறைய தள்ளுபடி விலையில் பொருட்களை வழங்குவதாக தெரிகின்றது. உதாரணம்: 320 ஜிபி 2.5" எக்ஸ்டெர்னல் ஹார்ட்டிஸ்க் விலை 125$. கடை எண் 6448

தகவல் உபயம்: The Strait Times/28.08.2008

சிம்லிம் தான் நம்ம பேட்டை என்பவர்களுக்கு இது ஒன்றும் பெரிய வித்தியாசத்தை பார்க்கமுடியாது :)

சிங்கப்பூரின் மக்கள்தொகையில் கால்வாசிப்பேர் வந்து செல்ல வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே கூட்டம் காட்டுத்தனமாக வர வாய்ப்பிருக்கின்றது.

சிங்கப்பூரின் முதன்மை பல்கலைக்கழகங்களில் ஒன்றான Nanyang Technical University(NTU) -கு திரு. அப்துல்கலாம் 26.08.2008 அன்று வருகை புரிந்தார். அங்கு வந்த அவரை மாணவ மாணவியர் சூழ்ந்து முற்றுகையிட்டனர். இதுபோன்ற சம்பவங்களை அடிக்கடி சந்திக்காத காவல்துறை கடைசியில் செல்லமாக கூட்டத்தைக்கலைத்தனர்.பல்கலைகழக மாணவ மாணவிகள் மற்றுமன்றி ஏராளமான பொதுமக்களும்(நான் இந்த Category) இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சிங்கப்பூர் அதிபர் எஸ் ஆர் நாதன் தலைமை தாங்கினார்.

கலாம் உட்பட மேலும் 3 பேருக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. கலாம் மற்றும் Professor Yang Chen Ning, Nobel Laureate in Physics, 1957-க்கு Degree of Doctor of Engineering (honoris causa) பட்டமும். Professor Chua Nam Hai, Andrew W. Mellon Professor and Head, Laboratory of Plant Molecular Biology at the Rockefeller University, Professor Jose Luis Encarnacao, Fraunhofer Institute for Computer Graphics - க்கு Degree of Doctor of Science (honoris causa) பட்டமும் அளிக்கப்பட்டன. ஆனால் கலாமுக்கு மட்டும் சிறப்பு விழா எடுத்து சிறப்பித்தது அரசு :) .


கலாம் வழக்கம் போல் எளிமையில் கவர்ந்தார். குழந்தைத்தனமான அவரது சிரிப்பு, அட்டகாசம்.

கலாமை வரவேற்றுப்பேசியவர். கலாம் தான் தனக்கு ரோல்மாடல் என்று சொல்ல, அரங்கம் அதிர்ந்தது.

கலாம் பட்டத்தை ஏற்றுவிட்டு உடனே இருக்கைக்கு உட்காரச்சென்றார். ஆனால் உடனிருந்த இன்னொருவர், கலாமின் கையைப்பிடித்து மேடைக்கு நடுவில் புகைப்படக்காரர்களுக்காக நிறுத்தினார். கலாம் நாக்கை வெளியில் நீட்டி வெகுளித்தனமாக சிரித்ததை அரங்கில் வைக்கப்பட்டிருந்த ப்ரொஜெக்டர் வழியே பெரிதாக்கி காட்ட, அனைவரும் அவரது நகைப்பை ரசித்து கைதட்டினர்.

இந்தியப்பெண்கள் பலபேர் சேலையில் வந்திருந்தது நெகிழ்ச்சியாக இருந்தது. வரும்போது ஒரு தம்பதி கலாம் பார்த்துவிட்டு வந்ததை பெருமையோடு வீட்டிற்கு ஃபோன் செய்து பேசியது மற்றுமொரு நெகிழ்ச்சியான தருணம்.

ஓவர் டூ கலாம்.
கலாம் எடுத்த எடுப்பிலேயே தன்னைப்பற்றி சில கதைகள் சொல்லப்போவதாக கூறி ஆரம்பித்தார்.
அவர் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்தபோது Lowlevel attack aircraft project
செய்தபோது இவரது டீம் செய்த முதல் படி, புரபோசர் ஸ்ரீனிவாசனின் கவனத்தை ஈர்க்காத‌தால், ஸ்ரீனிவாசன் கலாமுக்கு 3 நாட்கள் அவகாசம் கொடுத்து முடித்துத்தரச்சொன்னாராம். இதை சொல்லிக்கொண்டு இருந்த நேரத்தில் அருமையான நகைச்சுவை ஒன்றை எடுத்து விட்டார்.

Quotes of what Kalam said,
"Sreenivasan told me, 'Look youngman', remeber it was in 1954 , 'you have to finish this project before monday otherwise your scholoship will be cut' "

பின்னர் கலாம் காட்டுத்தனமாக உழைத்து அதை வெற்றிப்பாதையில் அழைத்துச்சென்றபோது ஸ்ரீனிவாசன் அதை பாராட்டியதையும் நினைவுகூர்ந்தார்.

வெற்றியை பற்றி சொல்லும்போது அடக்கி வாசித்தது குறிப்பிடத்தக்கது.

கலாம், 21ம் நூற்றாண்டில் பல்கலைக்கழகங்கள் உயர் தொழ்ற்நுட்ப உலகில் நல்ல குடிமகன்களை உருவாக்குவதில் எப்படி பங்களிக்கவேண்டும் என்பது பற்றி கூறினார்.

நாட்டின் தலைவர்களிடம் கல்வியின் பங்கு பற்றியும், கல்வியில்லாத நாட்டுத்தலைவரால் பிரச்சினைகளை திறம்பட கையாளும் திறம் குறைவு என்றும் கூறினார்.

கண்டுபிடிப்புகளுக்கு திறமையாகவும், எப்போதும் சிந்திக்கும் மனமும் உந்துகோளும் தேவை என்றார்.

சிங்கப்பூரின் கல்வி தரத்தை பாராட்டிப்பேசினார்.

கட்டண உயர்வுகளையும் அதை சமாளிக்க வேண்டிய உதவிகளையும் பற்றிக்குறிப்பிட்டார்.

NTU தற்சமயம் கலந்துகொண்டிருக்கும் முக்கிய ப்ராஜெக்டுகள் பற்றியும் சுருக்கமாக எடுத்துரைத்தார்.

ஆக சிங்கப்பூரிலும் கலக்கினார் தலைவர்.

நான் படித்த புனித வளனார் மேல்நிலை பள்ளி(மெயின்) விளையாட்டிற்கு பெயர் போன பள்ளி. நான் 1ம் வகுப்பு சேர்ந்த போதே(1989) பெரிய மைதானம் இருந்தது. சில வருடங்களில் அங்கு கேலரி கட்டப்பட்டது. விளையாட்டையும் எங்கள் பள்ளியையும் பிரித்துப்பார்ப்பதென்பது இயலாத காரியம்.

அந்த மைதானம் எத்தனை வியர்வைத்துளிகளையும் இரத்ததுளிகளையும் சந்தித்திருக்கும் என்பது அங்கு படித்து வளர்ந்தவர்களுக்குத்தான் புரியும். விளையாட்டை படிப்பாகவும், படிப்பை விளையாட்டாய் கொண்டவர்களும் காணப்படும் பகுதி அது.

நாளடைவில்(வருடடைவில்) மைதானத்தில் அத்லெட் ட்ராக் போடப்பட்டு அங்கு கருப்பு நிற மண்ணால் நிரப்பப்பட்டது. அன்று ஆரம்பித்த‌து எங்கள் மைதான மோகம். அந்த மண் பற்றி பல கதைகள் புழங்க ஆரம்பித்தன.

கதைகள் எங்கள் பள்ளிக்கு புதிது அல்ல. ஹாஸ்டல் மற்றும் போர்டிங் பயல்கள் கிளப்பிவிடும் கதைகள் ஒவ்வொருவரிடம் மாறி சென்று ஒரு வித்தியாசமான பரிமாணத்தை தொடும். கழிவறைக்குழியில் இருந்து கை வந்த கதை மிகப்பிரசித்தம்.

அந்த மண் பற்றிய கதைகளுக்கு அளவே இல்லை. அந்த மண் ஃபாரீன் மண் முதல் வடநாட்டு கரிசல் மண் வரை பல ஊகங்கள் இருந்தன. அந்த மண்ணை ஒரு கைப்பிடியாவது வீட்டுக்கு கொண்டு செல்லாத பயல்கள் இருக்க முடியாது. அதிலும் அந்த மண்ணில் காலைத்தேய்த்தால் ஷூ பாலிஷாகவும் இருப்பதும் சீக்கிரத்திலேயே கண்டறியப்பட்டது.

கால் முழுக்க கருப்பாக அனைவரும் விளையாட்டு வீரராக விரும்பினோம். அப்போது வெள்ளை சட்டையும் கருப்பாக, பள்ளியில் விளையாடுவது வீட்டுக்கும் தெரிந்து உதையும் வாங்கிக்கொண்டு இருந்தோம்.

அந்த மைதானத்தில் இன்னும் சில ஆண்டுகளில், ஒரு ஒலிம்பிக் சிலை கட்டப்பட்டது(பார்சிலோனா ஒலிம்பிக்கை ஒட்டி என்று நினைவு). அதற்கும் ஊகங்கள் குறைவில்லாமல் ஆரம்பித்தன.

அடுத்த ஒலிம்பிக் நம்ம மைதானத்தில் தான் நடைபெறப்போகிறது என்று ஆரம்பித்துவைத்தனர் பள்ளி செல்வங்கள்(ஒரு பாதிரியார் இப்படி தான் கூப்பிடுவார், ஆனால் விடைத்தாள் கொடுக்கும் போது அடி பின்னி எடுப்பார்).

இப்படி ஒரு ஊகம் ஆரம்பிக்க காரணங்களும் சற்று வலுவாகத்தான் இருந்தன. ஒவ்வொரு விளையாட்டுக்கும் கிட்டத்தட்ட கீழ்க்கண்ட அளவு விளையாட்டரங்கள் இருந்தன.
Hockey: 2
Football: 3
Basket ball: 5
Volleyball, tennis courts: 5
மேலும் நமக்கு பழக்கப்பட்ட மிகப்பெரிய மைதானம்.

பதிவு சற்று பெரிதாகிவிட்டதால், அடுத்த பதிவில் தொடர்கிறேன்....

டிஸ்கி:
அதிக எதிர்பார்ப்பின்றி என்னைப்போல் தியேட்டர் மாறி நுழைந்து பாருங்கள்.

கோலாலம்பூர் ட்வின் டவர்ஸில் டார்க் நைட் படம் பார்க்க சென்ற நான், கடைசி நேரத்தில் குட்டியான‌ தலைவரின் கட் அவுட் பார்த்தபின் தான் தெரிய வந்தது குசேலன் படம் அங்கு ஓடிக்கொண்டிருப்பது. சரி தலைவர் படத்தை முதல் நாளே பார்த்து பீற்றிக்கொள்ளலாம் என்று நுழைந்தும் விட்டேன்.

டிக்கெட்டின் போது,எந்த சீட் வேண்டும் என்று டிக்கெட் விற்ற பெண் நக்கலாக கேட்டார். பார்த்தால் முழுக்க எல்லா சீட்களும் நீல நிறத்தில் இருந்தன. போச்சுடா டிக்கெட் இல்லை போல என்று நினைத்து கவலைப்படலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது கடைசி வரிசையில் ஆச்சர்யமாக ஒரு 5 சீட் காலியாக இருக்க(ஆரஞ்சு நிறம்) பிடித்தேன் ஒரு சீட்டை.

உள்ளே நுழைந்ததும் தான் தெரிந்தது, மொத்தமே தியேட்டரில் 5 பேர் தான். சூப்பரு என்று நினைத்த படி இருக்கும் போது இன்னொரு 3 ஜோடிகள் தியேட்டரின் மூலை சீட்டுகளுக்கு அடம் பிடித்து செல்ல, சரி இவர்கள் படம் பார்க்கப்போவதில்லை என்று தீர்மானித்துவிட்டபடியால் இன்னமும் மொத்த கவுண்ட் 5 தான்.

சரி என்று உட்கார்ந்தால் பசுபதியும் ஆன்ட்டியும் மன்னிக்கவும் மீனாவும் அவர்களின் இரு குழந்தைகளும் ஆடிப்பாடி கொஞ்சம் வருத்தப்பட்டுக்கொண்டு அப்படியே போய்க்கொண்டிருந்தது.

இந்த இடத்தில் குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம், கிராஃபிக்ஸ். தசாவதாரத்தின் ஆரம்ப காட்சிகளை விட நேர்த்தியான முறையில் செய்யப்பட்டிருந்தது. சிறுபிள்ளைத்தனமாக ஒரு அருவியை செட் செய்து இருந்தாலும், நேர்த்தி இருந்தது. கிட்டத்தட்ட எல்லா காட்சிகளும் டிஜிட்டல் கலர் கரெக்ஷன் அல்லது ஃபில்டர் முறையில் ரீடச் செய்யப்பட்டிருக்கின்றன. வேறு வழி, காசை செலவு செய்யவேண்டுமே.

சினிமா சினிமா பாட்டு ஏனோ ஏடிஎம் படத்தின் துவக்கப்பாட்டு எல்லாப்புகழும் பாட்டை நினைவுபடுத்தியது.

பசுபதி தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார், இருந்தாலும் விருமாண்டி, மும்பை எக்ஸ்ப்ரஸ் போல பலவித நடிப்பை காட்ட வழியில்லை.

சந்தானமும், வடிவேலுவும் படத்தில் உள்ளேன் ஐயா.

ஜி.வி.பிரகாஷின் முதிர்ச்சியின்மை பாடல்களில் தென்பட்டாலும் பாடல்கள் ஒன்றும் அவ்வளவு மோசமில்லை. ஆனால் படமாக்கப்பட்ட விதம் மிகவும் மட்டரக‌ம். நான் இடையில் சில பாடல்களுக்கு தூங்கித்தொலைந்தேன்.

இங்குள்ள தியேட்டர்களில் இடைவேளை விடப்படுவதில்லை, எனவே எல்லா பாடல்களுக்கும் கூட இருந்த 5 பேரும் வெளியேறி என்னை பயத்தில் தள்ளினர்.

ரஜினி பேய் படங்களில் தாராளமாக நடிக்கலாம். அதுவும் தலை மட்டும் வெட்டப்பட்ட காட்சியில் அய்யோ என்ன ஒரு கொடூரமாக இருக்கிறார்.

படத்தில் சிறந்த நடிப்பு நயன்தாராவிடம் இருந்து வெளிப்பட்டது. இங்கே வெளிப்பட்டது என்பது single meaning-ல் பாவிக்கப்படுகிறது. ஒரு நடிகையாக வாழ்ந்திருக்கிறார்.

சினேகாவும் குஷ்புவும் ஒரு பாடலில் ஒரு காட்சிக்கு வருகிறார்கள். இருவரும் பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள். இதை குஷ்புவுக்கான பாராட்டாகவோ அல்லது சினேகாவுக்கான அர்ச்சனையாகவோ எடுத்துக்கொள்வது உங்கள் கையில்/கண்ணில்.

மற்றபடி நிறைய பேர் மொக்கையாக படத்தில் வந்துபோகின்றனர். அவர்கள் பெயர்களை எழுத ஆரம்பித்து உண்மையாருக்கு போட்டியாக விரும்பவில்லை.

நான் ரஜினியை இந்த படத்தில் எதிர்பார்க்கவே இல்லை, எனவே எதிர்பார்ப்பும் இல்லை. ஏதோ ஷூட்டிங் பார்க்க வந்து படத்தில் குதித்தது போல் காணப்படுகின்றார்.(இந்த வரி உபயம்: ஆனந்தவிகடன் மௌனம் பேசியதே விமர்சனம்)

ரஜினியின் க்ளோஸப் காட்சிகளில், ஒட்டப்பட்ட அவரது உதடுகள் தசாவதாரத்தை நினைவூட்டுகின்றன.

மொத்ததில் நல்ல ஒரு சென்டிமென்ட் படம். சத்தியமாக ரஜினி படம் அல்ல. பி.வாசு படம்.
எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி ஒரு முறை பார்க்கலாம்.

எல்லா தரப்பையும் திருப்திபடுத்த முயற்சி செய்துள்ள பி.வாசுவின் முயற்சி தோல்வி அடைந்தாலும், குப்பை என்றெல்லாம் அவசரப்பட்டு சொல்லிவிட முடியாது.

இதை எழுத உட்காரும் முன், இருக்கையின் அடியில் ஏதும் குண்டு சமாச்சாரங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து உட்காரவேண்டி இருக்கிறது.

இந்த தீவிரவாதக்கிறுக்கு பசங்க, என்னதுக்குன்னே தெரியாம அங்க இங்க குண்டு வைத்துவிட்டு சென்றுவிடுகின்றனர்.

இந்த நாய்கள் குண்டு வைத்தால் மட்டும் என்ன பெரியதாக செய்துவிட முடியும்?

மக்களை கொல்வதால் என்ன பயன் கிடைக்கப்போகிறது?

போகிற வழிக்கு பல மூட்டை பாவங்கள்(?) தான் கிடைக்கப்போகின்றது.

முட்டாள்தனமான ஒரு சித்தாந்தத்தில் வாழும் மூடர்கள்.

டேய் தீவிரவாத திருட்டுப்பசங்களா, உங்களால ஒரு **** **** முடியாது

==============================
==============================

தமிழ்நாடு சந்தோஷமாக இருக்கின்றது.

ஆள்பவர் குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பதால், மக்களுக்கும் அது தொற்றியிருக்கும் என்று நம்புகிறேன்.

மற்றபடி விலைவாசி, பொருளாதார விஷயங்களை யாராவது கவனித்துக்கொள்ளட்டும் என்று, பேருந்தில் ஜன்னல் வழியே கர்ச்சீஃப் போட்டு இடம் பிடிப்பதில் பிசியாக உள்ளனர் பொதுஜனத்தினர். இடம் கிடைத்தவரும் சந்தோஷப்படுகின்றார். இடம் கிடைக்காமல் தொங்கும் வாலிபனும் சந்தோஷமாக உள்ளான்.

முக்கிய எதிர்க்கட்சி தலைவர் திடீரென்று அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால், அவரும் சந்தோஷமாக உள்ளார்.

இவர் இப்படி சந்தோஷமாக உள்ளதால், அடுத்த இடத்தை பிடிக்க போராடும் மற்ற கட்சித்தலைவர்களும் தொண்டர்களும் சந்தோஷமாக உள்ளனர்.

நம்ம எம்.பிக்களும் சந்தோஷமாக உள்ளனர் மற்ற மாநிலங்கள் போல அதிக காசு பார்க்கமுடியாமல் நேர்மையாய் ஓட்டு போட்டதற்கு

குசேலன் வருவதால் ரஜினி ரசிகர்களை விட தியேட்டர் முதலாளிகளும் சந்தோஷமாய் உள்ளனர்.

எல்லோரும் சந்தோஷமா இருங்கப்பா.

Library Book Sale 2008 சிங்கையில் Expo அரங்கு 4ல் இன்று(18/07/2008) நாளை(19/07/2008) மற்றும் நாளை மறுநாள்(20/07/2008) நடைபெறுகின்றது.

ஆங்கிலம், தமிழ், சைனீஸ் மற்றும் மலாய் மொழியிலான பழைய நூலகப்புத்தகங்கள் மலிவு(மெய்யாலுமே) விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் புத்தகங்கள் ஒவ்வொன்றும் 1$ மட்டுமே. பல நல்ல புத்தகங்கள் காலையிலேயே தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டன. இருந்தும் உங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்துப்பார்க்கலாம்.

தமிழில் பெரும்பாலும் மணிமேகலை பிரசுரத்தின் சமையல் புத்தக வகையறாக்கள் அதிகம் உள்ளன.

ஜெயகாந்தன், இந்திரா சௌந்தரராஜன், அகிலன் நாவல்கள், சில சுஜாதா நாவல்கள், சில கல்கி வரலாற்று நூல் பாகங்கள்(குறிப்பு:அனைத்து பாகங்களும் ஒரு சேர கிடைப்பதில்லை) நிறைய சிறுகதை புத்தகள் என் கண்ணில் பட்டன.

ஆங்கிலப்புத்தகங்கள் 1$ 2$ விலைகளில் கிடைக்கின்றன. Fiction மற்றும் Non fiction புத்தகங்கள் சிறுவர் மற்றும் அனைத்து வயதினருக்கான புத்தகங்கள் கிடைக்கின்றன.

நான் இன்று(வெள்ளிக்கிழமை) காலை சென்றபோது கூட்டம் அப்படி ஒன்றும் அதிகம் இல்லை.10 நிமிடங்களில் பில் போட்டு வாங்கிவர முடிந்தது. அதற்கேற்றார்போல் வழக்கம்போல் நிறைய கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. க்ரெடிட் கார்ட் அனுமதிக்கபடுவதில்லை.

இதைத்தான் வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்ல வேண்டாம். கட்டாயம் ஏமாற நேரிடும். சும்மா செல்லுங்கள் கண்ணில் கண்டதை அள்ளுங்கள்.

SingPost வீட்டில் டெலிவரி செய்கிறது. எனவே எடை பற்றி கவலைப்படாமல் வாங்குங்கள்.

கவிதைபவன்(1) - பேருந்து

இடம் (1)

இந்த இடமில்லா பேருந்தில் ஏறுகிறாரே இந்த பெரியவர்
எங்கே உட்காருவாரோ!
சரி நான் கொஞ்சம் தூங்கிக்கொள்கிறேன்.
நான் இறங்க நேரம் இருக்கிறது

இடம் (2)

எனக்கும் தான் வயதாகிக்கொண்டிருக்கிறது.
கால் வலி மூட்டு வலி வருகிறது.
10வது படிக்கும் பையன் இருக்கிறான்
நான் ஏன் இந்த பெரியவருக்கு இடம் தர வேண்டும்?

நோக்கம்


பக்கவாட்டு சீட்டில்
துறுதுறு குழந்தை
அழகாய் சிரிக்கின்றது
கவனத்தை பலமாய் ஈர்க்கின்றது
சேலை விலகிய அதன் அம்மாவை விட‌


====================================================

ஹைக்கூ

தாகம்

பேருந்துக்கு வெளியில்

நல்ல வெயில்

பசுவின் நாக்கில் வழிகிறது உமிழ்நீர்


முடி

கூட்டமில்லா பேருந்தில்

எல்லார் காலிலும் மிதிபடுகின்றது

ஒரு நீள முடி

என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் அரசியல்தொழிலதிபர்கள் (அரசியல்வாதிகள்)?

மக்களுக்கு சேவை செய்ய தங்களுக்குள் அடித்துக்கொள்வோரை வேறெப்படி சொல்வது.

தமிழக மீனவர்களை சுட்டுவீழ்த்திக்கொண்டிருக்கிறது ஒரு படை, அதை எதிர்க்க துப்பில்லை.
மனித உயிர் என்ன அவ்வளவு மலிவா?

சேது சமுத்திரதிட்டத்திற்கு உயிரையும் தர தயாராய் இருக்கும் சில தலைவர்கள் இவ்விஷயத்தை சிந்திக்க இவ்வளவு நாள் எடுத்துக்கொள்வது வினோதமாய் உள்ளது.

சிலர் தமிழகத்தை மறந்து கோடை வாசஸ்தலத்தில் குடிகொண்டுள்ளனர். எனக்கு சத்தியமாக புரியவில்லை. என்ன நடக்கிறது இங்கே.

கொஞ்சம் தெளிவாக யோசிக்க அரசியல்வாதிகளே இல்லையா?

குடும்ப நலனை யோசித்தபின், கேபிள் பிரச்சினைகளை பார்த்தபின், கதை வசனம் எழுதியபின், விழாக்களுக்கு சென்று வந்தபின், கூட்டணி அரசியல் நடத்தியபின் சற்று நேரம் இருந்தால் மக்களை கவனியுங்கள்

17ம் தேதி கூட்டம் கூடுகின்றனர். பார்க்கலாம் என்ன செய்வார்கள் என்று?


கோபங்கள் தொடரும்.

துரத்தல்

ஒவ்வொரு முறையும் துர‌த்தப்படுகின்றேன்.
உச்சகட்டத்தில் கூட ஒருமுறை

தடுப்புகளற்ற வெளியில் கூட‌
வழிதெரியாதவாறு துரத்தப்படுகின்றேன்

புள்ளியை நோக்கி வட்டப்பாதையில் ஓடும் நான்
புள்ளியடையும் வழியறிய யாராலோ அல்லது எவரெவராலோ துரத்தப்படுகின்றேன்

துரத்த
ல் நிற்கப்போவதில்லை
என் ஓட்டமும் நிற்கப்போவதில்லை

ஏனெனில் நானும் எனக்கு முன் ஒன்றை துரத்திச்செல்கின்றேன்

ரகசியம்

நான் போன ஜென்மத்தில் என்னிடம் உரைத்த ரகசியத்தை
என் அடுத்த ஜென்மத்திடம் உரைக்கச்சென்றுகொண்டிருக்கின்றேன்

ஒவ்வொரு ஜென்மமும் இப்படி ஒரு தொடரோட்டமாய் செல்கின்றது
ரகசியத்தின் மொழியும், நடையும்
ஏன் சில சமயங்களில் ரகசியமுமே மாறிப்போகின்றன இந்த தொடரில்

எது எப்படியோ 7:10க்குள் கொண்டு சேர்த்துவிட வேண்டும்
இத்தொடரை இங்கேயே அறுத்துவிடலாம் என்று
பலநாள் யோசித்தாகிவிட்டது

இனி அதற்கு நேரமில்லை

செல்லவேண்டும் என்றானபின் இடம் முக்கியமில்லை
வேகம் தான் முக்கியம்

என்னதான் வேகமாய் சென்றாலும்
ரகசியம் கடைசி வரை பரிமாறிக்கொண்டே செல்லப்போகிறது
யாருக்கும் பயனின்றி.

இந்தா பெற்றுக்கொள் உன் ரகசியத்தை

"This birth sucks"

வேலை

நக்கித்தான் பிழைக்கிறேன்
நாயாக இருந்தாலும் மனிதனாக‌ இருந்தாலும்

முன் அனுபவம் இருந்தால் ஒருவகை
இல்லாவிட்டால் ஒருவகை

பெண்ணிடம் ஒருவகை
ஆணிடம் ஒருவகை

இருப்பது போதாத போது ஒருவகை
இருப்பது இருந்தாலும் ஒருவகை

நக்குவதென்று ஆனபின்
நக்கித்துணிக கருமம்

"சிக்னல் வந்துருக்கு லேன்கோ", கத்திக்கொண்டு வருகின்றான் தூர்.

பல ஆண்டுகளுக்கு முன் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ரேடியோ அலைகளுக்கு பதில் வந்திருக்கின்றது.

தூரும் லேன்கோவும் வளர்ந்துவரும் ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் அலுவலகத்தில் லேன்கோவின் உதவியாளனாக வேலை செய்கிறான் தூர்.

"என்னால நம்பவே முடியல தூர், பணத்த விரயம் பண்ணின ஆராய்ச்சிக்கு இப்போ பலன் கிடைச்சிருக்கா?"

"இருக்கலாம். ஆனா இதை decipher செய்ய இன்னும் எவ்வளவு காலம் ஆகும்னு தெரியலயே"

"ஏற்கனவே funds நிறுத்தப்போறதா சொல்லிருக்குற நேரத்துல இது கண்டிப்பா நல்ல செய்தி தான் தூர்"

"சரி இப்போ அடுத்த ஸ்டெப் என்ன?"

"நாமளே decipher பண்ணி பார்க்கலாம். நல்ல இன்ஃபர்மேஷன் கிடைச்சா வேலைய ரிஸைன் பண்ணிட்டு NASA ல போய் ஜாய்ன் பண்ணிடலாம்"

"இல்லைனா?"

"இல்லைனா, வெறும் ரேடியோ நாய்ஸா இருக்கும், ப்ரஸ்மீட்டுக்கு சொல்லிவிடுவோம். புகழ், சூப்பர் போதை"

"லேன்கோ இவ்வளவு தூரம் பேச விட்டது தப்பு, நானும் உனக்கு குறைந்தவன் இல்லை. வா decipher பண்ண ஆரம்பிக்கலாம்."

"எங்க இருந்து ஆரம்பிக்கலாம் தூர்?"

"ஒரு ரேடியோ ரிசீவர்ல போட்டு கேட்டுப்பார்க்கலாம்"

"தூர், உன் பேருக்கேற்ற மாதிரி தூரத்துலதான்டா இருக்க. அந்த சிக்னல ப்ராசசர்ல கொடு. waveform பார்க்கலாம்"

"லேன்கோ, இது வெறும் மாடுலேட்டட் ரேடியோ வேவ்ஸ் மாதிரி இருக்கு"

அறைக்கதவை தள்ளிக்கொண்டு வருகிறாள் தரி.

தரியும் இவர்களுடன் வேலை செய்யும் பெண். விண்வெளியையும் சமயத்தில் லேன்கோவையும் ஆராய்ச்சி செய்பவள்

"என்ன நடக்குது இங்க? கொஞ்சம் நேரம் நிம்மதியா நியூஸ் கேக்க விடுறீங்களா? கேணத்தனமா ரேடியோ ஃப்ரீக்வென்சில உளறிக்கிட்டு இருக்கீங்க‌"

தூரும் லேன்கோவும் தங்களை ஒருவர் ஒருவர் பார்த்துக்கொண்டு தரியிடம் நடந்ததை விளக்குகின்றனர்.
மூவரும் ஆர்வத்துடன் சிக்னல் ப்ராசசரின் ரேடியோ டீமாடுலேட்டரில் கேட்கிறார்கள்.

"வணக்கம். வேறு கிரகத்தில் இருக்கும் உங்களுக்கு எங்கள் மொழியில் செய்தி அனுப்புவது சிறுபிள்ளைத்தனமானது. இருந்தாலும் சில சமயங்களில் பல கடின விஷயங்களின் விடை மிகச்சுலபமானதாக இருக்கும் என்ற சித்தாந்தத்தின் நம்பிக்கையில் இதை அனுப்புகின்றோம்

இடம்: உலகம், சூரியக்குடும்பத்தின் சச்சரவுப்பிள்ளை
நாள்: அழிவிற்கு சில காலம் முன் அதாவது எங்கள் மத கணக்குப்படி கி.பி. 2045 அறிவியல் கணக்குப்படி 50 கோடியே 45 லட்சத்து 35ம் வருடம்

நான் இளங்கோ என்னுடன் என் நண்பன், அலுவலக பதிவின்படி உதவியாளன் பகதூர், என் அறிவியல் காதலி சுந்தரி.
மனிதர்கள் என்று எங்களை நாங்களே அழைத்துக்கொள்ளும் நாங்கள், நாங்கள் வசிக்கும் உலகத்தை எங்கள் பசிக்கு உணவாக்கிக்கொண்டோம்.
இப்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றோம். ஆகவேதான் நாங்கள் இருந்தோம் என்பதற்கான கடைசி அத்தாட்சியாய், எங்களால் உருவாக்கப்பட்ட அழியா அலையில் இத்தகவலை அனுப்புகின்றோம்.
இதைத்தொடர்வது எங்களைப்பற்றிய தகவல்கள்........
.....
......
இறுதியாக,
தகுதியுள்ளது தப்பிப்பிழைக்கும் என்று கண்டறிந்த எங்களாலேயே தப்பிப்பிழைக்க முடியவில்லை.
உங்கள் தகுதியை காப்பாற்றிக்கொள்ளுங்கள்"

"தூர் இதைப்பற்றி என்ன நினைக்கிறாய்?"

"ஆச்சர்யமாக இருக்கிறது என்பது கிளிஷேவான வார்த்தைதான் இருந்தாலும் இச்சமயத்திற்கு பொருந்துகின்றது"

"என்ன லேன்கோ என்ன ஆச்சு உன் NASA ப்ளான்?"

"இல்லடா, NASA கிரகத்திற்கு போறதவிட நம்ம ல‌கம் கிரகத்தை காப்பாற்றியாகணும்"

"என்ன சொல்ற
லேன்கோ? புரியல..‌"

"என்ன தூர், இன்னுமா லேன்கோ சொல்றது புரியல? இது நம்மளோட 2040வது வ‌ருடம். இப்போ நாம சிக்னல்ல கேட்ட உலகம்ங்கர கிரகத்துக்கும் நம்ம லகம் கிரகத்துக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு. கிட்டத்தட்ட அந்த கிரகத்தோட பிரதிபலிப்பு மாதிரி தான் நம்ம கிரகம். அடுத்த 5 வருடங்கள் நம்மோட கடைசி வருடங்களா இருக்கலாம்"

"இப்போ புரியுது லேன்கோ, இந்த கிரகம் ஏன் நம்ம கண்ல படலைனு. இந்த கிரகமே இப்போது இல்லை", என்றான் தூர்.

"கரெக்ட். இந்த சிக்னல் ரொம்ப காலம் முன்னாடி நமக்கு அனுப்பிருக்காங்க. ஸாரி, நமக்குனு சொல்லமுடியாது, அனுப்பிருக்காங்க. இந்த விஷயத்தை எப்படியாவது நம்ம லக மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்த்துடணும். நம்மை காப்பாற்றிக்கணும்
தரி" என்றான் லேன்கோ.

"கண்டிப்பா" என்றாள் தரி.

அவரவர் வழியில் யோசித்துக்கொண்டே செல்ல‌ அந்த ரேடியோ டீமாடுலேட்டர் கருவியிலிருந்து "ஆ" என்ற சத்தம் கேட்டது

தமிழ்மணத்தில் கொட்டை தின்று பழம் போட்டவர்கள், இதற்கு மேல் படிக்க தேவை இருக்காது.

இப்பதிவில் தமிழ்மணத்தில் திரைப்பட விமர்சனங்கள் எப்படி முன்வைக்கப்படுகின்றன மற்றும் அதை எப்படி எதிர்கொள்ளலாம் என்பது பற்றி பார்ப்போம்.

விமர்சனங்கள் கீழ்க்கண்ட வகைப்படுகின்றன:
1) மொக்கை படம் கிடைத்தால் அடித்து துவம்சம் செய்வது
2) கண்களை மூடிக்கொண்டு படத்தை புகழ்வது/இகழ்வது
3) நல்ல படமாக இருந்தாலும் கூபாவில் இருக்கும் சிறிய இயக்குனர் டவுசரோ டர்தாழ் கூட இதை விட நன்றாக எடுப்பார் என்று கூறுவது
4) நல்ல படத்தில் உள்ள குறைகளை லென்ஸ் வைத்து பெரிதாக்கி பார்ப்பது
5) விமர்சனம் செய்யும் நோக்கத்துடன் படத்துக்கு செல்லும் வகையினரின் விமர்சனங்கள்
6) பின்நவீனத்துவ ஆராய்ச்சி குரூப்.
7) நானும் படம் பார்த்தேன் வகை

இதை எதிர்கொள்வது எப்படி?

முதலில் உங்கள் விருப்ப நாயகன்/நாயகி நடித்த படமா?
விமர்சனம் படிக்காமல் படம் பார்த்துவிடுங்கள், பின்னர் வந்து நாமும் விமர்சனம் போட்டு இடுகையை சூடாக்கலாம்

படம் நல்ல படமோ என்று மனதிற்குள் காடை சொல்கின்றதா?
முதல் விமர்சனம் வந்துவிட்டதா? முதல் மற்றும் கடைசி வரிகளை படியுங்கள்
பல விமர்சனங்கள் வருகின்றனவா? தலைப்பை மட்டும் படியுங்கள்.
என்ன புக்மார்க் செய்ய யோசிக்கிறீர்களா? வேண்டாம். பொறுங்கள். அனைத்து விமர்சன‌ங்களையும் பதிவு செய்து ஒரு இடுகை வரும். அதை புக்மார்க் செய்யுங்கள்.

படத்தை போய் பாருங்கள். நன்றாக இருக்கின்றதா? தயவு செய்து அதை கெடுக்காமல் நல்ல பிள்ளை போல் புக்மார்க் செய்த விமர்சனங்களை மட்டும் படித்துக்கொண்டிருங்கள்.
நன்றாக இல்லையா? தொடரட்டும் உங்கள் பதிவுலக சேவை

படம் மட்டமான படம் என்று தோன்றுகின்றதா?
சும்மா புகுந்து விளையாடுங்க. எல்லா விமர்சனத்தையும் ஒரு வார்த்தை விடாம படிங்க. எழுத்துப்பிழையைக் கன்டரிந்து பின்னூட்டம் போடுவது மிக முக்கியம். கொஞ்சம் நேரத்தில் படம் பார்க்காமலே ஒரு இடுகை இடும் அளவிற்கு உங்கள் பட அறிவு உயர்ந்துவிடும்.

இது தான் சரியான சமயம். காலை 10 மணிக்கு படத்தை பற்றி ஒரு பதிவிடுங்கள். பின்னூட்ட மட்டுறுத்தலை சற்று நேரம் அணைத்து விட்டு படத்துக்கு செல்லுங்கள். இப்படத்தை இதை விட யாராலும் ரசிக்க முடியாத அளவிற்கு படம் பிடித்துப்போகும்.

படம் முடிந்ததா? ஒரு மோர் அல்லது லெமன் ஜூஸ் குடியுங்கள். ஹேங் ஓவரை சற்று குறைக்கும்.

வீட்டுக்கு வந்து தமிழ்மணத்தை திறந்துபாருங்கள். உங்கள் இடுகை சூடான இடுகை ஆகியிருக்கும். உங்கள் பதிவை திறந்து பாருங்கள். பல பின்னூட்ட அனானிகள் மட்டரகமாய் வந்திருக்கும். அனைத்தையும் அழித்துவிட்டு மற்றவற்றைப்பாருங்கள். கண்டிப்பாக உங்கள் இடுகையில் பின்நவீனத்துவம் பற்றி ஒரு பெரிய கதாகாலட்சேபமே நடந்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

படம் பற்றி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லையா?
லக்கிலுக் போன்றொரின் விமர்சனங்களை படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்.

ரொம்ப மொக்கை போடுகிறதா?
பழைய பட விமர்சனங்களை படித்துப்பாருங்கள். அதிலும் படத்தை பி.ஹெச்.டி செய்யும் அளவிற்கு இருக்கும் பதிவுகளை படித்துப்பாருங்கள். செம காமெடியாக இருக்கும்.

உன‌க்கேன் இவ்வளவு அக்கறை? ஊரில் யாருக்கும் இல்லாத அக்கறை?
நானே பாதிக்கப்பட்டேன், நானே பதிவிடுகிறேன்.

சந்திரமுகியில் கமலும் நயன்தாராவும் 'கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்' என்று பாடிக்கொண்டிருந்த காலை வேளையில் கண் விழித்தேன். என்ன நேரம் அதுக்குள்ள தூக்கம் வேண்டிக்கிடக்கு என்று பொண்டாட்டியின் வசவோடு நாள் துவங்கியது.

வெய்ட் வெய்ட்...

சந்திரமுகியில் கமலா? வாட் த ஹெக்? ஓ ஏதாச்சும் ரீமிக்ஸ் போட்டிருப்பான் போல..

"சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க‌, சாப்பாடு வாங்கிட்டு வரணும் ஹோட்டல்ல இருந்து.."
"சரி சரி இதோ வந்துடறேன்"

ஏதோ இடிக்குதே! வாங்க போங்கனு மரியாதை எல்லாம்... என்ன இது புதுசா இருக்கு?

ம்ஹூம் ம்ம்ஹூம் ம்ஹூம் ம்ம்ஹூம் ம்ம்ம்ஹூஹூம்....(கொஞ்ச நேரம் பாட்டோட ஹம்மிங்).
கமல் கூட நயன்தாரா ஜோடியும் நல்லாத்தான் இருக்கு. ஆனா அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சதே இல்லயே!!! என்ன நடக்குது இன்னைக்கு?

"ஏய்"
...
"ஏய்"
...."இங்க நான் கூப்பிட்டுகிட்டு இருக்குறது காதுல விழுதா இல்லையா?"
"விழுது விழுது, இதே வேலையா போச்சு உங்களுக்கு. குளிக்க போகும்போது துண்டு கூட இல்லாம போறது....இந்தாங்க துண்டு"
"அட இதுக்கு கூப்பிடலடி. சந்திரமுகி படத்துல யார் நடிச்சது?"
...
சே பாத்ரூம் வரைக்கும் வந்த பொண்டாட்டிகிட்ட இதை போயா கேட்பாங்க. நல்ல சான்ஸ், டைமிங் மிஸ் ஆகிடுச்சு :( இன்னும் 14 மணிநேரம் இருக்கு.

"என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை..."
"என்ன பாட்டு பாடறீங்களா?"
"சே சே இல்லடி. அப்ப‌டி எல்லாம் நீ பாட மாட்டியா? அதிருக்கட்டும் சந்திரமுகில யாரு நடிச்சது?"
"என்ன ஆச்சு காலையில இருந்து? ஒரே பாட்டுதான், நயன்தாராதான்... ப்ராஜெக்டுக்கு வீட்ல இருந்து சப்போர்ட் குடுத்ததெல்லாம் போதும். என்ன செய்யறீங்கனு தெரியல‌"
"அம்மா தாயே, எனக்கு நயன்தாரா கதைஎல்லாம் வேண்டாம். சந்திரமுகி பாட்டுக்கு கமல் ஆடிகிட்டு இருந்தானே காலையில, எப்படி?"
"இதென்ன கதையா இருக்கு. கமல் படத்துல கமல் இல்லாம பின்ன என்ன ரஜினியா?"
"உனக்கென்னடி ஆச்சு?"

"காலையிலயே சினிமா கதை எதுக்கு? சரவணபவன் போய் காடை பிரியாணி வாங்கிட்டு வாங்க‌"

"என்ன கடுப்பேத்தாதடி ப்ளீஸ். சரவணபவன்ல காடை பிரியாணி?"
"என்னங்க ஆச்சு உங்களுக்கு? இப்போ என்ன ப்ரச்சினை?"
"சரவணபவன்ல எப்போதிலிருந்து காடை போட ஆரம்பிச்சாங்க? அதுவும் காலையில‌"
"இதுக்கா இவ்வளவு அலம்பல் பண்ணினீங்க? எனக்கு என்னங்க தெரியும். எப்போ NV போட ஆரம்பிச்சாங்களோ அப்போ"
"ஏய், சரவணபவன் ஒரு வெஜிடேரியன் ஹோட்டல் டி"
"அச்சோ நீங்க சரவணபவனையும் முனியாண்டி விலாஸையும் குழப்பிக்கிறீங்க. முனியாண்டி தான் வெஜிடேரியன். சீக்கிரம் வாங்கிட்டு வாங்க எல்லா வீட்லயும் தூங்கிட்டாங்க‌"

இனியும் நான் கத்தவில்லை என்றால் கதையை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல முடியாது.
"என்ன நடக்குது காலையில இருந்து, சந்திரமுகியில ரஜினிக்கு பதிலா கமல் நடிக்கிறான், சரவண‌பவன் நான்வெஜிடேரியன் ஹோட்டல்னு சொல்ற, காலையில போய் தூங்கணும்னு சொல்ற. எனக்கு பைத்தியமா இல்லை உனக்கு பைத்தியமானு தெரியலயே?"

அந்த கடைசி வரியை நான் பேசியிருக்கக்கூடாது.

ஓவர் டூ கீழ்ப்பாக்கம்.

டாக்டர் என்று சொல்லப்பட்டு என்முன் உட்கார்ந்திருப்பவர் வக்கீல் போல் கருப்புகோட் அணிந்திருக்கிரார். இதைச்சொன்னால் நம்மை பைத்தியக்காரன் என்பார்கள்.
"இவருக்கு வந்துருக்க பிரச்சினை இப்போ பரவலா வந்துகிட்டு இருக்கு. IT field ‍ல இருக்கிறவர்களுக்கு இது அதிகமா தாக்குது. அவங்களா ஒரு virtual உலகத்துல வசிப்பாங்க. அவங்க நினைச்சிகிட்டு இருக்க உலகம்தான் கரெக்ட்னு சொல்லுவாங்க..............."

போதும்யா போதும்.

இதை விட எவனாலும் தெளிவா விளக்கமுடியாது.

"என்னங்க நீங்க கொஞ்ச நாள் ஆஃபீஸ்லாம் போகாதீங்க."
"சரி"
"நல்லா ரெஸ்ட் எடுத்துக்கங்க‌"
"சரி"
"என்னங்க சரியா பேசவேமாட்றீங்க? என்னை ஞாபகம் இருக்குல்ல?"
"ஞாபகம் இல்லாமலா... நீ என் பொண்டாட்டி"
"அய்யோ அய்யோ என் தலைஎழுத்து இப்படி ஆகிடுச்சே. தொட்டு தாலி கட்டின வப்பாட்டியை வாய் கூசாம பொண்டாட்டினு சொல்றாரே? ஏதாவது பொண்டாட்டி கிண்டாட்டி வச்சிகிட்டு இருக்கீங்களா எனக்கு தெரியாம?"
_____o0o______

அப்பாடா... ஒரு மாதிரியா ஒரு கதைங்கற பேர்ல ஒன்றை எழுதியாச்சு. ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும்னு தெரியலை. டிவியில வழக்கம் போல மொக்கை சீரியல் தானா?

"உலகத்த்த்தொலைக்காட்சிகளில் ம்ம்ம்முதன்முறையாஹ கமல் நயன்தாரா இணைந்து கலக்கிய சந்திரமு......."

சமீபத்தில் நிகழ்ந்த நிலந‌டுக்கத்தால் குழந்தை இழந்தவர்கள் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள அரசு சான்றளிக்கிறது என்ற செய்தி புதுமையாக இருந்தது. அது பற்றி நான் மேலும் சில தகவல்களை விக்கிபீடியா மூலம் அறிந்துகொண்டேன். அந்த விபரங்கள் பின்தொடர்கின்றன.

* சீனாவின் நகரம் மற்றும் பெரும்பாலான கிராமப்புறங்களில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள தடை உள்ளது.

* தடையை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் பணிஊக்கத்தொகை மறுப்பு போன்ற தண்டனைகள் வழக்கத்தில் இருக்கின்றன.

* இதில் சில விதிவிலக்குகள் ஒரே பிரசவத்தில் டபுள், ட்ரிபுள் அடிக்கும் பெற்றோருக்கு இவ்விதி தளர்த்தப்படுகின்றது(வேறு வழியில்லாமல்)

* சில பகுதிகளில் முதல் குழந்தை பெண்ணாகவோ அல்லது உடல் ஊனமுற்றோ பிறந்தால் அடுத்த குழந்தைக்கு இச்சட்டத்தில் இருந்து விதிவிலக்கு. அப்போதும் குழந்தைகளுக்கு இடையில் 3 அல்லது 4 வருட இடைவெளி இருக்க வேண்டும்.

* அப்படியும் குளிர், கால சந்தர்ப்பங்களால் பிறக்கும் இரண்டாவது குழந்தை மற்றும் அடுத்த குழந்தைகள் சட்டவிரோதக்குழந்தைகளாக (Illegally born child)அறிவிக்கப்படுகின்றன. (அப்பன் பாவம் பிள்ளையை தாக்கும் என்பது இது தானா?)

* வெளிநாடுகளில் பிறக்கும் சீனக்குழந்தைகள் குடியுரிமை பெறும் வரை அவர்களுக்கும் இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

* வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு மீண்டும் வரும் சீன‌க்குடிமகன்களுக்கு(இது காண்டு கஜேந்திரன் மேட்டர் இல்லை) இதிலிருந்து விலக்கு,,

* விதிக்கப்படும் அபராதம் குடும்பக்கட்டுப்பாடு அபராதம் என்று அழைக்கப்படுகிறது (தமிழ் மீடிய பள்ளி தேர்வுகளுக்கு அப்புறம் இப்போது தான் இப்படி ஒரு வாக்கியம் எழுதுகிறேன்)

* இந்த அபராதம் குழந்தை பிறந்த வருடத்தின் தந்தை சம்பளத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. இது இறுதி வரை மாறாது. இப்படி நீள்கிறது இப்பட்டியல், அது சரி இப்படி அதிகப்படியாக(இவ்வார்த்தைக்கு தஞ்சை பக்கம் வேறு ஒரு அர்த்தமும் உண்டு) பிறக்கும் குழந்தைகள் மற்றவர்களிடம் திட்டு வாங்கும்போது அடேய் அபராதத்துக்கு பிறந்த பயலே என்று திட்டு வாங்கக்கூடிய சூழல் நிறைய ;-)

மாறலாமா இல்லை வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்த நான், ஒரு வழியாக மாறிவிட்டேன்


குழலி, ரொம்ப நன்றிங்கோ : http://www.kuzhali.co.nr/

அடி மேல் அடி வாங்கி களைத்துப்போய் உட்கார்ந்திருக்க அவரை சந்திக்கிறார் நம் நிருபர்.

அடைப்புக்குறிக்குள் உள்ளதெல்லாம் Mind Voice

நிருபர்: சார்!

தரணி: அய்யயோ நான் இல்லை நான் இல்லை

நிருபர்: சார் நான் பதிவிடுகிறேன் பத்திரிக்கை நிருபர் வந்திருக்கேன்

தரணி: (இன்னுமா இந்த உலகம் உன்னை மதிக்குது. பின்றடா.) வாங்க வாங்க என்னையும் மதிச்சு வந்து பார்க்கறீங்களே! நீங்க ரொம்ப நல்லவருங்க.

நிருபர்: அட நீங்க வேற‌, உங்க குருவி அருமையை பத்தி தமிழ்மணத்துல வந்து கேட்டுப்பாருங்க. குருவி விமர்சனம் போட்ட எல்லோருக்கும் செம ஹிட்ஸாம். கூகுள் ஆட்ஸ்ல இருந்து தலைவலி மாத்திரை விளம்பரமா குவியுதாம்.

தரணி:(அடப்பாவிகளா நம்ம படத்தை வச்சி இவ்வளவு பேரு கொண்டாட்டமா இருக்காங்களா?) தெரியும் சார். இந்த மாதிரி IT மக்கள் நல்லா ரசிக்கணும்னுதான் மலேசியாவில எல்லாம் போய் படம் எடுத்திருக்கோம்.

நிருபர்: (புரியுதா இல்ல புரியாத மாதிரி நடிக்கிறாரா?) அது சரி சார் இந்த படத்துக்கு கண்டிப்பா மலேசியா போய்த்தான் ஆகிருக்கணுமா?

தரணி: அதை ஏன் சார் கேக்குறீங்க. படம் அழகா லோக்கல்லதான் போய்க்கிட்டு இருந்துச்சு, அந்த நேரம் பார்த்தா இந்த பில்லா படம் வந்து தொலையணும்? அத பார்த்ததும் நம்ம டாக்டர் சார், நம்ம ரசிகர்களும் மலேசியா பார்க்கணும் கதைய மாத்துங்கனு சொல்லிட்டாரு. அப்புறம் என்ன? இது தான் மலேசிய குருவி கதை.

நிருபர்: எல்லோருக்கும் படம்னா ஒரு இன்ஸ்பிரேஷன் இருக்கும். பார்த்தீங்கன்னா, முருகதாஸ் கஜினி படம் வர்ரதுக்கு முன்னாடி இத மாதிரி படம் உலகத்துலயே வந்ததில்ல அப்படின்னார். ஆனா மக்களுக்கு மெமெண்டோ பத்தி தெரிஞ்சதும் சைலண்ட் ஆகிட்டாரு. இவ்வளவு ஏன் நீங்களே கில்லி படம் வர்ரதுக்கு முந்தி தெலுங்கு படத்துக்கும் சம்பந்தமே இல்லைனு சொன்னீங்க. ஆனா படம் வந்ததுக்கப்புறம் தான் ட்ரஸ் முதல்கொண்டு காபினு தெரிஞ்சுது. இந்த படத்துல‌ எப்படி?

தரணி: ஆக்சுவலா இந்த படம் நம்ம சொந்த சரக்கு தான். ஆனா ஹோட்டல்ல டிஸ்கஷன்ல‌ நம்ம டாக்டர் சார் தான் சாப்பிட்டுகிட்டே மசாலா கம்மியா இருக்குனு சொல்லி திருப்பாச்சி, சிவகாசி மாதிரி சில ஹிட் படங்கள் சிடி கொடுத்து இன்ஸ்பிரேஷன வளர்த்துக்க சொன்னாரு.

நிருபர்: தயாரிப்பாளர் தரப்பில இருந்து பாராட்டு ஏதும் வந்துதா?

தரணி: இதுவரைக்கும் இல்லை. படத்தோட திருட்டு வி.சி.டி ஒழிக்க போலீஸ் போனப்போ, ஒரு குருவி டிஸ்க் கூட இல்லையாம். அந்த அளவுக்கு படம் மக்களை பாதிச்சிருக்குதாம். இதுக்காகவே நம்மள ஸ்பெஷலா பாராட்டணும்னு பொதுக்குழு கூட்டிருக்காங்களாம்.

நிருபர்: (சுத்தம். இவர்கிட்ட பேசிகிட்டு இருக்கும்போதே தலை வலிக்குதே) சரி சார் இந்த படம் சொல்ற மெசேஜ் என்ன?

தரணி: உலகத்துல அனுபவிக்க இன்னும் நிறைய கஷ்டம் இருக்கு. (இது எனக்கும் தான்)

நிருபர்: அய்யோ இன்னும் வருதா? எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்


இன்று சென்னையில் மாலை 6 மணிக்கு, கடலூர்வாசிகளை கேன்சர் பாதிக்கும் வாய்ப்பு மற்றும் கடலூரின் சுற்றுப்புறச்சூழல் பற்றிய கருத்தரங்கு நடைபெருகின்றது. கலந்துகொண்டு விழிப்புணர்வு பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதைப்பற்றிய முந்தைய பதிவு: http://pathividukiren.blogspot.com/2008/05/blog-post_23.html

மேலதிக தகவல்களுக்கு:
நித்தியானந்த்- 9444082401
மது- 9894915969

தேதி: 24‍ மே 2008 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 6:00

இடம்:
CEM office,42A,1st Floor,
5th Avenue, (Near Besant Nagar beach)தொடர்புள்ள சுட்டிகள்:
http://cuddaloreonline.blogspot.com/2008/05/gathering-of-cuddalore-natives-in.html
http://cuddaloreonline.blogspot.com/2008/03/2000-times-higher-cancer-risk-for.html
http://pathividukiren.blogspot.com/2008/04/blog-post_06.html

படம் உதவி:
http://cuddaloreonline.blogspot.com/

ஆங்கில மூலம்:
http://cuddaloreonline.blogspot.com/2008/05/gathering-of-cuddalore-natives-in.html

2000 மடங்கு அதிக கேன்சர் பாதிப்பு கொண்ட கடலூர் தியாக உள்ளங்களே!

கடலூரில் சொந்த வீடு இருக்கின்றதா இல்லை கட்டப்போகிறீர்களா? வேண்டாம் கைவிடுங்கள் இந்த யோசனையை. உங்கள் தலைமுறையை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

ஏன் இந்த நிலைமை?

விமோசனம் உண்டா?

இவைகளுக்கு விடை தேடும் நம் தன்னார்வ நண்பர் குழு, சென்னையில் ஒரு விழிப்புணர்வு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஏன் இந்த கூச்சல்? என்று புரியாதவர்கள் கேட்கலாம்.

சாதாரண மக்களை விட 2000 மடங்கு அதிக கேன்சர் பாதிக்கும் வரம் பெற்றிருக்கிறோம்.

எனவே அதை அழித்தொழிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

பிரபல(இந்த வார்த்தையை போட்டால் தான் கூட்டம் கூடுகிறது) மற்றும் முக்கிய அறிவியலாளர்கள் மற்றும் சூழ்நிலை பாதுகாவலர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வூட்டுகின்றனர்.

இதுவரை இதன் தீவிரம் புரியாதவர்கள், தயவு செய்து இக்கூட்டத்தில் கலந்து கொண்டு நிலைமையை உணர்ந்து கொள்ளுங்கள்.

மேலதிக தகவல்களுக்கு:
நித்தியானந்த்- 9444082401
மது- 9894915969

தேதி: 24‍ மே 2008 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 6:00

இடம்:
CEM office,42A,1st Floor,
5th Avenue, (Near Besant Nagar beach)


தொடர்புள்ள சுட்டிகள்:
http://cuddaloreonline.blogspot.com/2008/05/gathering-of-cuddalore-natives-in.html
http://cuddaloreonline.blogspot.com/2008/03/2000-times-higher-cancer-risk-for.html
http://pathividukiren.blogspot.com/2008/04/blog-post_06.html

இறுதியாக ஒரே ஒரு வார்த்தை, உங்கள் குடும்பம் கடலூரில் இருக்கின்றதா? உங்கள் குடும்பத்தையும் ஊரையும் காப்பாற்றுங்கள். கலந்துகொண்டு உங்கள் ஆதரவை தாருங்கள்.

திருட்டு டாரண்ட்டில் படம் பார்த்துவிட்டு ஒரு புண்ணியவான் அனுப்பி இருக்கும் ஒரு மெயில். கண்டு களியுங்கள்

நல்ல ப்ரிண்ட்டில் இருப்பது அசல் தெலுங்கு பதிப்பு, திருட்டு வீடியோ ப்ரிண்ட்டில் இருப்பது நகல் தமிழ் பதிப்பு


நான் திருவனந்தபுரத்தில் டெக்னோபார்க்கில் வேலை செய்யும் போது நாங்கள் நண்பர்கள் ஒன்றாக கழக்கூட்டம் என்ற இடத்தில் தங்கி இருந்தோம்.

திருவனந்தபுரம் பொதுவாக இரவு 9 மணிக்கே கடை அடைத்து இரவு 12 மணி போல் தோற்றம் அளிக்கும். கழக்கூட்டம் டெக்னோபார்க்குக்கு அருகில் இருந்ததால் நள்ளிரவு வரை சில கடைகள் திறந்திருப்பதுண்டு.

சரி சொல்லவந்த விஷயம் என் வீடு இருந்த இடம் தான். டெக்னோபார்க் என்பது நம்மூர் டைடல் பார்க் மாதிரி. ஆனால், டெக்னோபார்க் வாசலை தாண்டி சற்று வெளியில் வந்தாலும் கும்மிருட்டாகத்தான் இருக்கும். ஒரே ஒரு சேச்சி கடை மட்டும் திறந்திருக்கும்.

என் வீட்டில்(வீடு என்று சொல்லவே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. பேச்சுலர்கள் தங்கினால் அது என்றுமே ரூம் தான் அது என்ன தான் பங்களாவாக இருந்தாலும் சரி) நான் ஒருவன் மட்டும் ஏடாகூட நேர ஷிப்ட்களில்(சத்தியமாக ஷிப்ட் தான். நடுவில் ப் இருக்கிறது) மாட்டிக்கொள்வேன்.

வீடு சில நிமிட (மலையாலத்தில் மினிட் :) ) நடைதூரத்தில் இருந்தாலும், வீடு செல்லும் வரை கும்மிருட்டு தான். இத்தனைக்கும் அது ஒரு நெடுஞ்சாலையில் அமைந்திருந்தது. அதை நினைத்தாலே குலை நடுங்கும் அளவுக்கு அப்படி ஒரு பகுதி. போதாக்குறைக்கு நாய்கள் வேறு. என் நண்பன் ஒருவனை ஒரு நாய் பழிவாங்கிவிட, நாய்களைக்கண்டாலே PM, one-to-one meeting-க்கு கூப்பிடும் போது பயப்படுவது போல செல்லவேண்டியதாயிற்று.

எங்கள் பகுதியின் பெயர் கழக்கூட்டம் என்பது கள்ளர்கள் அதிகம் இருந்ததால் வைக்கப்பட்ட பெயர் என்று போகிற போக்கில் ஒரு புண்ணியவான் கொளுத்திப்போட்டு விட்டு சென்றுவிட. எப்போதும் உயிர் பயத்துடனே செல்வேன்.

அந்நேரங்களில் என் ரூம்மேட் நண்பர்கள் அந்நேரம் பார்த்து SAW I, II,III Hostel, Wrong turn, Texas chainsaw massacre பட டிவிடிகளாக வாங்கி குவித்து என் பயத்திற்கு உரம் போட்டுக்கொண்டிருந்தனர். படம் பார்க்கும்போதென்னவோ கமெண்ட் அடித்து பெரிய இவன் போல் காட்டிக்கொண்டாலும் இரவு நேரங்களில் வரும்போது தான் அந்த பயம் தெரியும்.

இந்த ஃபார்வர்ட் மெயில் தெய்வங்கள் அந்த நேரத்தில் தான் அனுப்பி தொலைவார்கள், TCS அலுவலரை பெங்களூரில் விரல் வெட்டிவிடுவதாக மிரட்டி ஏ.டி.எம்(அழகிய தமிழ் மகன் அல்ல‌) கார்டை பிடிங்கிக்கொண்டார்கள், தலையில் கஜினி அசின் போல கம்பியால் தலையில் அடித்து பைக்கை பிடிங்கிகொண்டார்கள் என்றெல்லாம் கபோதித்தனமாக வந்து சேரும்.

அது என்னவோ தெரியவில்லை என்ன தான் பகுத்தறிவு பேசினாலும் இந்த இருட்டு பயம் மட்டும் போவதில்லை. என் காதலியுடன் ஒருநாள் இரவில் மொட்டை மாடியில் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தபோது(இது கடலை அல்ல) பகுத்தறிவு பாடம் நடத்திக்கொண்டிருந்தேன்.

"இதோ பார் பேய், சூனியம், மந்திரம் இதெல்லாம் சும்மா டா. நம்பக்கூடாது"

"இல்லைங்க உங்களுக்கு தெரியாது, எங்க தெருவில ஒருத்தர் கால்ல எலுமிச்சம்பழம் மிதிச்சி ரெண்டு வாரம் கால்ல கட்டி வந்து கஷ்டப்பட்டாருங்க" (இங்கே "ங்க" விகுதி என் விருப்பத்திற்காக. உண்மை தலைகீழ்)

"நல்லா தெரியுமா? அவருக்கு அதனாலதான் கட்டி வந்துச்சா?"

"அப்படிதாங்க சொல்லிகிட்டாங்க‌"

உடனே நான் சுஜாதா பாதிப்பில்,
"எலுமிச்சம்பழத்துல இருக்கறது சிட்ரிக் இல்ல இல்ல டார்டாரிக் இல்ல சிட்ரிக் ஆசிட் தான். அதனால ஒரு மண்ணும் ஆகிருக்காது, அவருக்கு அதனால ஆகிருக்காது"

நான் தலையில் ஏறத்தொடங்கிவிட்டேன் என்று தெரியவந்ததும்,
"சரிங்க. அப்படின்னா ஒண்ணு பண்ணுங்க. நான் இப்பவே ஃபோன் லைன கட் பண்ணிடறேன் நீங்க மாடில இருந்து கீழே போய் பேசுங்க, என்கிட்ட பேசிகிட்டுதானே மாடி ஏறி வந்தீங்க. அவ்ளோ பயம் இருக்குல்ல‌"

"சரி சரி உனக்கு செமெஸ்டர் ரிசல்ட் எப்போ வருதுனு சொன்ன? நல்லா தானே எழுதிருக்க?"

அது சரி இருட்டுக்கு பயப்படுவது பகுத்தறிவுக்குள் வருகிறதா?

எங்கள் கடலூரை காப்பாற்ற எடுக்கபோகும் முயற்சிகளுக்காக நன்றி கனிமொழி.

கேன்சர் நகரமாக மாறிக்கொண்டு வந்த கடலூருக்கு சில தினங்கள் முன்பு கனிமொழி வருகை தந்தார்.

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் வேண்டுகோளை ஏற்று கனிமொழி கடலூரில் உள்ள சர்ச்சைக்குள்ளான அந்த தொழிற்சாலைகளை(Shasun Chemicals and Tagros Chemical Ltd ) பார்வையிட்டார். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த பார்வையில் விதிகளுக்கு புறம்பான இவ்விரு தொழிற்சாலைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னகுமாரை, இப்பகுதி மக்களிடம் ஒரு மருத்துவ பரிசோதனை நடத்துமாறு கேட்டுக்கொண்டார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வமும் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பனும் கலந்துகொண்டனர்.

தி.மு.க மகளிர் மாநாட்டுக்கு ஏற்பாடுகளை கவனிக்க கடலூர் வந்தபோது இப்படி ஒரு சோதனையை நடத்திச்சென்றுள்ளார் கனிமொழி.

எங்கள் கோரிக்கை இவ்வளவு நாளாக கிடப்பில் போடப்பட்டு இப்பொழுதாவது விடிவு தெரிகிறதே என்று மகிழ்ச்சி அடைகிறோம். விடியலை நோக்கி காத்திருக்கிறோம்.

கேன்சர் நகரம் கடலூர்

சாபக்கேடாக வந்து வாய்த்திருக்கின்றன சில வரங்கள் எங்கள் ஊருக்கு.
சிப்காட் தொழிற்பேட்டை கடலூருக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்பட்ட நிலையில் அது தன் கோரமுகத்தை காட்ட துவங்கியிருக்கிறது இந்த வரம்.

சாதாரணமாக 10 லட்சம் பேரில் ஒருவருக்கு வர வாய்ப்பு இருக்கும் கேன்சர், எங்கள் ஊரில் 1000‍ல் இருவருக்கு வர வாய்ப்ப்ய் இருப்பதாக கூறுகின்றன சோதனை அறிக்கைகள்.

மெல்ல மெல்ல ஊடுருவிக்கொண்டிருக்கிறது நோய். யாருக்கும் அறியாமல் ஆனால் உறுதியுடன்.

நாக்பூரில் அமைந்திருக்கும் தேசிய சுற்றுப்புறசூழல் ஆராய்ச்சி அமைப்பு தான் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் இருப்பவை முழுவதும் கிட்டத்தட்ட கெமிகல் கம்பெனிகள். இருப்பது தவறில்லை யாருக்கும் பழுதில்லா நிலையில். என்ன எழுதுவது என்று தெரியாத நிலையில் தள்ளி என்னை வாட்டி எடுக்கிறது இச்செய்தி.

பகலை விட இரவுநேரங்களில் அதிக மாசு வாயுக்களை வெளியிட்டு கொல்கின்றன பெரும்பாலான தொழிற்சாலைகள்.

இது பற்றிய அறிக்கையை தேசிய சுற்றுப்புறசூழல் ஆராய்ச்சி அமைப்பு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 2004‍ லிலேயே இந்த அறிக்கையை தந்துவிட்டதாம். இன்னும் சாவு எண்ணிக்கை வராததால் ஒருவேளை வாரியம் காத்திருக்கிறதென்று நினைக்கிறேன்.

சிப்காட்டை சுற்றி இருக்கும் பகுதிகளில் உள்ள காற்றில் வழக்கத்துக்கு மாறாக 94 வித மாசுக்கள் கலந்திருக்கின்றன. அவற்றில் 15 மிகக்கொடியவை.

இரத்தப்புற்றுநோயை உருவாக்கும் பென்ஸீன் இப்பகுதிகளில் 15 மடங்கு அதிக அளவில் உள்ளது.

இதில் முக்கிய விஷயம், இந்த சோதனைகளை செய்த நேரத்தில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தனவாம். அதற்கே இந்த நிலைமை. அவையும் செயல்பட்டுக்கொண்டி(று)ருந்தால், என்ன நடந்திருக்கும்.

ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தின் முதல் தலைநகரமாக செயல்பட்டு வந்த கடலூர், இன்றும் அழியப்போவதிலும் முதலாவதாகவே உள்ளது.

ஒருவிதத்தில், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் "விடைகொடு எங்கள் நாடே" பாடல் எங்களுக்கும் பொருந்தும். ஒரே ஒரு மாற்றத்துடன் "விடைகொடு எங்கள் உலகே.......பிழைத்தால் வருகிறோம்".

மேலதிகத்தகவல்களுக்கு:

http://www.sipcotcuddalore.com/News_Thaindian_230308.html
http://www.sipcotcuddalore.com/pr_220308.html


Name of Chemical

Highest Level (microgram/m3)

Location

Times above safe levels

Benzene

31.174

Asian Paints

125

Carbon tetrachloride

72

Tagros Chemicals

553

Chloroform

74

Shasun

881

Methylene Chloride

133

Tanfac

32.5

Trichloroethylene

24

Aurobindo Chemicals

21.8மேடையில் ஒரு(இரண்டு) மைக் கிடைத்துவிட்டால் கைதட்டல் வாங்க என்ன வேண்டுமானாலும் பேசலாமா?
வந்தது ரஜினி பற்றி பேசவா? இல்லை தமிழர் ப்ரச்சினை பற்றி பேசவா?

கர்னாடகத்திலிருந்து இங்கு வந்து சாப்பிடுவோர் வரவேண்டும் என்று முழங்கிவிட்டு, வந்தவரை மேடையில் வைத்துக்கொண்டு பேச வேண்டிய பேச்சுகளா இவை? கைதட்டல் வாங்க சிலர் பெயரை சொல்ல மாட்டேன் என்று ஆரம்பத்தில் சொல்லிவிட்டு இறுதி வரை அவர் வாலையே பிடித்துக்கொண்டு இருந்தது செம காமெடி போங்க. உங்க கேரக்டரையே புரிஞ்சிக்க முடிலயே!

உணர்ச்சி வசப்பட்டு பேசியதெல்லாம் சரிதான் அதற்காக அவ்வளவு கீழ்த்தரமான அநாகரீக வார்த்தைகளை மேடையில் பேசலாமா? மக்கள் உங்களை முட்டாக் அல்லது கேணக்/ப் (உங்கள் வார்த்தைகள் தான் தலைவா)என்று எண்ணமாட்டார்களா?

தமிழ் தமிழ் என்று இவ்வளவு பேசும் நீங்கள், தமிழ் மக்களுக்காக அப்படி ஏதும் பெரிதாய் செய்தது போல் தெரியவில்லையே? குறைந்தபட்சம் ஒரு நல்ல தமிழ் கலாச்சார படமாவது... அது சரி வரும் காசில் எனக்கே படம் எடுக்க மாட்டேன்றார் என்று சிபி குரல் கேட்கிறது. ஓடிய படங்களில் பாதி படங்கள் தானைத்தலைவர் கவுண்டமணிக்கும், மணிவண்ணனுக்குமே ஓடின. என்னமோ போங்க. ஒரு பெரியார் படத்தில் நடித்துவிட்டால் மட்டும் போதாது. இன்னும் வளரணும் தம்பி. வளரு வளரு.

வைரமுத்து இது என்னவோ ரஜினி முன்னேற்ற கழக துவக்க விழா போல் பேசியது ஒரு தனி காமெடி.
என்னத்த சொல்றது

வழியெங்கும் கதவுகள்
எல்லா பக்கங்களிலும்

இரு புறங்களிலும்
திறக்கக்கூடியவை

எல்லா வீட்டின் கதவுகளும்
ஆச்சர்யத்தை உள்ளடக்கியவை

பல வித உணர்ச்சிகளை கண்டுவிட்டு
மூடிக்கொள்கிறது
அல்லது திறந்து கொள்கின்றன‌

குழந்தைகள் இருக்கும் வீட்டுக்கதவுகள்
ஒருவித சந்தோஷத்துடனே எப்போதும் இருக்கின்றன‌

பல பல்லிகளின் வால்களையும்
சில நகங்களையும்
எடுத்துக்கொள்கின்றன‌
தங்கள் கோபத்தை சாந்திப்படுத்த‌

பல வேலைப்பாடுகளுடன் வரும் கதவுகள்
அழகாக சொல்கின்றன‌
அனுமதியின்றிஉள்ளே வராதே

நவீன கதவுகள்
உயிரின்றி இருக்கின்றன‌

புதியவர்களுக்கு முதுகைக்காட்டி
திறக்க மறுக்கின்றன‌

ம்ம்ம்ம்
இங்கு இன்னொரு கதவு திறந்திருக்கிறது

ஆனால் கதவு மட்டுமே இருக்கிறது
உள்ளும் வெளியும்
ஒரே விதமாய்.....


சாருவின் இணைய தளத்தில் அவரது பாஸ்வேர்டு திருடு போனதில் அவரின் சந்தேக ந‌பரை அடிக்கோடிட்டுள்ளார். அவர் ப்ளாகில் இருந்து செயல்படுவதாக கூறியுள்ளார். இந்த பாஸ்வேர்டு பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருக்கும் போல இருக்கிறதே.

//என் பெயரில் புகுந்து பல கிரிமினல் வேலைகளைச் செய்த நபர் யாரென்று தெரிந்து விட்டது. அவர் blog களில் மட்டுமே எழுதி மிகப் பிரபலமான ஒரு ஆள். இன்னும் அவர் பிடிக்கப் படாததால் பெயரைச் சொல்ல முடியவில்லை. என் சக எழுத்தாளர்கள் மற்றும் blog களில் எழுதுபவர்கள் கவனமாக இருக்கும் படிக் கேட்டுக் கொள்கிறேன்.//

(இது ஒன்னும் ஏப்ரல் ஃபூல் சமாச்சாரம் இல்லயே!)

இதை சரி செய்யவேமுடியாது போலிருக்கிறதே. ஜாக்கிரதையாக இருப்பதைதவிற வேறு வழியில்லை.

தத்தம் பதிவுகளை ஒரு பேக்‍அப் எடுத்துக்கொள்வது நலம்.

பதிவிட ஒரு ஐடி, மற்ற விஷயங்களுக்கு ஒரு ஐடி பயன்படுத்துவது மேலும் நலம்.

நலம் நலமறிய ஆவல்.


சாரி சாரு

முந்தைய பதிவில் வந்த தகவல்கள் பொய் போல் தெரிவதால். அன்பர்கள் ஜாக்கிரதையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

From his site:

Hackers hacked charunivedita@rediffmail.com email address, So readers contact Charu through his new Email ID, charu.nivedita18@gmail.com

But the mail i got was from hotmail
You too hotmail ;-(

இது அவரது மெயில் ஐடியை ஹேக் செய்தவர்கள் அனுப்பியது.


How are you doing today? I am sorry I didn't inform you about my traveling to Malaysia for a program called "Empowering Youth to Fight Racism, HIV/AIDS, Poverty and Lack of Education. The program is taking place in three major countries in Asia, which are Taiwan, Singapore and Malaysia. It has been a very sad and bad moment for me, the present condition that i found myself is very hard for me to explain.

I am really stranded in Malaysia because I forgot my little bag in the Taxi where my money, passport, documents and other valuable things were kept on my way to the Hotel am staying, I am facing a hard time here because i have no money on me. I now owe a hotel bill of $1,400 and they wanted me to pay the bill soon or else they will have to seize my bag and hand me over to the Hotel Management. I need this help from you urgently to help me back home, I need you to help me with the hotel bill and i will also need $1,800 to feed and help myself back home. So please can you help me with a sum of $3,200 to sort out my problems here? I need this help so much and on time because i am in a terrible and tight situation here, I don't even have money to feed myself for a day which means i had been starving, so please understand how urgent i need your help.

I am sending you this e-mail from the city Library, I will appreciate what so ever you can afford to send me for now and I promise to pay back your money as soon as i return home. So please let me know on time so that i can forward to you the details of one of the hotel manager you need to transfer the money to me through Money Gram or Western Union.

Hope to hear from you soon. The embassy here have already promised to give me a covering traveling papers that i will need to have my way back home, all i need right now is the money to settle up the bills and leave.

Thanks and get back to me soon.

Regards,Charu

இந்த வாரம் கிடைத்த 3 நாட்கள் விடுமுறையில் நிறைய படங்களை பார்த்து தள்ளினேன். அதில் முக்கியமாக நான் ரசித்த படம் இது Perfume - The Story of a murderer.

பின்நவீனத்துவம், முன்பழையத்தனம் என்றெல்லாம் ஜல்லியடிக்க தெரியாதால்(நல்லவேளை பிழைத்தோம் என்ற குரல் கேட்கிறது ;) ), ஏதோ எனக்கு பிடித்த விஷயங்களை மட்டும் கூற விழைகிறேன்.


எனக்கு படத்தின் இயக்குனர், நடிகர்கள், நடிகைகள் பெயர் கூட தெரியாது. வேண்டுவோர் தயவு செய்து நண்பர் IMDB-ஐ கேட்கவும். தப்பித்தவறி ஆங்காங்கே இடம்பெற்றிருக்கும் சில தகவல்கள், முழுக்க முழுக்க copy-pase மட்டுமே.


Patrick Süskind எழுதிய Perfume என்ற நாவலைத்தழுவி எடுக்கப்பட்டிருக்கும் படம் இது.

ஒரு அழுக்கான மீன் மார்க்கெட்டில் பிறக்கும் ஒரு குழந்தை பிறந்தவுடன் தன் அம்மாவை காவு வாங்கி ஒரு அனாதை விடுதிக்கு வந்து சேர்கிறது. அங்கும் கீழ்த்தரமான சூழ்நிலையில் வளரும் அவன் 5 வயது வரை பேச்சு வராமல் இருக்கிறான். அங்கு அவனுக்கு ஒரு அதிசய ஆற்றல் இருப்பதை உணர்கிறான். அவனால் சாதாரணமானவர்களால் உணர்வதை விட பல மடங்கு மோப்பசக்தி இருக்கிறது.


இதை படத்தில் காட்டும் முதல் காட்சி, அவனை பின்னால் இருந்து ஒருவன் ஆப்பிளால் அடிக்க, அதை அவன் பின்திரும்பாமல் தலையை திருப்பி தப்பிக்கிறான். படுத்துக்கொண்டு பல வித வாசனைகளையும் அவன் மோப்பம் பிடித்து சொல்லும்போது நாமும் நம்மை அறியாமல் மோப்பம் பிடிப்பது திரைக்கதையின் வெற்றி.


அவன் விடுதியிலிருந்து வெளியேற்றி வேலைக்கு செல்லும்போது, முதன்முறையாக ஒரு இளம்பெண்ணின் வாசனையில் மனதை பறிகொடுத்து அதை கைப்பற்றும் முயற்சியில் அந்த பெண்ணை கொன்று விடுகிறான்.


அதிலிருந்து பெண்ணின் வாசனையை கைப்பற்றி பாதுகாத்துக்கொள்ளும் முயற்சியில் ஒரு Perfumer(நறுமணாளன் ;-) ) - இடம் வேலைக்கு சேர்கிறான். அங்கும் அவனால் பெண்ணின் நறுமணத்தை கைப்பற்றும் வித்தையை கற்றுக்கொள்ளமுடியாமல் வேறொரு ஊருக்கு சென்று தன் பணியை ஆரம்பிக்கிறான். அங்கு அதை கற்றுக்கொள்ளும் அவன் பல பெண்களை கொன்று அவர்களின் மணத்தை கொண்டு ஒரு தெய்வீக(!) நறுமணத்தைலத்தை தயாரிக்கிறான்.

இந்த முயற்சியில் கைதாகும் அவனுக்கு மரணதண்டனை அளிக்கப்படிகிறது. அப்போது அந்த தைலத்தை கொண்டு முழு ஊரையும் தன்வசப்படுத்தி தப்பிக்கிறான். இந்த காட்சியில் சுமார் 750 பேர் நிர்வாணமாகி புணர்வில் ஈடுபடுகின்றனர். அழகாக படமாக்கப்பட்டுள்ளது இந்த காட்சி (இதற்காகத்தான் நான் படம் பார்க்கவே ஆரம்பித்தேன் ஆனால் படத்தோடு ஒன்றுகையில் காட்சியில் அழகின் வீரியம் மட்டுமே உணர முடிகிறது).


இதில் நான் கதையை ஒரு Developing-Hints பாணியில் தான் சொல்லியுள்ளேன். இது ஒரு விஷுவல் திரைப்படம் இதை நான் காட்சிப்படுத்தி அழகை கெடுக்க விரும்பவில்லை(கெடுத்த வரை போதும் ;-) )


இதில் எனக்கு பிடித்த காட்சிகளாக பல காட்சிகள் அமைந்துள்ளன.


முதன் முறை பெண்ணை வாசனை பிடிக்கும் காட்சியை அழகாக எடுத்துள்ளனர். அந்த பெண் பிணமான பின்னும் அவன் அவளை வாசனை பிடிப்பது படு ஜோராக எடுக்கப்பட்டுள்ளது. பெண்ணின் ஸ்பரிசத்தில் அவள் மணத்தை உணர்ந்தவர்களால் இதை எளிதாக காட்சிப்படுத்திபார்க்க முடியும்.(இது ஆணாதிக்கத்தில் எழுதப்படவில்லை ;-) )


அவனுக்கு அடைக்கலம் தந்தவர்களை விட்டு அவன் பிரியும் போதெல்லாம் அவர்கள் இறப்பது மனதை என்னவோ யோசிக்கவைக்கிறது.


கதையோடு வரும் அந்த narration சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.


எல்லோரின் மணத்தையும் உணரும் அவன், மணமில்லா இடத்திற்கு வருவதும், அப்போது அவன் தனக்கென்று ஒரு மணம் இல்லாததை உணர்வதும் ஒரு அழகான self-realization. அந்த குகையும் அவனின் சிந்தனையும், திருவண்ணாமலை ரமணர் குகையும் ரமணரையும் நினைவு படுத்தியது.


இறுதிக்காட்சியில், ஒரு பெண்ணின் தந்தை அவனிடம் பேசுவதும்,அப்போது அவன் தன் முதல் கொலையை நினைத்து பார்ப்பதும் அழகான காட்சியமைப்பு.

படத்தினூடே வரும் பெண்களின் முழுஅழகு காட்சிகள் அழகான விதத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன.

மொத்ததில் நன்கு ரசிக்ககூடிய படம்.

Dont miss it.
இந்தியா போன்ற ஒரு ஹாட் நாட்டில் ஏன் இன்னும் விபச்சாரம் இன்னும் அரசு அங்கீகாரம் இன்றி இருக்கின்றது?

கலாச்சார சீரழிவு என்று கூச்சல் போடுவோர் தயவு செய்து கடந்த புத்தாண்டு தினத்தன்று நாடெங்கும் நடந்தேறிய கலாச்சார கலக்கல்களை நினைவில் கொள்ளவும்.

15 வயது அல்லது அதற்கு குறைவான வயதிலேயே ஆணின் உணர்வுகள் பொங்கி எழ ஆரம்பிக்கின்றன. பெரும்பாலானோர் சுய இன்பம் மட்டுமே போதும் என்று தங்களை திருப்திபடுத்திக்கொண்டு வாழ்க்கையில் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு சென்றுகொண்டிருக்கின்றனர்.(நான் அப்படி எல்லாம் செய்ததே இல்லை என்று சொல்லும் நல்லவர்களை பசித்த புலி தின்னட்டும்) சுய இன்பம் பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.
அப்படி சுய இன்பத்தை தாண்டி தன் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் போதுதான் அது வக்கிரமாக வெளிப்படுகிறது.

அப்படிப்பட்ட வக்கிரங்கள் தான் பெண்களிடம் அல்லது பெண்களுக்கு எதிராக வன்முறையாக வெளிப்படுகின்றன‌. குறைந்தபட்சம் பேருந்தில் உரசுதலில் தொடங்கி, கெட்ட தீண்டல்கள் வரை செல்கிறது. கலவி பற்றிய ஒரு விழிப்புணர்வு இல்லாததும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. பெண்ணின் கலவி சார்ந்த உடல்கட்டமைப்பு என்பது வெளித்தோற்றத்தில் மட்டும் இருக்கிறது என்று இன்னும் தவறாக எண்ணிக்கொண்டிருக்கும் பல ஆண்கள் இருக்கும் சமூகத்தில் கலவி அல்லது பாலியல் விழிப்புணர்வு என்பது ஒரு முக்கிய தேவையாகும். பஞ்சதந்திரம் படத்தில் கமல் சொல்லும் "என் செக்சுவல் ஆர்கன் என் தலையில் இருக்கு" என்னும் வசனம் பெண்களுக்கு மிகவும் பொருந்தும் என்பது ஒவ்வொரு ஆணும் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம்.

அப்படி வக்கிரத்தை எப்படியாவது திருப்தி படுத்தவேண்டும் என்று ஒரு சமுதாய பொறுப்புகளை மறக்கும் அல்லது மறைக்கும் ஆண் சென்று சேரும் இடம் கண்டிப்பாக நல்ல இடமாக இருக்கப்போவதில்லை. கால் சென்டர் செல்லும் பெண்களை வன்புணர்ச்சி செய்து கொன்று பின் காவல்துறையிடம் சரண் அடையும் வரை அவர்களை கொண்டு சென்று விடுகிறது. இது ஒரு எடுத்துக்காட்டுதான். இன்னும் பல எடுத்துக்காட்டுகள் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அப்படி ஹார்மோன் பகுத்தறிவை மீறும் அளவிற்கு ஆட்டம் போடவைக்கும் நிலையில், இப்படிப்பட்ட சீர்கேடுகளை தடுக்க மற்றும் "AIDS" போன்ற கொடும் நோய்களைத்தடுக்க அரசு விபச்சாரத்தை அங்கீகரிக்க வேண்டும். இன்னும் மும்பை, கொல்கத்தா மற்றும் பல நெடுஞ்சாலைகளிலும் சட்டப்பூர்வ அங்கீகாரமின்றி செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் இந்தியா கிட்டத்தட்ட 50 லட்சம் AIDS நோயாளிகளுடன் தடுமாறிக்கொண்டிருக்கிறது.

அரசாங்கம் ஒன்றும் TASMAC போல வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்கத்தேவை இல்லை. இருக்கும் சட்டங்களை சற்று சீரமைத்து, பாலியல் தொழிலாளர்களின் உடல்நிலை மற்றும் சுகாதாரமான சூழ்நிலை அமைத்துக்கொடுக்க முன் வரவேண்டும் என்பது என் எண்ணம்.

வழக்கம்போல் இதில் உள்குத்துகளை எதிர்பார்க்காமல், வெளி மனதால் யோசிக்காமல் ஒவ்வொருவரும் உண்மையான மனதுடன் யோசித்துப்பாருங்கள்.

இது பெண்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டதல்ல. அழிக்கமுடியாத ஒரு விஷயத்தை சற்று சீர்படுத்தலாம் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டது.

இதனால் வளரும் தலைமுறை கெட்டுவிடும் என்று நினைப்பவர்கள், அருகில் இருக்கும் பார்க்குகளுக்கு அல்லது இன்டர்நெட் சென்டர் சென்று இறைவன் அருள் பெற்று மறுபரிசீலனை செய்க.Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.