கிறிஸ்துமஸ் போர்நிறுத்தம்

முதல் உலகப்போரின்போது ஒரு ருசிகர சம்பவம் நடந்திருக்கிறது. இந்த சம்பவம் எந்த அளவிற்கு உண்மை என்பது சற்று சந்தேகத்துக்குறியது. ஏனெனில் இந்த சம்பவம் அதிகாரப்பூர்வமாக எங்கும் குறித்துவைக்கப்படவில்லை.

1914 ல், பிரிட்டிஷ் படைகளுக்கும் ஜெர்மன் படைகளுக்கும் இடையே மேற்கு முனையில் போர் நடந்து கொண்டிருந்தது. பெல்ஜியத்தின் இப்ரெ என்ற இடத்தில் கிறிஸ்துமஸுக்கு சற்று முன்பு போர் நடந்துகொண்டிருந்தது.

போர், இரத்தம், பிணங்கள் என்று மனிதமனத்திற்கு ஒவ்வாத விஷயங்களில் முழுக்க முழுக்க தங்களை மறந்து போரிட்டுக்கொண்டிருந்த வீரர்கள், கிறிஸ்துமஸ் வந்ததும் தங்களை அறியாமல் கொண்டாட்ட மனப்பான்மைக்கு சென்றனர். இவர்களை கொண்டாட எதிரி வீரர்கள் விட வேண்டுமே! 

ஆனால் இரு புற வீரர்களுக்கும் இதே மன நிலைமை இருந்ததால், இரு புற வீரர்களுக்கும் மனம் கொண்டாட்டத்தை நாடியது. முதலில் கொண்டாட ஆரம்பித்தது ஜெர்மன் படைகளே, ஜெர்மன் வீரர்கள் தங்கள் பதுங்கு குழிகளை அலங்காரப்படுத்தி மரங்களில் மெழுகுவர்த்திகளை கொளுத்தினர். 

மேலும் கிறிஸ்துமஸ் கேரல் பாடல்களையும் பாடி கிறிஸ்துமஸை கொண்டாடினர். இதைக்கேட்ட எதிர்தரப்பு ஸ்காட்டிஷ் வீரர்களையும் இந்த உற்சாகம் தொற்றிக்கொண்டது. ஜெர்மன் வீரர்கள் "Stille Nacht" பாடலை பாட ஸ்காட்டிஷ் வீரர்களோ அப்பாடலின் ஆங்கில வடிவம் Silent Night பாடலைப்பாடினர்.

ஒரு பாடல், இதயத்தை தொடும் இசை இரு எதிரிகள்(எதிர்கள் வேடம் பூண்டவர்கள்) இணைய வழிவகுத்தது.

அந்த ஜெர்மன் பாடல் இதோ


இதற்கு கொஞ்சம் மேலே போய் ஜெர்மன் வீரர்களும் ஸ்காட்டிஷ் வீரர்களும் விஸ்கி, சிகரெட், சாக்லெட் போன்றவற்றை தங்களுக்குள் பரிமாறிக்கொண்டனர்.

தங்கள் குரோதங்கள் மறைந்து அன்பை பரிமாறிக்கொண்ட நேரம், தங்களால் கொல்லப்பட்ட வீரர்களின் நினைவு வந்தது இரு புற வீரர்களுக்கும்.  மறைந்த வீரர்களுக்கு இறுதி சடங்கு நடத்தினர். அப்போது சங்கிதம் 23 ம் அதிகாரத்தில் இருந்து ஒரு வசனத்தை வாசித்து இறுதி அஞ்சலி செலுத்தி இறைவனை வேண்டினர். அந்த வசனம் 

    The Lord is my shepherd. I shall not want. He maketh me to lie down in green pastures. He leadeth me beside the still waters. He restoreth my soul. He leadeth me in the path of righteousness for his name's sake. Yea, though I walk through the valley of the shadow of death, I will fear no evil.

தமிழில்,

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.
அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.
அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

இந்த கிறிஸ்துமஸ் போர்நிறுத்தம் மளமளவென மற்ற போர்முனைகளுக்கும் பரவியது. சில இடங்களில் இரு அணி வீரர்களும் கால்பந்தாட்டம் கூட ஆடியதாகவும் கூறப்படுகிறது.

அன்பை கொண்டாடும் கிறிஸ்துமஸ் வருக. உலகத்திற்கு மீண்டும் சமாதானம் தருக.

Feliz Navidad. Merry Christmas

8 Comments:

 1. Robin said...
  உங்கள் பதிவு கிறிஸ்துமஸ் நினைவுகள் வரவழைத்துவிட்டது. நன்றி.
  Robin said...
  silent night பாடல் இல்லாமல் கிறிஸ்துமஸ் இல்லை என்ற அளவிற்கு புகழ் பெற்ற பாடல் அது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.
  கிஷோர் said...
  நன்றி ராபின்.

  உண்மைதான்.

  கிறிஸ்துமஸ் பாடல்கள் பற்றி ஒரு பிரத்தியேக பதிவிட எண்ணியுள்ளேன். உங்களுக்கு பிடித்த பாடல்களை முடிந்தால் பட்டியலிடுங்கள்
  Robin said...
  நாம் மகிழ்ச்சியாக கொண்டாடினாலும் ஒரிசா போன்ற மாநிலங்களில் கிறிஸ்துமஸ் என்றாலே கிறிஸ்தவர்களை கொலை செய்ய ஒரு வெறிபிடித்த கும்பல் கிளம்பிவிடுகிறது. கடவுள்தான் காப்பாற்றவேண்டும்.
  Robin said...
  1. Oh christmas tree, oh christmas tree
  2. Hark the herald angels sing
  3. Zions daughter, now your heart is full of joy
  4. The first noel the angels did sing
  5. oh come all ye faithful
  6. when darkness is falling
  7. Joy to the world, the Lord has come
  8. Jingle bells, jingle bells, jingle all the way
  9. Feliz nevidad
  10. Mary's boychild Jesus Christ
  கிஷோர் said...
  Thanks Robin
  Robin said...
  some youtube links
  Feliz nevuidad
  http://www.youtube.com/watch?v=tWa_W_jTqLs

  jingle bells
  http://www.youtube.com/watch?v=O2MFducncsg&NR=1

  mary's boy child Jesus Christ
  http://www.youtube.com/watch?v=7BVtzu59feY

  hark the herald
  http://www.youtube.com/watch?v=GUqtKJ13eH4

  The first noel
  http://www.youtube.com/watch?v=V5IFY8RIMME
  கிஷோர் said...
  All my favorites too. Thanks a lot Robin

Post a Comment

Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.