சமீபத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் குழந்தை இழந்தவர்கள் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள அரசு சான்றளிக்கிறது என்ற செய்தி புதுமையாக இருந்தது. அது பற்றி நான் மேலும் சில தகவல்களை விக்கிபீடியா மூலம் அறிந்துகொண்டேன். அந்த விபரங்கள் பின்தொடர்கின்றன.
* சீனாவின் நகரம் மற்றும் பெரும்பாலான கிராமப்புறங்களில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள தடை உள்ளது.
* தடையை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் பணிஊக்கத்தொகை மறுப்பு போன்ற தண்டனைகள் வழக்கத்தில் இருக்கின்றன.
* இதில் சில விதிவிலக்குகள் ஒரே பிரசவத்தில் டபுள், ட்ரிபுள் அடிக்கும் பெற்றோருக்கு இவ்விதி தளர்த்தப்படுகின்றது(வேறு வழியில்லாமல்)
* சில பகுதிகளில் முதல் குழந்தை பெண்ணாகவோ அல்லது உடல் ஊனமுற்றோ பிறந்தால் அடுத்த குழந்தைக்கு இச்சட்டத்தில் இருந்து விதிவிலக்கு. அப்போதும் குழந்தைகளுக்கு இடையில் 3 அல்லது 4 வருட இடைவெளி இருக்க வேண்டும்.
* அப்படியும் குளிர், கால சந்தர்ப்பங்களால் பிறக்கும் இரண்டாவது குழந்தை மற்றும் அடுத்த குழந்தைகள் சட்டவிரோதக்குழந்தைகளாக (Illegally born child)அறிவிக்கப்படுகின்றன. (அப்பன் பாவம் பிள்ளையை தாக்கும் என்பது இது தானா?)
* வெளிநாடுகளில் பிறக்கும் சீனக்குழந்தைகள் குடியுரிமை பெறும் வரை அவர்களுக்கும் இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.
* வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு மீண்டும் வரும் சீனக்குடிமகன்களுக்கு(இது காண்டு கஜேந்திரன் மேட்டர் இல்லை) இதிலிருந்து விலக்கு,,
* விதிக்கப்படும் அபராதம் குடும்பக்கட்டுப்பாடு அபராதம் என்று அழைக்கப்படுகிறது (தமிழ் மீடிய பள்ளி தேர்வுகளுக்கு அப்புறம் இப்போது தான் இப்படி ஒரு வாக்கியம் எழுதுகிறேன்)
* இந்த அபராதம் குழந்தை பிறந்த வருடத்தின் தந்தை சம்பளத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. இது இறுதி வரை மாறாது. இப்படி நீள்கிறது இப்பட்டியல், அது சரி இப்படி அதிகப்படியாக(இவ்வார்த்தைக்கு தஞ்சை பக்கம் வேறு ஒரு அர்த்தமும் உண்டு) பிறக்கும் குழந்தைகள் மற்றவர்களிடம் திட்டு வாங்கும்போது அடேய் அபராதத்துக்கு பிறந்த பயலே என்று திட்டு வாங்கக்கூடிய சூழல் நிறைய ;-)
லேபிள் படித்தது