எங்கள் கடலூரை காப்பாற்ற எடுக்கபோகும் முயற்சிகளுக்காக நன்றி கனிமொழி.
கேன்சர் நகரமாக மாறிக்கொண்டு வந்த கடலூருக்கு சில தினங்கள் முன்பு கனிமொழி வருகை தந்தார்.
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் வேண்டுகோளை ஏற்று கனிமொழி கடலூரில் உள்ள சர்ச்சைக்குள்ளான அந்த தொழிற்சாலைகளை(Shasun Chemicals and Tagros Chemical Ltd ) பார்வையிட்டார். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த பார்வையில் விதிகளுக்கு புறம்பான இவ்விரு தொழிற்சாலைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னகுமாரை, இப்பகுதி மக்களிடம் ஒரு மருத்துவ பரிசோதனை நடத்துமாறு கேட்டுக்கொண்டார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வமும் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பனும் கலந்துகொண்டனர்.
தி.மு.க மகளிர் மாநாட்டுக்கு ஏற்பாடுகளை கவனிக்க கடலூர் வந்தபோது இப்படி ஒரு சோதனையை நடத்திச்சென்றுள்ளார் கனிமொழி.
எங்கள் கோரிக்கை இவ்வளவு நாளாக கிடப்பில் போடப்பட்டு இப்பொழுதாவது விடிவு தெரிகிறதே என்று மகிழ்ச்சி அடைகிறோம். விடியலை நோக்கி காத்திருக்கிறோம்.
3 Comments:
-
- வடுவூர் குமார் said...
April 9, 2008 at 2:41 PMஏதோ நல்ல காலம் பிறந்தால் சரி.- கிஷோர் said...
April 9, 2008 at 3:08 PMஅந்த நம்பிக்கை தான் தலைவா- சந்தோஷ் said...
April 24, 2008 at 12:36 AMஅடுத்த பதிவிர்காக காயத்திருக்கிறோம் கிஷோர்....