சாபக்கேடாக வந்து வாய்த்திருக்கின்றன சில வரங்கள் எங்கள் ஊருக்கு.
சிப்காட் தொழிற்பேட்டை கடலூருக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்பட்ட நிலையில் அது தன் கோரமுகத்தை காட்ட துவங்கியிருக்கிறது இந்த வரம்.
சாதாரணமாக 10 லட்சம் பேரில் ஒருவருக்கு வர வாய்ப்பு இருக்கும் கேன்சர், எங்கள் ஊரில் 1000ல் இருவருக்கு வர வாய்ப்ப்ய் இருப்பதாக கூறுகின்றன சோதனை அறிக்கைகள்.
மெல்ல மெல்ல ஊடுருவிக்கொண்டிருக்கிறது நோய். யாருக்கும் அறியாமல் ஆனால் உறுதியுடன்.
நாக்பூரில் அமைந்திருக்கும் தேசிய சுற்றுப்புறசூழல் ஆராய்ச்சி அமைப்பு தான் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் இருப்பவை முழுவதும் கிட்டத்தட்ட கெமிகல் கம்பெனிகள். இருப்பது தவறில்லை யாருக்கும் பழுதில்லா நிலையில். என்ன எழுதுவது என்று தெரியாத நிலையில் தள்ளி என்னை வாட்டி எடுக்கிறது இச்செய்தி.
பகலை விட இரவுநேரங்களில் அதிக மாசு வாயுக்களை வெளியிட்டு கொல்கின்றன பெரும்பாலான தொழிற்சாலைகள்.
இது பற்றிய அறிக்கையை தேசிய சுற்றுப்புறசூழல் ஆராய்ச்சி அமைப்பு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 2004 லிலேயே இந்த அறிக்கையை தந்துவிட்டதாம். இன்னும் சாவு எண்ணிக்கை வராததால் ஒருவேளை வாரியம் காத்திருக்கிறதென்று நினைக்கிறேன்.
சிப்காட்டை சுற்றி இருக்கும் பகுதிகளில் உள்ள காற்றில் வழக்கத்துக்கு மாறாக 94 வித மாசுக்கள் கலந்திருக்கின்றன. அவற்றில் 15 மிகக்கொடியவை.
இரத்தப்புற்றுநோயை உருவாக்கும் பென்ஸீன் இப்பகுதிகளில் 15 மடங்கு அதிக அளவில் உள்ளது.
இதில் முக்கிய விஷயம், இந்த சோதனைகளை செய்த நேரத்தில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தனவாம். அதற்கே இந்த நிலைமை. அவையும் செயல்பட்டுக்கொண்டி(று)ருந்தால், என்ன நடந்திருக்கும்.
ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தின் முதல் தலைநகரமாக செயல்பட்டு வந்த கடலூர், இன்றும் அழியப்போவதிலும் முதலாவதாகவே உள்ளது.
ஒருவிதத்தில், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் "விடைகொடு எங்கள் நாடே" பாடல் எங்களுக்கும் பொருந்தும். ஒரே ஒரு மாற்றத்துடன் "விடைகொடு எங்கள் உலகே.......பிழைத்தால் வருகிறோம்".
மேலதிகத்தகவல்களுக்கு:
http://www.sipcotcuddalore.com/News_Thaindian_230308.html
http://www.sipcotcuddalore.com/pr_220308.html
Name of Chemical | Highest Level (microgram/m3) | Location | Times above safe levels |
Benzene | 31.174 | Asian Paints | 125 |
Carbon tetrachloride | 72 | Tagros Chemicals | 553 |
Chloroform | 74 | Shasun | 881 |
Methylene Chloride | 133 | Tanfac | 32.5 |
Trichloroethylene | 24 | Aurobindo Chemicals | 21.8 |
:-(