"சிக்னல் வந்துருக்கு லேன்கோ", கத்திக்கொண்டு வருகின்றான் தூர்.
பல ஆண்டுகளுக்கு முன் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ரேடியோ அலைகளுக்கு பதில் வந்திருக்கின்றது.
தூரும் லேன்கோவும் வளர்ந்துவரும் ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் அலுவலகத்தில் லேன்கோவின் உதவியாளனாக வேலை செய்கிறான் தூர்.
"என்னால நம்பவே முடியல தூர், பணத்த விரயம் பண்ணின ஆராய்ச்சிக்கு இப்போ பலன் கிடைச்சிருக்கா?"
"இருக்கலாம். ஆனா இதை decipher செய்ய இன்னும் எவ்வளவு காலம் ஆகும்னு தெரியலயே"
"ஏற்கனவே funds நிறுத்தப்போறதா சொல்லிருக்குற நேரத்துல இது கண்டிப்பா நல்ல செய்தி தான் தூர்"
"சரி இப்போ அடுத்த ஸ்டெப் என்ன?"
"நாமளே decipher பண்ணி பார்க்கலாம். நல்ல இன்ஃபர்மேஷன் கிடைச்சா வேலைய ரிஸைன் பண்ணிட்டு NASA ல போய் ஜாய்ன் பண்ணிடலாம்"
"இல்லைனா?"
"இல்லைனா, வெறும் ரேடியோ நாய்ஸா இருக்கும், ப்ரஸ்மீட்டுக்கு சொல்லிவிடுவோம். புகழ், சூப்பர் போதை"
"லேன்கோ இவ்வளவு தூரம் பேச விட்டது தப்பு, நானும் உனக்கு குறைந்தவன் இல்லை. வா decipher பண்ண ஆரம்பிக்கலாம்."
"எங்க இருந்து ஆரம்பிக்கலாம் தூர்?"
"ஒரு ரேடியோ ரிசீவர்ல போட்டு கேட்டுப்பார்க்கலாம்"
"தூர், உன் பேருக்கேற்ற மாதிரி தூரத்துலதான்டா இருக்க. அந்த சிக்னல ப்ராசசர்ல கொடு. waveform பார்க்கலாம்"
"லேன்கோ, இது வெறும் மாடுலேட்டட் ரேடியோ வேவ்ஸ் மாதிரி இருக்கு"
அறைக்கதவை தள்ளிக்கொண்டு வருகிறாள் தரி.
தரியும் இவர்களுடன் வேலை செய்யும் பெண். விண்வெளியையும் சமயத்தில் லேன்கோவையும் ஆராய்ச்சி செய்பவள்
"என்ன நடக்குது இங்க? கொஞ்சம் நேரம் நிம்மதியா நியூஸ் கேக்க விடுறீங்களா? கேணத்தனமா ரேடியோ ஃப்ரீக்வென்சில உளறிக்கிட்டு இருக்கீங்க"
தூரும் லேன்கோவும் தங்களை ஒருவர் ஒருவர் பார்த்துக்கொண்டு தரியிடம் நடந்ததை விளக்குகின்றனர்.
மூவரும் ஆர்வத்துடன் சிக்னல் ப்ராசசரின் ரேடியோ டீமாடுலேட்டரில் கேட்கிறார்கள்.
"வணக்கம். வேறு கிரகத்தில் இருக்கும் உங்களுக்கு எங்கள் மொழியில் செய்தி அனுப்புவது சிறுபிள்ளைத்தனமானது. இருந்தாலும் சில சமயங்களில் பல கடின விஷயங்களின் விடை மிகச்சுலபமானதாக இருக்கும் என்ற சித்தாந்தத்தின் நம்பிக்கையில் இதை அனுப்புகின்றோம்
இடம்: உலகம், சூரியக்குடும்பத்தின் சச்சரவுப்பிள்ளை
நாள்: அழிவிற்கு சில காலம் முன் அதாவது எங்கள் மத கணக்குப்படி கி.பி. 2045 அறிவியல் கணக்குப்படி 50 கோடியே 45 லட்சத்து 35ம் வருடம்
நான் இளங்கோ என்னுடன் என் நண்பன், அலுவலக பதிவின்படி உதவியாளன் பகதூர், என் அறிவியல் காதலி சுந்தரி.
மனிதர்கள் என்று எங்களை நாங்களே அழைத்துக்கொள்ளும் நாங்கள், நாங்கள் வசிக்கும் உலகத்தை எங்கள் பசிக்கு உணவாக்கிக்கொண்டோம்.
இப்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றோம். ஆகவேதான் நாங்கள் இருந்தோம் என்பதற்கான கடைசி அத்தாட்சியாய், எங்களால் உருவாக்கப்பட்ட அழியா அலையில் இத்தகவலை அனுப்புகின்றோம்.
இதைத்தொடர்வது எங்களைப்பற்றிய தகவல்கள்........
.....
......
இறுதியாக,
தகுதியுள்ளது தப்பிப்பிழைக்கும் என்று கண்டறிந்த எங்களாலேயே தப்பிப்பிழைக்க முடியவில்லை.
உங்கள் தகுதியை காப்பாற்றிக்கொள்ளுங்கள்"
"தூர் இதைப்பற்றி என்ன நினைக்கிறாய்?"
"ஆச்சர்யமாக இருக்கிறது என்பது கிளிஷேவான வார்த்தைதான் இருந்தாலும் இச்சமயத்திற்கு பொருந்துகின்றது"
"என்ன லேன்கோ என்ன ஆச்சு உன் NASA ப்ளான்?"
"இல்லடா, NASA கிரகத்திற்கு போறதவிட நம்ம லகம் கிரகத்தை காப்பாற்றியாகணும்"
"என்ன சொல்ற லேன்கோ? புரியல.."
"என்ன தூர், இன்னுமா லேன்கோ சொல்றது புரியல? இது நம்மளோட 2040வது வருடம். இப்போ நாம சிக்னல்ல கேட்ட உலகம்ங்கர கிரகத்துக்கும் நம்ம லகம் கிரகத்துக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு. கிட்டத்தட்ட அந்த கிரகத்தோட பிரதிபலிப்பு மாதிரி தான் நம்ம கிரகம். அடுத்த 5 வருடங்கள் நம்மோட கடைசி வருடங்களா இருக்கலாம்"
"இப்போ புரியுது லேன்கோ, இந்த கிரகம் ஏன் நம்ம கண்ல படலைனு. இந்த கிரகமே இப்போது இல்லை", என்றான் தூர்.
"கரெக்ட். இந்த சிக்னல் ரொம்ப காலம் முன்னாடி நமக்கு அனுப்பிருக்காங்க. ஸாரி, நமக்குனு சொல்லமுடியாது, அனுப்பிருக்காங்க. இந்த விஷயத்தை எப்படியாவது நம்ம லக மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்த்துடணும். நம்மை காப்பாற்றிக்கணும் தரி" என்றான் லேன்கோ.
"கண்டிப்பா" என்றாள் தரி.
அவரவர் வழியில் யோசித்துக்கொண்டே செல்ல அந்த ரேடியோ டீமாடுலேட்டர் கருவியிலிருந்து "ஆ" என்ற சத்தம் கேட்டது
லேபிள் அறிவியல் புனைகதை, என் எழுத்து
நல்லா இருக்கு. சிறில் கூறிய அறிவியல் சமாச்சாரங்களும் இருக்கு. ரூம் போட்டு யோசிச்சுதல ஒரு வேளை அந்த மூவரும், உலகம் அழியும் தருவாயில் விலக்கப்பட்டு, ஞாபக செல்கள் திருத்தியமைக்கப்பட்டவர்களோ என்றெல்லாம் தோன்ற ஆரம்பிக்க...
On the whole, good effort. All the best.
அனுஜன்யா
//ரூம் போட்டு யோசிச்சுதல ஒரு வேளை அந்த மூவரும், உலகம் அழியும் தருவாயில் விலக்கப்பட்டு, ஞாபக செல்கள் திருத்தியமைக்கப்பட்டவர்களோ என்றெல்லாம் தோன்ற ஆரம்பிக்க... //
இது ரெம்ப ஓவருங்கோ :-)
இது புரியலையே.. நல்லாருக்கு கதை..
அது உலகத்தில் இருந்து பதிவு செய்த குரல். குரலின் சொந்தக்காரர்களுக்கு ஏற்படும் ஆபத்தை குறிக்கிறது :-)