அரசியல் நாசமாய்ப்போக‌ - 1

என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் அரசியல்தொழிலதிபர்கள் (அரசியல்வாதிகள்)?

மக்களுக்கு சேவை செய்ய தங்களுக்குள் அடித்துக்கொள்வோரை வேறெப்படி சொல்வது.

தமிழக மீனவர்களை சுட்டுவீழ்த்திக்கொண்டிருக்கிறது ஒரு படை, அதை எதிர்க்க துப்பில்லை.
மனித உயிர் என்ன அவ்வளவு மலிவா?

சேது சமுத்திரதிட்டத்திற்கு உயிரையும் தர தயாராய் இருக்கும் சில தலைவர்கள் இவ்விஷயத்தை சிந்திக்க இவ்வளவு நாள் எடுத்துக்கொள்வது வினோதமாய் உள்ளது.

சிலர் தமிழகத்தை மறந்து கோடை வாசஸ்தலத்தில் குடிகொண்டுள்ளனர். எனக்கு சத்தியமாக புரியவில்லை. என்ன நடக்கிறது இங்கே.

கொஞ்சம் தெளிவாக யோசிக்க அரசியல்வாதிகளே இல்லையா?

குடும்ப நலனை யோசித்தபின், கேபிள் பிரச்சினைகளை பார்த்தபின், கதை வசனம் எழுதியபின், விழாக்களுக்கு சென்று வந்தபின், கூட்டணி அரசியல் நடத்தியபின் சற்று நேரம் இருந்தால் மக்களை கவனியுங்கள்

17ம் தேதி கூட்டம் கூடுகின்றனர். பார்க்கலாம் என்ன செய்வார்கள் என்று?


கோபங்கள் தொடரும்.

2 Comments:

 1. ஜோசப் பால்ராஜ் said...
  நியாயமான கோபம்.
  ஏற்கனவே நானும் இது குறித்து ஒரு பதிவு எழுதியுள்ளேன்.

  http://maraneri.blogspot.com/2008/07/blog-post_1624.html

  என் பதிவில் சில பெயரிலிகள், நம் மீனவர்கள் கடத்தல் தொழில் செய்வதாலும், எல்லை தாண்டுவதாலும்தான் சுடப்படுவதாக பின்னூட்டம் வேறு இட்டிருந்தார்கள். அந்த அளவில்தான் புரிதல் உள்ளது நம்மவர்களிடம்.
  கிஷோர் said...
  நல்ல கட்டுரை.

  நம் நாட்டில் எதற்கெடுத்தாலும் விளக்கம் கொடுப்பவர்கள் இருக்கும்வரை உருப்படமுடியாது.
  ஒரு செயல் தலைவர் தான் இப்போதைய தேவை.

  வருகைக்கு நன்றி ஜோசப் பால்ராஜ்

Post a Comment

Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.