வால் நட்சத்திரம் பாடல்கள்
ஏற்கனவே நாம் கேட்டு ரசித்த, ஹிந்தி பாடல்களின் தமிழாக்கம் தான்.
அதே ஷங்கர் மஹாதேவன் பாடல்கள். என்ன இந்த முறை பாடல் வரிகள் அவருக்கு சுதந்திரத்தை சற்று குறைத்தது போல் தோன்றுகின்றது. குறிப்பாக "இரயில் பயணங்கள்" பாடலில் என் அம்மா வரிகள் வரும் இடங்கள், ஹிந்தியின் "மேரி மா" போல் அழுத்தமாக இல்லாதது போல் ஒரு உணர்வு.
எனக்கு இந்த முறை பிடித்த பாடல், "பம்பம் பாடு" பாடல், அமீர்கானின் அதே ஆரம்ப பாடலை வைத்துக்கொண்டு அட்டகாசமாக ஆரம்பிக்கின்றது பாட்டு. துள்ளல் சற்றும் குறையாமல் செல்வது மிகப்பெரிய பலம் இப்பாடலுக்கு.
"தொடுவானம்" பாடல் மிக அருமை. அட்டகாசமான பாடப்பட்டுள்ளது.
எல்லா பாடல்களும் நன்றாகவே உள்ளன. :)
ஆக மொத்தத்தில் கடையில் கொஞ்சம் சாப்பிட்ட குலாப் ஜாமூனை வீட்டில் அம்மா செய்தது போல் இருக்கின்றது. அடித்து தூள் கிளப்பலாம்.
இப்படம் தமிழ்நாட்டின் மூலை எங்கும் சென்று சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு எண்ணம்.
வெண்ணிலா கபடி குழு.
முதல் முறை கேட்டபோது பாடல்கள் நன்றாக இருப்பது போல தோன்றுகின்றது. ஒரே ஒரு முறை தான் கேட்டிருக்கிறேன்.
கபடி கபடி பாடல் ஷங்கர் மஹாதேவன் குரலில் பட்டாசாக இருக்கின்றது. ஆனால் புதிதாக பெரிதாக சொல்லும் அளவு இப்பாடல் இல்லை, வழக்கமான பாடல் தான்.
லேசா பறக்குது பாடல் மீண்டுமொரு டெம்ப்ளேட் பாடல். பின்னணியில் ஒலிக்கும் இசை அழகான ராட்சசியே பாடலை நினைவூட்டுகின்றது. பெண்குரல் அட்டகாசம், குழைந்து நழுவி ஓடுகின்றது. இப்பாடலுக்கு நாயகி நம்ம சரண்யாவை நினைத்துப்பார்க்கும் போது பாடல் ஹிட் என்று கண்முன் தெரிகின்றது :) ஜெயம்கொண்டான் படத்தில் சரண்யாவை அந்த பாவனா பாடலில் ஒளிப்பதிவில் ஓரங்கட்டினாலும், அனைவரையும் கவர்ந்ததென்னவோ சரண்யா தான்.
" பட பட " பாடலும் கேட்க நன்றாக உள்ள ஒரு டெம்ப்ளேட் பாடல்.
லேபிள் இசை