ஒவ்வொரு முறையும் துரத்தப்படுகின்றேன்.
உச்சகட்டத்தில் கூட ஒருமுறை
தடுப்புகளற்ற வெளியில் கூட
வழிதெரியாதவாறு துரத்தப்படுகின்றேன்
புள்ளியை நோக்கி வட்டப்பாதையில் ஓடும் நான்
புள்ளியடையும் வழியறிய யாராலோ அல்லது எவரெவராலோ துரத்தப்படுகின்றேன்
துரத்தல் நிற்கப்போவதில்லை
என் ஓட்டமும் நிற்கப்போவதில்லை
ஏனெனில் நானும் எனக்கு முன் ஒன்றை துரத்திச்செல்கின்றேன்
லேபிள் என் எழுத்து, சிறுகவிதை
2 Comments:
Subscribe to:
Post Comments (Atom)
இந்த மூன்று கவிதைகளுமே கொஞ்சம் cynical போலத் தெரிகிறது. தவறொன்றும் இல்லை. உங்கள் சுபாவத்துக்கு ஒவ்வாத மாதிரி இருந்தது. உங்கள் பிற பதிவுகள் நல்ல நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துகையில் இது கொஞ்சம் contrast. ஒருவேளை கவிதை என்றால் சீரியஸ் என்று அர்த்தமோ!
அனுஜன்யா
ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத சில வரிகளை இணைத்தால் ஒரு பின்நவீனத்துவ effect கிடைக்கும் என்று முயற்சி செய்தது.... :-D
மேலும் இது நான் எழுதிய மனநிலை அப்படி இருந்தது. மற்றபடி, கவிதை என்று வந்து விட்டால் அதற்கு வரைமுறையோ எல்லையோ இல்லை என்பது தான் என் கருத்தும். மற்றபடி seriousness தானாக வந்து விட்ட ஒன்று :-)