தமிழ்மணத்தில் கொட்டை தின்று பழம் போட்டவர்கள், இதற்கு மேல் படிக்க தேவை இருக்காது.
இப்பதிவில் தமிழ்மணத்தில் திரைப்பட விமர்சனங்கள் எப்படி முன்வைக்கப்படுகின்றன மற்றும் அதை எப்படி எதிர்கொள்ளலாம் என்பது பற்றி பார்ப்போம்.
விமர்சனங்கள் கீழ்க்கண்ட வகைப்படுகின்றன:
1) மொக்கை படம் கிடைத்தால் அடித்து துவம்சம் செய்வது
2) கண்களை மூடிக்கொண்டு படத்தை புகழ்வது/இகழ்வது
3) நல்ல படமாக இருந்தாலும் கூபாவில் இருக்கும் சிறிய இயக்குனர் டவுசரோ டர்தாழ் கூட இதை விட நன்றாக எடுப்பார் என்று கூறுவது
4) நல்ல படத்தில் உள்ள குறைகளை லென்ஸ் வைத்து பெரிதாக்கி பார்ப்பது
5) விமர்சனம் செய்யும் நோக்கத்துடன் படத்துக்கு செல்லும் வகையினரின் விமர்சனங்கள்
6) பின்நவீனத்துவ ஆராய்ச்சி குரூப்.
7) நானும் படம் பார்த்தேன் வகை
இதை எதிர்கொள்வது எப்படி?
முதலில் உங்கள் விருப்ப நாயகன்/நாயகி நடித்த படமா?
விமர்சனம் படிக்காமல் படம் பார்த்துவிடுங்கள், பின்னர் வந்து நாமும் விமர்சனம் போட்டு இடுகையை சூடாக்கலாம்
படம் நல்ல படமோ என்று மனதிற்குள் காடை சொல்கின்றதா?
முதல் விமர்சனம் வந்துவிட்டதா? முதல் மற்றும் கடைசி வரிகளை படியுங்கள்
பல விமர்சனங்கள் வருகின்றனவா? தலைப்பை மட்டும் படியுங்கள்.
என்ன புக்மார்க் செய்ய யோசிக்கிறீர்களா? வேண்டாம். பொறுங்கள். அனைத்து விமர்சனங்களையும் பதிவு செய்து ஒரு இடுகை வரும். அதை புக்மார்க் செய்யுங்கள்.
படத்தை போய் பாருங்கள். நன்றாக இருக்கின்றதா? தயவு செய்து அதை கெடுக்காமல் நல்ல பிள்ளை போல் புக்மார்க் செய்த விமர்சனங்களை மட்டும் படித்துக்கொண்டிருங்கள்.
நன்றாக இல்லையா? தொடரட்டும் உங்கள் பதிவுலக சேவை
படம் மட்டமான படம் என்று தோன்றுகின்றதா?
சும்மா புகுந்து விளையாடுங்க. எல்லா விமர்சனத்தையும் ஒரு வார்த்தை விடாம படிங்க. எழுத்துப்பிழையைக் கன்டரிந்து பின்னூட்டம் போடுவது மிக முக்கியம். கொஞ்சம் நேரத்தில் படம் பார்க்காமலே ஒரு இடுகை இடும் அளவிற்கு உங்கள் பட அறிவு உயர்ந்துவிடும்.
இது தான் சரியான சமயம். காலை 10 மணிக்கு படத்தை பற்றி ஒரு பதிவிடுங்கள். பின்னூட்ட மட்டுறுத்தலை சற்று நேரம் அணைத்து விட்டு படத்துக்கு செல்லுங்கள். இப்படத்தை இதை விட யாராலும் ரசிக்க முடியாத அளவிற்கு படம் பிடித்துப்போகும்.
படம் முடிந்ததா? ஒரு மோர் அல்லது லெமன் ஜூஸ் குடியுங்கள். ஹேங் ஓவரை சற்று குறைக்கும்.
வீட்டுக்கு வந்து தமிழ்மணத்தை திறந்துபாருங்கள். உங்கள் இடுகை சூடான இடுகை ஆகியிருக்கும். உங்கள் பதிவை திறந்து பாருங்கள். பல பின்னூட்ட அனானிகள் மட்டரகமாய் வந்திருக்கும். அனைத்தையும் அழித்துவிட்டு மற்றவற்றைப்பாருங்கள். கண்டிப்பாக உங்கள் இடுகையில் பின்நவீனத்துவம் பற்றி ஒரு பெரிய கதாகாலட்சேபமே நடந்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
படம் பற்றி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லையா?
லக்கிலுக் போன்றொரின் விமர்சனங்களை படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்.
ரொம்ப மொக்கை போடுகிறதா?
பழைய பட விமர்சனங்களை படித்துப்பாருங்கள். அதிலும் படத்தை பி.ஹெச்.டி செய்யும் அளவிற்கு இருக்கும் பதிவுகளை படித்துப்பாருங்கள். செம காமெடியாக இருக்கும்.
உனக்கேன் இவ்வளவு அக்கறை? ஊரில் யாருக்கும் இல்லாத அக்கறை?
நானே பாதிக்கப்பட்டேன், நானே பதிவிடுகிறேன்.
இதுவரை
வகைகள்
- அரசியல் (7)
- அறிவியல் புனைகதை (1)
- அனுபவம் (5)
- இசை (2)
- இலங்கை (6)
- ஊடகம் (3)
- ஊர் சுற்றி புராணம் (2)
- என் எழுத்து (14)
- கடலூர் (5)
- கடவுள் (1)
- கவிதை பவன் (2)
- காதல் (1)
- கிரிக்கெட் (1)
- கிறிஸ்துமஸ் (2)
- கொஞ்சம் பெரிசு (1)
- கோபங்கள் (4)
- சிங்கை (4)
- சிரிப்பு (1)
- சிறுகதை (1)
- சிறுகவிதை (5)
- சினிமா (8)
- சுஜாதா (2)
- செயின்ட் ஜோசஃப் (2)
- செய்தி (1)
- ட்விட்டர் (2)
- தமிழ (1)
- தமிழாக்கம் (1)
- தமிழ் (1)
- தமிழ்மணம் (3)
- படித்தது (3)
- பதிவர் சந்திப்பு (1)
- புத்தகம் (4)
- புலம்பல் (13)
- ப்ளாகதை (2)
- மதிப்பீடுகள் (1)
- மன்னார்குடி டேஸ் (1)
- மொக்கை (3)
- வரலாறு (1)
- விளையாட்டு (1)
தமிழ்மண பட விமர்சனங்களை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ரவிசங்கர் என்ற பதிவர் எழுதும் விமர்சனங்கள் தவிர்த்து வேறெந்த பதிவரின் விமர்சனங்களையும் நான் ரொம்ப டீப்பாக வாசிப்பதில்லை.
சினிமா என்பது கொண்டாடுவதற்கு. அதை விமர்சன மனநிலையோடு பார்த்தோமானால் கொண்டாட்டத்தை இழந்துவிடுவோம்.
நான் ஒவ்வொரு படம் பார்க்கும் போதும் தமிழ்மணம், தேன்கூடு இதையெல்லாம் முற்றிலுமாக மறந்துவிட்டு சாமானிய ரசிகனாகவே பார்க்கிறேன். அதனால் தானோ என்னவோ என்னால் சினிமாவை கொண்டாட முடிகிறது.
//சினிமா என்பது கொண்டாடுவதற்கு. அதை விமர்சன மனநிலையோடு பார்த்தோமானால் கொண்டாட்டத்தை இழந்துவிடுவோம்.//
உண்மை உண்மை. அதனால் தான் எல்லாவற்றையும் விட நான் உங்கள் விமர்சனத்தை அதிகம் மதிக்கிறேன்
//தமிழ்மண பட விமர்சனங்களை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை//
உண்மை தான் லக்கி, ஆனா இப்படி எல்லாம் யோசிச்சாதானே புதுசு புதுசா இடுகை போட முடியுது. :)
போட்டாச்சு.
கன்டரிந்து = கண்டறிந்து
:-))))
பிகு:
எந்தப் படமா இருந்தாலும் நான் பார்க்குமுன் விமரிசனங்களைப் படிப்பதே இல்லை.
முன்முடிவு இல்லாமப் பார்ப்பேன்.
அடடே
//எந்தப் படமா இருந்தாலும் நான் பார்க்குமுன் விமரிசனங்களைப் படிப்பதே இல்லை.
முன்முடிவு இல்லாமப் பார்ப்பேன்.//
கரெக்ட். நான் கல்லூரியில் படிக்கும்போது, பசங்க கதை சொல்லக்கேட்டு பிடிக்காமல் போன படங்கள் ரன், தூள். :(
:-))
நல்ல பதிவு. மிகச் சிலரைத் தவிர்த்து பெரும்பாலான பதிவர்கள் சராசரி சினிமாவின் ரசிகர்களே. கொஞ்சம் அதிமேதாவித்தனம் காண்பிக்கவும், பின்நவீனத்துவம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்ற அசட்டு நம்பிக்கையிலும், சினிமா எடுப்பதின் நுட்பங்கள் சிறிதும் அறியாமல் நிறைய பதிவுகள் வருவது வேடிக்கை.
அனுஜன்யா