சிங்கப்பூரின் முதன்மை பல்கலைக்கழகங்களில் ஒன்றான Nanyang Technical University(NTU) -கு திரு. அப்துல்கலாம் 26.08.2008 அன்று வருகை புரிந்தார். அங்கு வந்த அவரை மாணவ மாணவியர் சூழ்ந்து முற்றுகையிட்டனர். இதுபோன்ற சம்பவங்களை அடிக்கடி சந்திக்காத காவல்துறை கடைசியில் செல்லமாக கூட்டத்தைக்கலைத்தனர்.பல்கலைகழக மாணவ மாணவிகள் மற்றுமன்றி ஏராளமான பொதுமக்களும்(நான் இந்த Category) இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சிங்கப்பூர் அதிபர் எஸ் ஆர் நாதன் தலைமை தாங்கினார்.

கலாம் உட்பட மேலும் 3 பேருக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. கலாம் மற்றும் Professor Yang Chen Ning, Nobel Laureate in Physics, 1957-க்கு Degree of Doctor of Engineering (honoris causa) பட்டமும். Professor Chua Nam Hai, Andrew W. Mellon Professor and Head, Laboratory of Plant Molecular Biology at the Rockefeller University, Professor Jose Luis Encarnacao, Fraunhofer Institute for Computer Graphics - க்கு Degree of Doctor of Science (honoris causa) பட்டமும் அளிக்கப்பட்டன. ஆனால் கலாமுக்கு மட்டும் சிறப்பு விழா எடுத்து சிறப்பித்தது அரசு :) .


கலாம் வழக்கம் போல் எளிமையில் கவர்ந்தார். குழந்தைத்தனமான அவரது சிரிப்பு, அட்டகாசம்.

கலாமை வரவேற்றுப்பேசியவர். கலாம் தான் தனக்கு ரோல்மாடல் என்று சொல்ல, அரங்கம் அதிர்ந்தது.

கலாம் பட்டத்தை ஏற்றுவிட்டு உடனே இருக்கைக்கு உட்காரச்சென்றார். ஆனால் உடனிருந்த இன்னொருவர், கலாமின் கையைப்பிடித்து மேடைக்கு நடுவில் புகைப்படக்காரர்களுக்காக நிறுத்தினார். கலாம் நாக்கை வெளியில் நீட்டி வெகுளித்தனமாக சிரித்ததை அரங்கில் வைக்கப்பட்டிருந்த ப்ரொஜெக்டர் வழியே பெரிதாக்கி காட்ட, அனைவரும் அவரது நகைப்பை ரசித்து கைதட்டினர்.

இந்தியப்பெண்கள் பலபேர் சேலையில் வந்திருந்தது நெகிழ்ச்சியாக இருந்தது. வரும்போது ஒரு தம்பதி கலாம் பார்த்துவிட்டு வந்ததை பெருமையோடு வீட்டிற்கு ஃபோன் செய்து பேசியது மற்றுமொரு நெகிழ்ச்சியான தருணம்.

ஓவர் டூ கலாம்.
கலாம் எடுத்த எடுப்பிலேயே தன்னைப்பற்றி சில கதைகள் சொல்லப்போவதாக கூறி ஆரம்பித்தார்.
அவர் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்தபோது Lowlevel attack aircraft project
செய்தபோது இவரது டீம் செய்த முதல் படி, புரபோசர் ஸ்ரீனிவாசனின் கவனத்தை ஈர்க்காத‌தால், ஸ்ரீனிவாசன் கலாமுக்கு 3 நாட்கள் அவகாசம் கொடுத்து முடித்துத்தரச்சொன்னாராம். இதை சொல்லிக்கொண்டு இருந்த நேரத்தில் அருமையான நகைச்சுவை ஒன்றை எடுத்து விட்டார்.

Quotes of what Kalam said,
"Sreenivasan told me, 'Look youngman', remeber it was in 1954 , 'you have to finish this project before monday otherwise your scholoship will be cut' "

பின்னர் கலாம் காட்டுத்தனமாக உழைத்து அதை வெற்றிப்பாதையில் அழைத்துச்சென்றபோது ஸ்ரீனிவாசன் அதை பாராட்டியதையும் நினைவுகூர்ந்தார்.

வெற்றியை பற்றி சொல்லும்போது அடக்கி வாசித்தது குறிப்பிடத்தக்கது.

கலாம், 21ம் நூற்றாண்டில் பல்கலைக்கழகங்கள் உயர் தொழ்ற்நுட்ப உலகில் நல்ல குடிமகன்களை உருவாக்குவதில் எப்படி பங்களிக்கவேண்டும் என்பது பற்றி கூறினார்.

நாட்டின் தலைவர்களிடம் கல்வியின் பங்கு பற்றியும், கல்வியில்லாத நாட்டுத்தலைவரால் பிரச்சினைகளை திறம்பட கையாளும் திறம் குறைவு என்றும் கூறினார்.

கண்டுபிடிப்புகளுக்கு திறமையாகவும், எப்போதும் சிந்திக்கும் மனமும் உந்துகோளும் தேவை என்றார்.

சிங்கப்பூரின் கல்வி தரத்தை பாராட்டிப்பேசினார்.

கட்டண உயர்வுகளையும் அதை சமாளிக்க வேண்டிய உதவிகளையும் பற்றிக்குறிப்பிட்டார்.

NTU தற்சமயம் கலந்துகொண்டிருக்கும் முக்கிய ப்ராஜெக்டுகள் பற்றியும் சுருக்கமாக எடுத்துரைத்தார்.

ஆக சிங்கப்பூரிலும் கலக்கினார் தலைவர்.

16 Comments:

 1. வேளராசி said...
  அருமையான பதிவு,வாழ்த்துக்கள்
  கிஷோர் said...
  நன்றி வேளராசி...
  துரை said...
  நல்ல தகவல், கலாம் இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரி
  கிஷோர் said...
  நன்றி துரை
  வடுவூர் குமார் said...
  அப்பாடி! நீங்களாவது போட்டீர்களே,நன்றி.
  நகர்படம் பிடித்துவைத்துள்ளேன்,முடிந்தால் ஏற்றுகிறேன்.
  தீலிபன் said...
  அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்.
  கிஷோர் said...
  //அப்பாடி! நீங்களாவது போட்டீர்களே,நன்றி.//

  அதெப்படி விட்டுட முடியும்?
  நீங்களும் வந்திருந்தீங்களா?
  கிஷோர் said...
  மிக்க நன்றி தீலிபன்
  Hari Raj said...
  அருமை!!!!
  கிஷோர் said...
  நன்றி Hari Raj
  கிரி said...
  சிறப்பான பதிவு, கலாம் அவர்களின் நிகழ்ச்சியை ரசிக்கும் படி எழுத்து வடிவில் கொடுத்த உங்களுக்கும் பாராட்டுக்கள்
  கிஷோர் said...
  நிஜமாவா கிரி?
  ரொம்ப நன்றிங்கோ.

  நானும் எப்படியாவது ஒரு பதிவர் சந்திப்பாவது கலந்துக்கணும்னு பார்க்கறேன். முடியல... :(

  குறைந்தது வடுவூரார் ஊரை காலி செய்வதற்குள் பார்த்துவிடவேண்டும் :)
  'டொன்' லீ said...
  //அப்பாடி! நீங்களாவது போட்டீர்களே,நன்றி.//

  அதெப்படி விட்டுட முடியும்?
  நீங்களும் வந்திருந்தீங்களா//

  அடடா நீங்களுமா...?
  கிரி said...
  //கிஷோர் said...
  நிஜமாவா கிரி?//

  சந்தேகமே வேண்டாம் அதற்க்கு நீங்கள் கூறிய "கலாம் நாக்கை வெளியில் நீட்டி வெகுளித்தனமாக சிரித்ததை அரங்கில் வைக்கப்பட்டிருந்த ப்ரொஜெக்டர் வழியே பெரிதாக்கி காட்ட, அனைவரும் அவரது நகைப்பை ரசித்து கைதட்டினர்." இது ஒன்றே போதுமானது.

  தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்

  //குறைந்தது வடுவூரார் ஊரை காலி செய்வதற்குள் பார்த்துவிடவேண்டும் :)//

  செப்டம்பர் மாதம் இடையில் ஒரு பதிவர் சந்திப்பு இருக்கும் கண்டிப்பா வந்து கலந்துக்குங்க
  கிஷோர் said...
  //அடடா நீங்களுமா...?//

  ஆஹா ஆமப்பா, நானும் வந்திருந்தேன். நமக்கு கொஞ்சம் கவரேஜ் குறைஞ்சிடுச்சு :)
  கிஷோர் said...
  ரொம்ப நன்றி கிரி. சந்திப்பில் சந்திப்போம்

Post a Comment

Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.