நிறைய கவிதைகள் பாடப்பட்டன. எல்லா தொலைக்காட்சிகளும் நேரடியாய் குண்டுவெடிப்புகளை காட்டின. அரசியல்வாதிகள் அவசர அவசரமாக நிறைய உளறிக்கொட்டினர். மக்கள் எழுச்சி அது இதுவென்று தொலைக்காட்சிகள் பேசின. அடுத்த வருடம் 1 நிமிடம் அமைதி காக்க இன்னொரு நாள் கிடைத்தது. 30 நாட்களுக்குள் மக்கள் இந்த விஷயங்களை மறந்து போவார்கள். அடுத்த தேர்தலில், எதிர்கட்சிகள் இந்நிலையை நினைவுபடுத்துவர்.
மும்பை குண்டுவெடிப்பின் மொத்த உயிரிழப்பு இன்று வரை 217.
வாரணம் ஆயிரம், அழகாக எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் கதை நகரவேண்டிய இலக்கை இழந்ததால், பாதிப்பை ஏற்படுத்தவில்லை. வழக்கம்போல் அழகான காதல்காட்சிகளும், ஹாரிஸ் உபயத்தில் கலக்கலான பாடல்களும் படத்தை இரவு 1 மணி காட்சியில் பார்த்தாலும் சலிப்பலிக்கவில்லை. சிம்ரனை நட்டநடு இரவில் பார்த்து பயப்படுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.
நீண்ட நாட்களாக படிக்காமல் வைத்திருந்த டான் ப்ரௌனின் "டிசெப்ஷன் பாயிண்ட்" படித்துக்கொண்டிருக்கிறேன். இரு அமெரிக்க ஜனாதிபதி கேண்டிடேட்களுக்கு இடையில் நடைபெறும் போட்டி என்பதால், புஷ்ஷும் ஒபாமாவும் அழகாக கதையில் ஒட்டிக்கொள்கிறார்கள் (கொள்கைரீதியாக இல்லை)
அலுவலகத்தில் இருப்பதிலேயே கடினமான காரியம், ஒரு வேலையை விட்டு மறுவேலைக்கு செல்லும் நேரம்தான். பழகிய முகங்கள், பழகிய இருக்கை, இவற்றை பிரிந்து செல்வதில் இருந்து, மேலிட ஆப்புகள் வரை சமாளிக்க தனியாக உடல் வளர்க்கவேண்டும்.
சிங்கையில் SITEX என்னும் வருடாந்திர IT Fair நடைபெற்றது. வழக்கம்போல் ஒரு பெரிய ஆஃபரும் இல்லை. USB Thumb Drive மற்றும் சில சீன எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஒவ்வொரு முறை செல்லும்போதும் விலை குறைந்துகொண்டிருக்கின்றன. போன மாதம்தான் ஒரு டெல் லாப்டாப் வாங்கியதால், இந்தமுறை எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்புகளும் இல்லாமல்தான் சென்றேன்.
வழக்கம்போல் ஒரு கவிதை:
ஒவ்வொரு இடிந்த கட்டிடமும்,
கட்டிய வரலாற்றை விட,
இடிந்த சரித்திரத்தையே
சத்தமாக உரைக்கின்றன.
லேபிள் அனுபவம்
// சிம்ரனை நட்டநடு இரவில் பார்த்து பயப்படுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை //
என்னா ஒரு வில்லத்தனம்...
// 30 நாட்களுக்குள் மக்கள் இந்த விஷயங்களை மறந்து போவார்கள் //
இது கொஞ்சம் அதிகமாத்தெரியுதே....இப்பவே பல பேரு மறந்திருப்பாங்க..(டீவிலயும் லைவ் டெலிகாஸ்ட் கெடையாதில்ல)..அதிகபட்சம் 10 நாள்தான்....
தொரை இங்கிலிபிஷ் புக்கெல்லாம் படிக்குது..அடுத்த தடவ பாக்கறப்ப எனக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்கப்பா...
:-)))...
ஆயில் ப்ரிண்ட் புக்குனு(அப்படின்னா என்னனு தெரியும் இல்ல?) நெனச்சி வாங்கிட்டேன் தல :(
//இப்பவே பல பேரு மறந்திருப்பாங்க//
கா.க.க.போ (காரியத்தை கச்சிதமாக கவ்விக்கொண்டீர் போங்கள் :))