தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவின் கார் தாக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி வந்திருக்கிறது,

இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், தாக்கியவர்கள் கண்டிப்பாக வழிப்பறி செய்பவ்ர்களாக இருக்கமாட்டார்கள். கண்டிப்பாக ஏதேனும் ஒரு கட்சியை சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

என்னங்கடா மனசுல நெனச்சிகிட்டு இருக்கீங்க?

ஒரு கட்சி, எம்.எல்.ஏ பதவி இதெல்லாம் மக்களுக்கு சேவை செய்யறதுக்காக இருக்கணும் அத விட்டுட்டு ஏதோ காண்ட்ராக்ட் பிசினஸ் மாதிரி பண்ரதுக்கு, நீங்கள்ளாம் ___________ பொழைக்கலாம்.

மக்களுக்கு சேவை செய்யறதுக்கு இவ்வளவு அடிச்சுக்கறீங்களே ரொம்ப பெருமையா இருக்கு.

போலீஸ் என்ன செய்யுதுனு தெரியல, சம்பவத்தின் புகார் கூட எடுக்க மறுத்துவிட்டார்களாம்.

அமைச்சர்கள் இரண்டு வாரமாக இங்கு தங்கி ஓட்டு சேகரித்துவருகின்றனராம். உங்களை அமைச்சராக்கி அழகு பார்த்தத்ற்கு நல்ல முக்கியமான காரியம் செய்து கொண்டிருக்கிறீர்கள். நன்றிகள் பல.

கவிதை மட்டுமே எழுதும், தமிழினத்தலைவருக்கு குறிப்பிட்ட திசையில் இருந்து வரும் செய்திகள் கண்ணுக்கு தெரிவதில்லையாம், காதில் விழுவதில்லையாம். அவருக்கு உடல்நிலை குணமாக இறைவனை மனமாற ப்ரார்த்திக்கிறேன்.

சில கட்சிகள் செய்யும் வன்முறையை பார்த்தும், அவர்களுக்கு ஓட்டு போடும் மக்களை 24 மணி நேரமும் மின் தடை செய்தாலும் தப்பில்லை.

வாழ்க ஜனநாயகம்

12 Comments:

 1. நட்புடன் ஜமால் said...
  \\அரசியல் நாசமாய்ப்போக\\

  கூடாது

  புது அரசியல் அமைப்போம் ...
  நட்புடன் ஜமால் said...
  \\சில கட்சிகள் செய்யும் வன்முறையை பார்த்தும், அவர்களுக்கு ஓட்டு போடும் மக்களை 24 மணி நேரமும் மின் தடை செய்தாலும் தப்பில்லை.\\

  வன்முறையற்ற கட்சிகள் ஏதும் இருந்தால் சொல்லுங்களேன்

  ஓட்டு போடுவோம் ...
  நட்புடன் ஜமால் said...
  உங்களை நக்கல் செய்ய கேட்கவில்லை அவ்வாறு ...

  வேறு வழியில்லையே என்று வருத்தத்தில் கேட்கிறேன் ...
  Kishore said...
  ஹும்ம்ம் புரிகிறது. ஆனால் என்ன செய்வது?
  மாற்றங்கள் நம் மனங்களில் துவங்கவேண்டும்
  கோவி.கண்ணன் said...
  மூன்றாவது வருங்கால தமிழக பெண் முதல்வரை தாக்கியவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்
  Kishore said...
  //மூன்றாவது வருங்கால தமிழக பெண் முதல்வரை தாக்கியவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்//

  வாழ்க :) :)
  ஜோதிபாரதி said...
  தமிழகத் அரசியல் தலைவர்களும் அவர்களின் தீவிரத் தொண்டர்களும், நல்லவர்கள். உருப்புட மாட்டாங்க.
  Kishore said...
  //தமிழகத் அரசியல் தலைவர்களும் அவர்களின் தீவிரத் தொண்டர்களும், நல்லவர்கள். உருப்புட மாட்டாங்க.//

  ஆமா ரொம்ப நல்லவங்க :)
  வடுவூர் குமார் said...
  இதை + ஆக மாற்ற விஜயகாந்துக்கு ஒரு சான்ஸ்.
  Kishore said...
  //இதை + ஆக மாற்ற விஜயகாந்துக்கு ஒரு சான்ஸ்.//

  அவங்களுக்கு அவ்வளவா அடி இல்லையாம் :(

  http://www.deccanchronicle.com/chennaichronicle/Home/HomeDetails.asp
  ’டொன்’ லீ said...
  வடிவேல் சதியா இருக்குமோ..?
  :-)
  கிஷோர் said...
  //வடிவேல் சதியா இருக்குமோ..?//


  :-)

Post a Comment

Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.