ஜூன் 27, 1976ல் இஸ்ரேலில் இருந்து ஏதென்ஸ் வழியாக சென்றுகொண்டிருந்த பாரிஸ் சென்றுகொண்டிருந்த ஏர் ஃப்ரான்ஸ் விமானத்தை 2 பாலஸ்தீனிய தீவிரவாதிகள் உகாண்டாவிற்கு ஒரு போண்டா போல் கடத்திச்சென்றனர். அதை இஸ்ரேல் சமாளித்தவிதம் ஒரு த்ரில்லர் திரைப்படத்திற்கு இணையானது. இந்த சமயத்தில் இதை பதிவது காஸா விஷயத்தில் இஸ்ரேலுக்கு மல்லுக்கட்டுவது போல் ஆகிவிடக்கூடும் தான் இருந்தாலும். எல்லாவற்றையும் மக்கள் எப்போதும் மறந்துவிடுபவர்கள் என்பதால் தொடர்கிறேன்
ஏர் ஃப்ரான்ஸ் 139 விமானம் இஸ்ரேலில் இருந்து ஜூன் 27, 1976ல் பாரிஸ் கிளம்பியது. 246 பயணிகளும் 13 விமானக்குழுவும் இருந்த அந்த விமானம் இஸ்ரேலில் இருந்து கிளம்பியதும் கடத்தப்பட்டது. இந்தியா என்றால் பாகிஸ்தான் என்பது போல், இஸ்ரேல் என்றால் பாலஸ்தீனர்கள். இந்த விமானத்தை கடத்தியதும் 2 பாலஸ்தீனர்கள் மற்றும் 2 ஜெர்மானியர்கள் அடங்கிய ஒரு குழு. இந்த கடத்தலுக்கு உகாண்டா அதிபர் இடி அமின் உடந்தையாக இருந்திருக்கிறார்.
கடத்திய விமானம் முதலில் லிபியா கொண்டு செல்லப்பட்டது. அங்கு சுமார் 7 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. லிபியாவில் விமானத்திற்கு தேவையான எரிபொருள் நிரப்பி உகாண்டா செல்ல ஆயத்தமானது விமானம். இதற்கிடையில் ஒரு பெண் தான் கருவுற்றிருப்பதாகவும் அது கலைந்துவிட்டதாகவும் கூறி லிபியாவிலேயே இறங்கி தப்பித்ததும் நடந்தது.
பின் உகாண்டா சென்று சேர்ந்தது ஏர் ஃப்ரான்ஸ் விமானம். பிறகுதான் கட்த்திய தீவிரவாதிகள் தங்கள் வேலையைக் காட்டத்துவங்கினர். எதிர்பார்த்தபடி பணயத்தை அறிவித்தார்கள். ஆனால் அது கிட்டத்தட்ட நடக்க இயலா விஷயமாகவே இருந்தது. அவர்கள் கேட்டது.
- இஸ்ரேலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 40 பாலஸ்தீனர்களை விடுவித்தல்
- கென்யா, ஃப்ரான்ஸ், சுவிட்ஸர்லாந்து, மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள 13 தீவிரவாதிகளி விடுவிப்பது
இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ளாவிடில், ஜூலை 1 முதல் பயணிகளை கொன்றுவிடப்போவதாக அறிவித்தனர். இடையில் உள்ள நாட்கள் 3. ஆனால் இதில் எதிர்பார்க்காத மற்றொரு முகத்தையும் காட்டினர் கடத்திய தீவிரவாதிகள். யூதர்களையும், யூதர் அல்லாதவர்களையும் தனியாக பிரித்தனர். இது ஒன்றே போதுமானதாய் இருந்தது, கடத்தப்பட்டவர்களின் திகிலூட்ட.
ஒரு வழியாக பயணிகளை வெளியேற்ற ஒப்புக்கொண்டனர். ஆனால் யூதரல்லாதவர்களையும் விமானக்குழிவையும் மட்டும். என்டெபியில் இதற்கென தயாராக இருந்த மற்றொரு ஏர் ஃப்ரான்ஸ் விமானத்தில் இவர்களை ஏற்றிச்செல்ல முடிவெடுத்தனர். விமானததின் கேப்டன் மைக்கேல் பகோஸ், "இந்த விமானத்தின் அனைத்து பயணிகளும் என் பொறுப்பு. அவர்களின்றி நான் செல்ல மாட்டேன்" என்றார். மற்ற விமானக்குழுவினரும் இதை ஆமோதித்தனர். ஒரு ஃப்ரெஞ்சு கிறிஸ்தவ கன்னிகாஸ்திரியும் செல்ல மறுத்து தனக்கு பதிலாக வேரொறுவரை வெளியேற்றுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் உகாண்டா வீரர்கள் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இப்போது விமானத்தில் இருந்தது 80 யூதப்பயணிகளும் 20 மற்றவர்களும்.
இதற்கிடையில் நம்மூரைப்போல் செயற்குழு, பொதுக்குழு, பிரதமருக்கு தந்தி, ஜனாதிபதிக்கு கடிதம் ஏதும் இல்லாமல், இஸ்ரேல் அரசு வேறொரு வேலையில் மும்முரமாக இருந்தது. ஜூலை 1ம் தேதி நெருங்கிவிட்டதால், இஸ்ரேல் அரசு இன்னும் கொஞ்சம் அவகாசம் கேட்டது. அதாவது ஜூலை 4 வரை ஒத்திவைக்குமாறும், தாங்கள் பரிசீலித்துக்கொண்டிருப்பதாகவும் கூறியது. இந்த நேரத்தில் உகாண்டா அதிபர் இடி அமினும் ஒரு அரசுமுறைப்பயணமாக மொரீஷியஸ் வரை செல்ல வேண்டி இருந்ததால் அவர், அந்த தீவிரவாதிகளை ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டார். கிடைத்த இந்த 3 நாட்களை கொண்டு ஒரு ஆபத்தான திட்டத்தில் இறங்கியது இஸ்ரேல்.
இஸ்ரேல் ராணுவத்தின் Yekutiel "Kuti" Adam, Matan Vilnai, ,Brigadier General Dan Shomron அடங்கிய படை ஒன்று திரட்டப்பட்டது. அந்த படை தீட்டிய திட்டம் ஆபரேஷன் என்டெபி. திட்டம் என்னவென்றால் இஸ்ரேல் ராணுவ விமானங்கள் திருட்டுத்தனமாக உகாண்டாவின் என்டெபிக்குள் நுழைந்து பணயக்கைதிகளை காப்பாற்றுவது. இது கிட்டத்தட்ட அசாத்தியமான ஒரு விஷயம். ஏனென்றால் இஸ்ரேலுக்கு கிடைத்த உதவிகள் அப்படி.
- இஸ்ரேல் தனக்கு அருகாமையில் இருக்கும் அனைத்து நாடுகளுடனும் சண்டையில் இருந்தது. நல்ல காலத்திலேயே அண்டை நாடுகள் எப்போதும் உதவுவதில்லை. இதில் பிரச்சினையில் இருக்கும்போது கேட்கவே வேண்டாம்.
- எனவே இஸ்ரேலின் முதல் சவால், அண்டை நாடுகளின் வானத்தை விமானப்பயன்பாட்டுக்கு உபயோகிக்காமல் இருக்கவேண்டும்.
- அவ்வளவு தூரம் சென்று மீண்டும் இஸ்ரேல் திரும்ப எரிபொருள் கட்டாயம் பத்தாது. எந்த நாடும் எரிபொருள் நிரப்ப அனுமதிக்காது. மேலும் இந்த ஆபரேஷன் ஒரு மிக ரகசியமான ஒரு விஷயம்.
- என்டெபியில் விமான ஓடுதளத்தை அவர்கள் உதவியின்று பயன்படுத்த வேண்டும். என்டெபி விமானநிலையம் ராணுவத்தால் பாதுகாக்கப்பட்டதால் இதுவும் அவ்வளவு எளிதல்ல.
இத்தனை சவால்களையும் மீறி விமானநிலையத்துக்குள் நுழைந்தாலும், அவர்களை எப்படி தேடுவார்கள் என்கிறீர்களா? அங்குதான் இருந்தது ஒரு அல்வாத்துண்டு போன்ற ஒரு விஷயம். உகாண்டாவின் என்டெபி விமான நிலையத்தை வடிவமைத்து கட்டியது ஒரு இஸ்ரேலிய கம்பெனி. இது போதுமே, அனைத்தையும் முடிக்க. கிட்டத்தட்ட அந்த கம்பெனியிடம் இருந்து வடிவமைப்பைப் பெற்றுத்தான் இந்த திட்டமே தீட்டப்பட்டது எனலாம். அந்த வடிவமைப்பைக்கொண்டு இஸ்ரேலில் ஒரு மாதிரி அமைத்து அங்கு ஒரு சோதனை செய்து பின்னரே களத்திற்கு கிளம்பினர்.
முதல்கட்டமாக அவர்கள் தேர்ந்தெடுத்த பாதை, கிட்டத்தட்ட 100 அடிக்குள்ளான உயரத்தில் செங்கடல் வழியாக எகிப்து, சூடான் மற்றும் சவுதி அரேபியாவின் ரேடார் பார்வையில் இருந்து தப்பித்தது. பின் செங்கடல் இறுதியில் வலதுபுறம் திரும்பி ஏடென் வழியாக கென்யாவின் நெய்ரோபி விமானநிலையத்தை வந்தடைந்தன இஸ்ரேலிய ராணுவ விமானங்கள். அங்கிருந்து விமானங்கள் நேரடியாக என்டெபியை நோக்கி புறப்பட்டன.
என்டெபியில் கடைசியாக ஒரு மெகா நாடகத்தை நடத்தியது. என்டெபியில் முதலில் ஒரு விமானத்தை தரை இறக்கியது. சற்று முன் தரை இறங்கிய வேறு ஒரு விமானத்திற்காக போடப்பட்ட ஓடுபாதை விளக்குகளை பயன்படுத்தி இஸ்ரேலிய விமானம் இறங்கியது.
மொரீஷியஸ் சென்றிருந்த இடி அமின் வந்துவிட்டதைப்போல் தோற்றப்படுத்த, அவர் எப்போதும் பயன்படுத்தும் கருப்பு நிற மெர்சிடிஸ் கார் ஒன்று விமானத்தில் எடுத்துச்செல்லப்பட்டிருந்தது. அந்த காரை விமானத்தில் இருந்து தரை இறக்கி, அதில் இடி அமின் போல தோற்றம் கொண்ட ஒரு இஸ்ரேலிய கமாண்டோவை இருக்க வைத்து, பின்னால் சில கார்கள் புடைசூழ விமான நிலையத்தில் நுழைந்தது கார். உள்ளே இருந்த ராணுவம் இடி அமின் வருவதாக நினைக்க வைக்கவும், அவர்களுக்கு சுதாரிக்க நேரம் கொடுக்காமலும் இருக்க இந்த நடவடிக்கையை செய்தது இஸ்ரேல்.
ஆனால் விதி வேறு விதமாய் இரண்டு பாதுகாவலர்கள் ரூபத்தில் காத்திருந்தது. இஸ்ரேல் எடுத்து வந்திருந்தது கருப்பு நிற கார். ஆனால் மிக சமீபத்தில் இடி அமின் தனது காரை வெள்ளையாக மாற்றி இருந்தார். மேலும் தன் காருக்கு பின்னால் கார்கள் ஏதும் வரவேண்டாம் என்றும் உத்தரவிட்டிருந்தார். இதை நன்கு அறிந்த அந்த பாதுகாவலர்கள், வந்த காரை நோக்கிச்சுட்டனர்.
இது மற்றவர்களை உசுப்பிவிடாமல் இருக்கும் பொருட்டு, இஸ்ரேல் ராணுவம் உடனடியாக களத்தில் இறங்கியது. அவர்கள் முன்னரே போட்டு வைத்திருந்த திட்டப்படி அனைவரையும் அடித்து நொறுக்கி 30 நிமிடங்களில் அனைத்து பணயக்கைதிகளையும் காப்பாற்றி, விமானம் மீண்டும் கிளம்பி இஸ்ரேல் சென்றது. வழியில் முன்புபோல் கென்யாவில் இரு நிறுத்தம் போட்டுவிட்டு சென்றது.
இந்த மீட்புப்பணியில் ஒரே ஒரு இஸ்ரேலிய கமாண்டோ மட்டும் உயிரிழந்தார். பணயக்கைதிகளில் 3 பேர் இறந்தனர்.
உகாண்டா தரப்பில் 45 ராணுவ வீரர்கள் பலியாயினர். மேலும் 15 மிக் 17 ரக விமானங்களும் வீழ்த்தப்பட்டன.
பின்னர், இந்த கடத்தல் சம்பவத்தில் இஸ்ரேலின் உளவு அமைப்பும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் ஒரு வதந்தியை பிரிட்டன் கிளப்பியது. ஆனால் இஸ்ரேல் அதை மறுத்தது.
இந்த சம்பவம் கமாண்டோ படைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக காண்பிக்கப்படுகின்றது.
இவ்வளவு தூரம் படிச்சதுக்கு நன்றி. கீழே உள்ள சுட்டிகள் மூலம் தான் இந்த விஷயங்களை நான் தெரிந்துகொள்ள முடிந்தது. அவர்களுக்கும் நன்றிகள்
http://www.ynet.co.il/english/articles/0,7340,L-3269662,00.html
http://en.wikipedia.org/wiki/Operation_Entebbe
http://www.palestinefacts.org/pf_1967to1991_entebbe.php
http://www.youtube.com/watch?v=ffRQ6e29Dw0 and the following serious
லேபிள் வரலாறு
எண்டெப்பியைப் பற்றி பேசும்போது; அது நடப்பதற்கு முன்னால் நான் படித்த ஒரு கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.
ஒரு பயங்கரவாதியிடம் மூவர் அகப்பட்டுக் கொண்டனராம். ஒரு இந்தியர், ஒரு அமெரிக்கர், ஒரு இஸ்ரேலியர். அவர்களை கொல்ல முடிவு செய்த பயங்கரவாதி தத்தம் கடைசி ஆசையை கூறும்படி அவர்களை கேட்கிறார். இந்தியரும் அமெரிக்கரும் கடவுள் பிரார்த்தனை செய்ய ஆசைப்பட, இஸ்ரேலியரோ, பயங்கரவாதி தன்னை உதைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறார். அவனும் அவ்வாறே செய்ய, பந்து போல ப்ரூஸ் லீ ஜம்ப் செய்து, குட்டிக்கரணம் அடித்து, தன் கைத்துப்பாக்கியால் பயங்கரவாதியை சுட்டுக் கொன்று விடுக்கிறார். இதை முன்னமேயே செய்திருக்கலாமே என அமெரிக்கர் கேட்க, அவ்வாறு செய்திருந்தால் இந்தியர் பயங்கரவாதியைக் கொன்ற குற்றத்துக்காக தன்னை ஐ.நா. பொதுச் சபை முன் இட்டுச் சென்றிருப்பார் என இஸ்ரேலியர் கூறுகிறார்.
இதை நான் படித்தபோது, ரொம்பத்தான் மிகைபடுத்திக் கூறுகிறார்கள் என நினைத்தேன். ஆனால், எண்டெப்பி விஷயத்தில் இந்தியா நடத்திய கூத்தைப் பார்த்ததும் மனம் மாறி விட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/3_30.html
நன்றி நண்பா,
கார்லோஸ் அந்த சம்பவத்தில் தொடர்பில்லை என்கின்றது விக்கிபீடியா. ஆனால் அதற்கு ரெஃபரன்ஸ் கொடுக்கவில்லை.
மேலும் இஸ்ரேலின் பங்கு பற்றிய பிபிசி தகவல்
http://news.bbc.co.uk/2/hi/uk_news/6710289.stm
Anputan
Singai Nathan
தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
http://www.newspaanai.com/easylink.php
good posting
எங்கங்க இவ்வளவு தகவல் திரட்ரீங்க
நீங்க ஒரு தகவல் திரட்டி.