சாரு பற்றி யார் எனக்கு அறிமுகப்படுத்தியது என்று எனக்கு சரியாக நினைவில் இல்லை. ஆனால் எதேச்சையாக கூகுளில் சிக்கியதாக நினைவு. படிக்க ஆரம்பித்ததும் மிகவும் பிடித்துப்போய் தீவிரமாக படிக்கத்துவங்கினேன். ஏனென்றால் அதில் அப்படி ஒன்றும் கடினமானதாகவோ, உண்ர்வை பாதிக்கும் புனைவோ இல்லை. வெறும், மேலோட்டமான சற்று ஆர்வமான பத்திகளே. அதுவும் செக்ஸ் பற்றி வரும் பகுதிகள் யாருக்குத்தான் பிடிக்காது.
சாரு எழுதுவதில் பெரும்பான்மை தன்னை சுற்றி நடப்பதாக எழுதுகிறார். அவை புனைவும் உண்மையும் கலந்தவை என்கிறார். இதி புனைவு என்று நிறுவ, பெருமாள் தன் மனைவியிடம் மாட்டியதும் வரும் பகுதிகள், வெறும் வறட்டு புனைவாக இருந்ததை அறியலாம். தன்னை சுற்றி நிலவிய கதாபாத்திரங்களை பற்றி ஒன்றொன்றாக கதை அளக்கத்துவங்கியது ஒரு அறிகுறி. உச்சகட்டமாக தன்னைக்கொல்ல ஒரு கதாபாத்திரம் துப்பாக்கியை இன்டென்ஷனலாக வைத்துவிட்டு சென்றது காமெடியின் உச்சகட்டம்.
சாருவின் மேற்கோள்கள் பற்றி ஒரு ஆய்வே நடத்தலாம். அவரைப்பொறுத்தவரை அவரது விருப்ப எழுத்துலகம் ஸ்பானிஷ், ஃப்ரெஞ்சு, கூபா போன்ற சில நாடுகளைச்சுற்றியே இருக்கின்றன. சில பல தமிழ் எழுத்தாளர்களும் அவரை பாதித்திருப்பது தமிழுக்கு கிடைத்த மதிப்பு.
சாருவின் சில தபாலக கதைகள் ருஷ்ய சிறுகதைகளுக்கு சற்றும் குறைவில்லாமல் இருக்கின்றன. ஆனால் அதிகம் பயன்படுத்தாமல் வேறு சில இடங்களில் அதை விரயம் செய்கிறார். அதைத்தவிர்த்து அவரது மிகப்பெரிய பிரச்சினை, ஒரு எழுத்தாளனுக்கு புனைவுக்கு கற்பனை இருக்கவேண்டும் அது சாருவிடம் இல்லை.. ஒரு பெண்ணைப்போல் அவரிடம் ஒரு 1 மாதம் சாட் செய்தால் அவரது அடுத்த புத்தகத்திற்கு மனுஷ்யபுத்திரன் தயாராகலாம். கற்பனை இல்லாவிடில், ஆழ்ந்து கவனிப்பு வேண்டும். அவரது கவனிப்புகள் வெறும் 5ஸ்டார் பார்களுக்குள்ளேயும், சில செக்ஸ் விஷயங்களிலுமே இருக்கின்றது(இந்த விஷயத்தில் யாரும் விதிவிலக்கல்ல. மேலும் அவரது படைப்புலகம் அவரது கம்ஃபர்ட் ஸோனுக்குள் மட்டுமே இருக்கின்றது. இந்த விஷயம், வரலாற்றில் அவருக்கான இடத்தில் வேறொருவர் துண்டு போட்டுவிடும் அபாயத்தை ஏற்படுத்துகின்றது.
அவரது எழுத்தில் மகுடியாக மயங்கும் அளவிற்கு சிலர் பேசுவது, அவர்களது ரசனையையும், மற்ற எழுத்தாளர்களை கேலிக்குள்ளாக்குவதாகவும் உள்ளது.
சாருவின் சில உலகப்படங்கள் மற்றும் இசை பற்றிய எழுத்துகள் எல்லாம் ஏதோ மொழிபெயர்ப்பு போல இருக்கின்றது. இசையோ படைப்போ ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் சாரு எழுதும்போது ஒருவித அந்த விஷயம் விடுபட்டுப்போகின்றதாக நான் உணர்கின்றேன்.
சாருவின் கதாபாத்திரங்களை ஏணி மீது ஏற்றுவதும், கொஞ்சம் சறுக்கினால், கீழே போட்டு மிதிப்பதுமாய் உள்ள மனபாவம் எரிச்சலை ஏற்படுத்துகின்றது. கேரளாவில் அவரது புகழ் பற்றி சொல்லிக்கொண்டு இருக்கின்றார். அங்கு அவரை எப்படி கருதுகிறார்கள் என்பது பற்றிய ஜெயமோகனின் மதிப்பீடு உண்மையாக இருக்குமோ என்று அஞ்சுகிறேன்.
லேபிள் மதிப்பீடுகள்
இவரது படைப்புகளில் எதையும் இதுவரை நான் படித்ததில்லை...
ஒரு சில பதிவுகளைத் தவிர...
(அவையும் நண்பர்கள் பதிவுகளிலோ அல்லது ஈமெயிலிலோ தந்த லிங்க்குகள் வழியாக மட்டுமே....)
இது என்ன பழக்கம் அஞ்சுகிறேன் -ஞ்சுகிறேனு சொல்லிக்கிட்டு....
தலைப்பில் தப்பு பண்ணிட்டேன்.
//இவரது படைப்புகளில் எதையும் இதுவரை நான் படித்ததில்லை...//
தப்பிச்சீங்க
அதானே...
எழுதுனப்பவே நெனச்சேன். இப்படி எல்லாம் குண்டக்க மண்டக்க படிப்பீங்கனு
சிஐடியு வைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜையைக் கொண்டாடலாமா ?
CPI (M) ல் உறுப்பினராக வேண்டுமென்றால் அய்யர் சாதியில் பிறந்தவர்கள் பூணூல் அணிந்து கொள்ளலாமா ?
கட்சியில் இணைந்த பிறகு குலசாமி கோவிலுக்கு போய் சாமி கும்பிடலாமா?
-யாராவது சமூக அக்கறை உள்ளவங்களாவது கேட்டு சொல்லுங்கப்பா !
இதுக்கும் CPI-கும் என்னப்பா சம்பந்தம்
சாருவப் பொருத்தவரைக்கும் நாம செய்ய வேண்டியது என்னான்னா,
அவரோடப் புத்தகங்களப் படிச்சுட்டு போயிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.
அதுக்கு மேல அவரப் பத்தி பேசுறது நெம்ப வேஸ்ட்.
நானும் அவரப்பத்தி பேசிக்கிட்டு இருந்தேன். ஆனா இனி பேசுறதா இல்ல.
அவரோடப் புத்தகங்களப் படிச்சுட்டு போயிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.
//
நான் அத்தனை வரிகளில் சொல்லியதை சுருக்கமா சூப்பரா சொல்லிட்டீங்க ஜோசப்
அப்படி கூட்டறதுக்கு சாரு பத்தி எழுதணும்னு அவசியம் இல்லை.
ராஜ் என்ற பதிவர் பற்றி ஒரு ரகசியம்னு ஒரு மொக்க பதிவு போட்டாலே போதும். :)
நான் எழுதினது, சில சாரு அடிவருடிகளுக்கு புரியத்தான்
நான் எழுதினது, சில சாரு அடிவருடிகளுக்கு புரியத்தான்//
நான் பதிவரும் இல்லை....அந்தாளோட அடி வருடியும் இல்லை....கோக் ல பூச்சி மருந்து கலந்திருக்குனு சொன்னா..அப்படியா, சரி குடிச்சி பார்க்கலாமேன்னு நாலு பேருக்கு தோணும்...அந்த மாதிரி உங்க பதிவ படிச்சுட்டு...அந்த குப்பைகளை படிச்சு பார்க்கலாமேனு சிலருக்கு தோணுமேன்ற கண்ணோட்டத்துலதான் என் கருத்தை கூறி இருந்தேன்....உங்களுக்கு தப்பா பட்டிருந்தா, சாரி!
ஆமாம்..என்ன பத்தி ரகசியம் எப்போ பதிவிட போறீங்க
My guess is that you are a right winger, ardent fan of Jey, who can't accept Charu's views on life/morals.
\\நான் எழுதினது, சில சாரு அடிவருடிகளுக்கு புரியத்தான்//
பரவாயில்லையே ****** இந்த வாறு வாருகிறீர்களே.
அட நீங்க வேற, இந்த மாதிரி தலைப்ப போட்டாதான் ஹிட் ஏறும்னு சொன்னேன் :)
My guess is that you are a right winger, ardent fan of Jey, who can't accept Charu's views on life/morals.//
எனக்கு ரைட் லெஃப்ட் எல்லாம் தெரியாதுங்க. ஆனா இந்த பதிவுல என் தனிப்பட்ட உணர்வுகள் கண்டிப்பா கலந்திருக்கும். இன்னும் வளறணும் :)
என் ரீடரில் ஜெயமோகனின் பதிவில் 70 unread :)
வழிமொழிகிறேன்.