மிஷன் சக்ஸஸ் தமிழர்கள் கூண்டோடு அழிந்தனர்.

இந்த செய்தியைத்தானே எதிர்பார்க்கிறது இந்திய அரசு.

தஜகிஸ்தானில் இந்திய ராணுவநிலை வைக்க முடிகிறது, ஆப்கன் போருக்கு மருந்தளிக்க முடிகிறது. இங்கு கூப்பிடு தூரத்தில் நிகழும் இனஒழிப்பை கைதட்டி ரசிக்கிறது.

தமிழக அரசு என்னவென்றால் தீர்மானங்களும், கடிதங்களும் போட்டுக்கொண்டிருக்கிறது.

கீழ்வரும் நன்மைகளை நினைத்தாவது திமுக, தன் குரலை ஓங்கி ஒலிக்கச்செய்யவேண்டும்

  • இலங்கையில் தமிழர்கள் உயிருடன் இருந்தால்,
  • சன்டிவி கேடிவி பார்ப்பார்கள். காசு கிடைக்கும்.
  • கப்பல் தொழிலுக்கு உதவுவார்கள்
  • தமிழகத்தில் உங்களுக்கு ஓட்டு அரசியலுக்கு வசதியாக இருக்கும்
  • கண்டிப்பாக மனிதநேயம் கொண்டவர்களால் ஓட்டு எண்ணிக்கை அதிகரிக்கும்
  • கவிதை எழுதினால் அதை ஈழத்தமிழர்கள்(மட்டுமாவது) ரசிப்பார்கள், பாராட்டுவார்கள்.
  • குடும்பத்தோடு சுற்றுலா செல்ல நல்ல இடம் கிடைக்கும்

என்ன எல்லாம் கேணைத்தனமா இருக்கா? நம் அரசு செய்வதைவிடவா?

ஈழத்தமிழர் விஷயத்தில் எனக்கு இந்த அரசு மீது நம்பிக்கை இல்லை, இது தொடர விருப்பம் இல்லை. எனவே இந்த தேர்தலில் என் வோட்டு மட்டுமல்லாது என்னை சார்ந்திருக்கும் சில ஓட்டுகளையும் இந்த அரசு இழக்கிறது.

நீங்களும் இதே மனப்பான்மையோடு இருந்தால், தயவுசெய்து வலப்பக்கம் இருக்கும் பட்டையில் ஓட்டளியுங்கள்.
உங்கள் ஓட்டு இந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராக இருக்கட்டும் ஈழத்தமிழர் விவகாரத்தில் அரசு நல்ல முடிவு எடுக்கும் வரை.

இந்த ஓட்டு உங்களுக்கு புலி ஆதரவாளர் என்ற முத்திரை குத்தாது. நம் இனம் அழிகின்றதே என்ற வேதனையை பதிவு செய்யும்.

இந்த ஓட்டு உங்களை மற்ற கட்சி ஆதரவாளர்களாக்காது. மாற்றாக ஆளுங்கட்சிகளுக்கு உங்கள் ஓட்டு வலிமையை உணர்த்தும்.

நம் கருத்துக்களை அரசுக்கு சொல்ல ஒரே வழி, அவர்கள் மொழியில் பேசுவதுதான். பணக்காரனிடம் பணம் பற்றி பேச வேண்டும். அரசியல்வாதிகளிடம்(தேர்தல் சமயத்தில்) ஓட்டு பற்றி பேச வேண்டும்

9 Comments:

  1. அத்திவெட்டி ஜோதிபாரதி said...
    சபாஷ் கிஷோர்!
    மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கும் மூடர்கள் திருந்தும் வரை இது நடக்கட்டும்.
    கிஷோர் said...
    //மூடர்கள் திருந்தும் வரை இது நடக்கட்டும்//

    அதுவரை மக்கள் உயிருடன் இருக்கவேண்டும் :(
    கோவி.கண்ணன் said...
    :(

    அருமையாக எழுதி இருக்கிங்க !
    கிஷோர் said...
    ஹூம்ம்ம்ம் என்ன செய்றது கோவி அண்ணா? ஏதோ நம்ம உள்ளக்குமுறல்
    நட்புடன் ஜமால் said...
    \\அரசியல்வாதிகளிடம்(தேர்தல் சமயத்தில்) ஓட்டு பற்றி பேச வேண்டும்\\

    சரியாக சொன்னீர்கள்
    சி தயாளன் said...
    :((

    உங்கள் ஆதங்கம் நியாயமானது
    கிஷோர் said...
    நாம் விடியலுக்காக காத்திருப்போம்
    தேவன் மாயம் said...
    ஈழத்தமிழர் விஷயத்தில் எனக்கு இந்த அரசு மீது நம்பிக்கை இல்லை, இது தொடர விருப்பம் இல்லை. எனவே இந்த தேர்தலில் என் வோட்டு மட்டுமல்லாது என்னை சார்ந்திருக்கும் சில ஓட்டுகளையும் இந்த அரசு இழக்கிறது.///

    உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்..

    தேவா...
    venkatx5 said...
    வாஸ்தவம்தான் கிஷோர்.. நம்மால என்ன பண்ண முடியும்?

Post a Comment





Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.