பதிவுலகம் மொக்கைகளால் நிரம்பியிருக்கின்றது என்றால் அது மிகை அல்ல. நானும் அம்மாசுக்கு ஒரு காரணமாக கண்டிப்பாக இருந்திருப்பேன் என்ற குற்ற உணர்வோடு இதை எழுதுகிறேன்.பதிவுகளுக்கு எல்லை இல்லை, எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற எண்ணத்தோடு தீவிரமான மொக்கைகளோடு சில பதிவுகள்/இடுகைகள் வருகின்றன. கண்டிப்பாக எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்தான். ஆனால் பயன் என்பது முக்கிய அம்சம்.
ஈமெயிலில் சொல்ல வேண்டிய கருத்துக்களை பதிவிட்டு கொண்டு சென்ற நம் அலட்சியம்தான் இன்று ட்விட்டரில் "உங்க வீட்டில் என்ன குழம்பு" என்பது வரை கொணர்ந்துவிட்டிருக்கிறது. பதிவுலகம் கண்டிப்பாக நண்பர்கள் உருவாகும் இடம்தான். ஆனால் இன்று நண்பர்களாக இருந்து கொஞ்ச நாள் கழித்து சண்டை போட்டுக்கொள்வது, பதிவுலக அரசியல் என்று புதிய வார்த்தை வந்தது என்று பல பிரச்சினைகளை உருவாக்கும் இடமாகவும் உள்ளது.
பதிவுகளில் சுய புராணங்கள், பதிவர் பட்டத்திற்கு எழுதுவது போன்றவற்றை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. எழுத்தின் பலம் நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். எல்லோராலும் சுஜாதா போல் எழுத முடியாது, எழுதினாலும் படிக்க ஆளிருக்காது. சமூக அக்கறையுடன் இந்த சுதந்திரத்தை பயன்படுத்துவது சிலருக்காவது பலனளிக்கும்.
தயவு செய்து அடிதடிகளை குறைத்துக்கொள்ளுங்கள், எதிர்பதிவுகளையும் குறைத்துக்கொள்ளுங்கள்(அதற்கு பதில் ஒரு பின்னூட்டமோ அல்லது மின்மடலோ எழுதிடுங்கள்) இல்லையேல் அது உங்களின் விளம்பரத்தன்மையயே காட்டும். சில விஷயங்கள் இதற்கு விதிவிலக்கு. உதாரணமாக, ஒரு பதிவர் ஒரு தவறான விஷயத்தை பிரசாரம் செய்யும் போது அதை எதிர்த்தி பதிவிடலாம். இதன் மூலம் உண்மை தெரிய வரலாம்.
தனிநபர் தாக்குதல் அறவே வேண்டாம். அதற்கு பல இடங்கள் உள்ளன.
ஏடாகூடமான தலைப்புகள் வேண்டாம். அப்படிதான் நீங்கள் படிக்க வைக்கவேண்டும் என்றால், பிகேபி, கிறுக்கல் போன்ற பதிவுகளை பாருங்கள். எத்தனை வாசகர்கள். அவர்கள் கண்டிப்பாக தலைப்பில் ஈர்க்கப்பட்டு சேர்ந்த கூட்டம் இல்லை.
மேலும் நாம் அனைவரும் எழுதுவது ஒரு சுய அரிப்பை போக்கிக்கொள்ளவும், என்றாவது நம் திறமையும் பேசப்படுமா என்பதற்காகத்தான். அதற்கான முயற்சிகள் மொக்கைப்பதிவுகளால் கண்டிப்பாக வராது.
தமிழ்மணத்தின் சூடான இடுகைகள் பற்றிய விவகாரத்தில் நான் கண்டிப்பாக தமிழ்மணத்தை ஆதரிக்கிறேன்.
அதே போல் தமிழ்மணம் தன் டெம்ப்ளேட்டை மாற்றியபோது, அனைத்து இடுகைகளையும் முழுமையாக முதற்பக்கத்தில் காட்டியது. அது ஒரு நல்ல முடிவு. அதையும் வீணாக எதிர்த்து நிறுத்தினார்கள்.
சற்று யோசித்துப்பார்த்தால், கூகுள் ரீடரில் காட்டுவதைவிடவா தெளிவாக காட்டியது தமிழ்மணம்? அலுவலகங்களில் வலைப்பதிவுகள் பார்க்கவும் கூகுள் ரீடரும் பார்க்க வழியில்லாதவர்களை உங்கள் பதிவு போய் சேர்ந்திருக்கும். அதற்கும் வழியில்லாமல் போனது.
ஆகவே இறுதி வரியை மட்டும் படிக்கும் நண்பர்களுக்கு:உங்கள் பதிவுகள் சற்றாவது பலனளிக்கும் விதத்தில் இருந்தால் நன்று.
இதைச்சொல்ல நீ யாரடா என்று கேட்பவர்கள் கேட்டுக்கொண்டே இருக்கட்டும், தங்கள் காதுகளில்...
உங்க இஷ்டம் போல போட்டுக்கங்க
ஆகா...ஆங்..நங்...
வணக்கம் கிஷோர்..Bye...:-)
நாம எல்லாம் எப்படி பழகி இருக்கோம்.
நான் பதிவுல தான் கும்மி, மொக்கை எல்லாம் வேண்டாம்னு சொன்னேன்,
பின்னூட்டத்தில் இல்லை :)
உள்குத்து ஏதும் இல்லையே?
என்ன பண்றது. நாம நம்ம கடைமைய பண்ணித்தானே ஆகணும் :)
இது ஒரு நல்ல பதிவு!! சில விஷயங்கள் கசப்பு மருந்துதான்!
ஒரு பயனுள்ள விஷயம் எழுதியிருக்கிறேன்.கருத்துரை தருக.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!
தேவா..
நல்ல பதிவு
//ஒரு பயனுள்ள விஷயம் எழுதியிருக்கிறேன்//
மகிழ்ச்சி :)
படித்துவிட்டு கருத்தை தெரிவிக்கிறேன்
//இன்னும் அதிக இடுகைகளை முதல் பக்கத்தில் காட்டலாம் //
இன்னும் அதிகம் காட்டலாம் தான் :)
என்னய்யா இது?
நான் என்ன பதிவுலக காவலரா?
:) :)
எங்கே பார்த்தாலும் ஒரே மொக்க பதிவா இருக்கேங்கற ஒரு ஆதங்கம்...
ஏதோ என்னால முடிஞ்ச ஒரு நல்ல காரியம் :) :)
நானும் தனிமனிதத் தாக்குதல்கலை எதிர்ப்பவன் தான். ஆனாலும் ஒரு சந்தர்பத்தில்
என் பதிவில் அதை செய்ய வேண்டி இருந்தது. என் இனம் குறித்த உணர்வு கூட இல்லாதவர்களை தாக்குவதை தனிமனித தாக்குதல் என்ற பிரிவில் சேர்க்க முடியாது என்று எனக்கே நான் காரணம் சொல்லிக்கொண்டேன்.
தமிழ்மணம் குறித்து நீங்கள் கூறிய கருத்துக்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்பதாம் என்னால் எதுவும் கூற இயலவில்லை.
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..