சிங்கப்பூர் IT Show 2008 ஒரு கண்ணோட்டம்

சிங்கப்பூர் IT Show 2008 பற்றி நேற்றே சுடச்சுட ஒரு பதிவு நேற்றே போட்டாகிவிட்டது. இன்று அதைப்பற்றி ஒரு ஒரு அலசல்.
நான் வாங்க நினைத்திருப்பது ஒரு நல்ல Configuration லேப்டாப். இம்முறை ஐ.பி.எம் லெனோவோ மற்றும் திங்க்பேடில் அப்படி ஒன்றும் பெரிய Offer-கள் இல்லை.


SONY VAIO, பக்கம் கூட நெருங்கமுடியவில்லை. விலை சற்று குறைந்திருந்தாலும் அப்படி ஒன்றும் நல்ல configuration கிடைக்கவில்லை. இருப்பினும், அதன் look and feel அற்புதமாக உள்ளது.

Dell பொருத்தவரை ஆன்லைனில் இருக்கும் அதே Offer-கள் தான். முதல் நாளே சற்று இறுதி நேர மாறுதல்கள் தெரிந்தன(திடீரென்று 250GB Harddisk upgrade என்று கூறினர்). எனவே, இறுதி நாள் வரை காத்திருந்தால் இன்னும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ACER இல் சில நல்ல மாடல்கள் நல்ல விலையில் கிடைக்கின்றன. நான் ஒரு கடையில் விசாரித்துக்கொண்டிருக்கும் போது 3GB RAM upgrade கேட்டபோது உங்களுக்காக இலவசமாக தர முயற்சி செய்கிறேன் என்றார் சேல்ஸ் பையன். எனவே இறுதி நாள் வரை காத்திருந்தால் இன்னும் நல்ல Offer கிடைக்கும் என்றே நம்புகிறேன்.

MAC பக்கம் சென்றபோது அங்கு புத்தம்புதிய MAC AIR மாடல் நல்ல ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது.

கடந்த முறை, SITEX ‍இல் என் நண்பர் ஒருவர் அட்டகாசமான configuration இல் ஒரு லெனோவோ லேப்டாப் ஒன்றை இறுதி நாளன்று நல்ல விலையில் அள்ளினார். எனவே இந்த முறையும் பொருத்திருந்து பார்க்கலாம் என்றே நம்புகிறேன்.

காமிராக்களும் LCD TV களும் இடங்களை வியாபித்திருந்தன. DSLR காமிராக்கள் 1500$க்கு குறையாமல் இருந்தன. எனவே சந்தைக்கும் இங்குக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாய் தெரியவில்லை.

புதிதாய் செல்பவர்களுக்கு,
உங்கள் விருப்பம் லேப்டாப் அல்லது ப்ரின்டர் என்றால் கண்ணைமூடிக்கொண்டு 4வது ஃப்ளோருக்கு செல்லுங்கள்.

உங்கள் விருப்பம் மற்ற சிறிய கணிப்பொறி பாகங்கள் என்றால் நேரடியாக 6வது ஃப்ளோர் செல்லுங்கள்.

உங்கள் விருப்பம் சோனி அல்லது ஸ்டார்ஹப் என்றால் நீங்கள் செல்ல வேண்டியது 3வது ஃப்ளோருக்கு.

நீங்கள் எதை வாங்க தீர்மானித்திருக்கிரீர்களோ, அந்த செக்ஷனுக்கு முதலில் செல்லுங்கள்.ஒருமுறை சென்று விலைகளை கவனித்துக்கொள்ளுங்கள். அப்புறம் இறுதி நாள் மதியம் அல்லது சாயங்காலம் சென்று வாங்கிவாருங்கள். ஏனெனில் விலை குறையக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Smooth talk ‍ன் பின்னூட்டத்தையும் கொஞ்சம் நினைவில் கொள்ளுங்கள்.

Happy Shopping

7 Comments:

 1. முகவை மைந்தன் said...
  ம்ம்ம்.. Sigtel, 30 திங்களுக்கான ஒப்பந்த இணைய இணைப்பிற்கு ($88/திங்கள்) MacBook தருகிறார்களே.

  சென்ற முறை ACER travelmate 4700 வாங்கினேன். (Intel core duo 7500, 3 GB RAM, Graphics accelerator, N-broadband receiver, finger reader etc,.. விலை $1800) அதன் திரையில் ஒரு பூ (dead pixel) விழுந்திருந்தது. கேட்டதற்கு 5 புள்ளிகள் வரை விழ வாய்ப்புண்டு என்றார்கள். மற்றபடி பயன்பாட்டுக்கு எளிதாகவே இருக்கிறது.

  என்ன தான் உயர்திறன் கணிணி வாங்கினாலும் பயன்பாடு என்னவா இணைய உலாவலோடு முடிந்து விடுகிறது. எனவே பயன்பாடு மற்றும் எவ்வளவு நாளில் வேறு கணிணிக்கு மாறுவீர்கள் என யோசித்து அதற்கேற்ற திறன் கொண்ட கணிணியை வாங்குங்கள். வாழ்த்துகள்.
  கிஷோர் said...
  //என்ன தான் உயர்திறன் கணிணி வாங்கினாலும் பயன்பாடு என்னவா இணைய உலாவலோடு முடிந்து விடுகிறது. எனவே பயன்பாடு மற்றும் எவ்வளவு நாளில் வேறு கணிணிக்கு மாறுவீர்கள் என யோசித்து அதற்கேற்ற திறன் கொண்ட கணிணியை வாங்குங்கள். வாழ்த்துகள். //

  யோசிக்கவேண்டிய விஷயம். நன்றி. யோசிக்கிறேன்.
  வடுவூர் குமார் said...
  மடிக்கணினியை மேஜை கணினியோட ஒப்பிட்டால் - வாழ்வு குறைந்த “செல்லம்”.
  ஏதாவது போச்சு என்றால் தலையை சுற்றி தூக்கிவீச வேண்டிவரும்.
  வடுவூர் குமார் said...
  மடிக்கணினியை மேஜை கணினியோட ஒப்பிட்டால் - வாழ்வு குறைந்த “செல்லம்”.
  ஏதாவது போச்சு என்றால் தலையை சுற்றி தூக்கிவீச வேண்டிவரும்.
  கிஷோர் said...
  உண்மை தான். ஆனால் என்னைப்போன்ற நாடோடிகள் என்ன தான் குமார் செய்வது. By the way, இந்த வடுவூர் எங்கள் மன்னார்குடிக்கும், தஞ்சைக்கும் நடுவில் இருக்கும் வடுவூரா?
  அறிவன் /#11802717200764379909/ said...
  நீங்கள் எத்தனை கால மடிக்கணினி உபயோகிப்பாளர் எனத் தெரியவில்லை;பதிவின் படி உங்கள் சிபாரிசுகள் தேர்ந்தவையாகத் தோன்றவில்லை.
  சோனி வயோ,ப்யுஜித்ஸு,தோஷிபா/எச்பி/லெனோவா,காம்பாக்,ஏசர்,டெல் எனபதுதான் தரவரிசை.
  பானாசோனிக்,ஆப்பிள் மாக்-மிகு உயர்தர வரிசை.
  காசு அதிகமானாலும் நல்லதாக வாங்குவது நல்லது.
  கிஷோர் said...
  நமக்கு பெரிய அனுபவமெல்லாம் கிடையாதுங்க. ஏதோ அக்கம்பக்கம் பார்க்கறது தான். உங்கள் சிபாரிசுக்கு நன்றி அறிவன்

Post a Comment

Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.