இந்தியா போன்ற ஒரு ஹாட் நாட்டில் ஏன் இன்னும் விபச்சாரம் இன்னும் அரசு அங்கீகாரம் இன்றி இருக்கின்றது?
கலாச்சார சீரழிவு என்று கூச்சல் போடுவோர் தயவு செய்து கடந்த புத்தாண்டு தினத்தன்று நாடெங்கும் நடந்தேறிய கலாச்சார கலக்கல்களை நினைவில் கொள்ளவும்.
15 வயது அல்லது அதற்கு குறைவான வயதிலேயே ஆணின் உணர்வுகள் பொங்கி எழ ஆரம்பிக்கின்றன. பெரும்பாலானோர் சுய இன்பம் மட்டுமே போதும் என்று தங்களை திருப்திபடுத்திக்கொண்டு வாழ்க்கையில் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு சென்றுகொண்டிருக்கின்றனர்.(நான் அப்படி எல்லாம் செய்ததே இல்லை என்று சொல்லும் நல்லவர்களை பசித்த புலி தின்னட்டும்) சுய இன்பம் பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.
அப்படி சுய இன்பத்தை தாண்டி தன் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் போதுதான் அது வக்கிரமாக வெளிப்படுகிறது.
அப்படிப்பட்ட வக்கிரங்கள் தான் பெண்களிடம் அல்லது பெண்களுக்கு எதிராக வன்முறையாக வெளிப்படுகின்றன. குறைந்தபட்சம் பேருந்தில் உரசுதலில் தொடங்கி, கெட்ட தீண்டல்கள் வரை செல்கிறது. கலவி பற்றிய ஒரு விழிப்புணர்வு இல்லாததும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. பெண்ணின் கலவி சார்ந்த உடல்கட்டமைப்பு என்பது வெளித்தோற்றத்தில் மட்டும் இருக்கிறது என்று இன்னும் தவறாக எண்ணிக்கொண்டிருக்கும் பல ஆண்கள் இருக்கும் சமூகத்தில் கலவி அல்லது பாலியல் விழிப்புணர்வு என்பது ஒரு முக்கிய தேவையாகும். பஞ்சதந்திரம் படத்தில் கமல் சொல்லும் "என் செக்சுவல் ஆர்கன் என் தலையில் இருக்கு" என்னும் வசனம் பெண்களுக்கு மிகவும் பொருந்தும் என்பது ஒவ்வொரு ஆணும் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம்.
அப்படி வக்கிரத்தை எப்படியாவது திருப்தி படுத்தவேண்டும் என்று ஒரு சமுதாய பொறுப்புகளை மறக்கும் அல்லது மறைக்கும் ஆண் சென்று சேரும் இடம் கண்டிப்பாக நல்ல இடமாக இருக்கப்போவதில்லை. கால் சென்டர் செல்லும் பெண்களை வன்புணர்ச்சி செய்து கொன்று பின் காவல்துறையிடம் சரண் அடையும் வரை அவர்களை கொண்டு சென்று விடுகிறது. இது ஒரு எடுத்துக்காட்டுதான். இன்னும் பல எடுத்துக்காட்டுகள் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அப்படி ஹார்மோன் பகுத்தறிவை மீறும் அளவிற்கு ஆட்டம் போடவைக்கும் நிலையில், இப்படிப்பட்ட சீர்கேடுகளை தடுக்க மற்றும் "AIDS" போன்ற கொடும் நோய்களைத்தடுக்க அரசு விபச்சாரத்தை அங்கீகரிக்க வேண்டும். இன்னும் மும்பை, கொல்கத்தா மற்றும் பல நெடுஞ்சாலைகளிலும் சட்டப்பூர்வ அங்கீகாரமின்றி செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் இந்தியா கிட்டத்தட்ட 50 லட்சம் AIDS நோயாளிகளுடன் தடுமாறிக்கொண்டிருக்கிறது.
அரசாங்கம் ஒன்றும் TASMAC போல வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்கத்தேவை இல்லை. இருக்கும் சட்டங்களை சற்று சீரமைத்து, பாலியல் தொழிலாளர்களின் உடல்நிலை மற்றும் சுகாதாரமான சூழ்நிலை அமைத்துக்கொடுக்க முன் வரவேண்டும் என்பது என் எண்ணம்.
வழக்கம்போல் இதில் உள்குத்துகளை எதிர்பார்க்காமல், வெளி மனதால் யோசிக்காமல் ஒவ்வொருவரும் உண்மையான மனதுடன் யோசித்துப்பாருங்கள்.
இது பெண்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டதல்ல. அழிக்கமுடியாத ஒரு விஷயத்தை சற்று சீர்படுத்தலாம் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டது.
இதனால் வளரும் தலைமுறை கெட்டுவிடும் என்று நினைப்பவர்கள், அருகில் இருக்கும் பார்க்குகளுக்கு அல்லது இன்டர்நெட் சென்டர் சென்று இறைவன் அருள் பெற்று மறுபரிசீலனை செய்க.
லேபிள் புலம்பல்
அருமையான பதிவு. உண்மையிலேயே பலராலும் விவாதிக்கபடவேண்டிய விஷயம்.ஆனால் சோகம் என்னவென்றால் நம் மக்களுக்கு உண்மையாக இருப்பது என்பதே தெரியாது அது செய்யும் வேலையாக இருந்தாலும் சரி திருமணமாக இருந்தாலும் சரி ஒரு உறவாக இருந்தாலும் சரி உண்மையாக இருப்பதே தெரியாது. இங்கு எழுத்தாளர் பாலகுமாரனின் வரிகளை நினைவு படுத்தி பார்க்கலாம்,
"விஞ்ஞான வளர்ச்சியை வெறும் சௌகரியங்களை பெறுவதற்காக மட்டுமே உபயோகித்து கொண்டு விடுதலை என்பதை நோக்கி சற்றும் நகராத சமுதாயம் இந்த தமிழ் / இந்திய சமுதாயம்".
இது முற்றிலும் உண்மை. மேலும் இங்கே இன்னொரு அருமையான கட்டுரையை குறிப்பிட்டே ஆக வேண்டும், அது எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் "மதிப்பீடுகளின் வீழ்ச்சிகள்" என்ற கட்டுரை. அதில் கூறி இருக்கும் கருத்துக்கள் அத்தனையும் நேர்மையாக படிக்கும் எவனும் அதை உண்மை என்றே ஒப்புக்கொள்வான்.
http://www.charuonline.com/oldarticls/kp244.html
மொத்தத்தில் அருமையான கருத்து.
உங்கள் பின்னூட்டம் எனக்கு ஊக்கமளிக்கின்றது. நன்றி.
கோணல் பக்கங்களை நானும் படித்து வருகிறேன். நீங்கள் குறிப்பிட்ட பக்கத்தை மீண்டும் படித்து பார்க்கிறேன்.