SITEX Expoவுக்கு பிறகு க்ரெடிட் கார்டுக்கு ஆப்பு வைக்க வந்திருக்கும் அடுத்த IT-திருவிழா. இம்முறை சன்டெக் மாலில் 4 ஃப்ளோர்களில் பட்டாசாக இருக்கிறது IT Show 2008. முதல் ஃப்ளோரில் என்னால் ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லை Panasonic
3வது ஃப்ளோரில் நுழைந்தவுடன் StarHUB
4வது ஃப்ளோரில் நுழைந்தவுடந்தான் மூச்சே வந்தது. எங்கு பார்த்தாலும் நம்ம லாப்டாப் மற்றும் ப்ரிண்டர் ஆசாமிகள்தான். இந்த முறையாவது ஒரு நல்ல புது மாடல் லாப்டாப் வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்த என்னை, வாடா என் ராசா என்பது போல் உள்ளே அழைத்துக்கொண்டது அந்த ஃப்ளோர். ஒரு பேப்பர் பொறுக்கும் பையனின் ஆர்வத்துடன் உள்ளே நுழைந்து அனைத்து விளம்பரசீட்டுகளையும் வாங்கிக்கொண்டேன்(பொறிக்கிக்கொண்டேன்). ஆங்காங்கே குனிந்து நின்று ஆர்வத்துடன் கவனித்துக்கொண்டிருந்த பெண்களைக்கூட பார்க்காமல் சுற்றினேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
6வது ஃப்ளோரில் முழுக்க குட்டி குட்டி கடைகள். அவைகளை இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு முடிந்தால் படத்துடன் தொடர்கிறேன்.
லேபிள் ஊர் சுற்றி புராணம்
கணினி பொருட்களை நான் பெரும்பாலும் சிம் லிம் ஸ்கொயரில் தான் வாங்குவேன்.