ஒரு இணையத்தளத்தில் நான் கண்ட ஒரு நல்ல article-ன் தமிழாக்கம்
ஒரு நாள், நான் கடவுளை பேட்டி காண்பதாய் நல்ல கனவு கண்டேன்.
"ஆக, நீ என்னை பேட்டி எடுக்க முடிவு செய்து விட்டாய்", என்றார் கடவுள்.
"உங்களுக்கு நேரம் இருந்தால்...", என்றேன் நான்.
கடவுள் சிரித்துக்கொண்டே, "என் நேரம் முடிவில்லாதது, என்ன கேள்விகளை யோசித்து வைத்திருக்கிறாய்? ", என்றார்.
"மனிதகுலத்தை பற்றி உங்களை எது வியக்கவைக்கிறது?"
"குழந்தை பருவத்தில் சலிப்படைந்து வளர ஆசைப்படுகிறார்கள், வளர்ந்ததும் மீண்டும் குழந்தையாக நினைக்கிறார்கள்"
"செல்வம் சேர்க்க, உடல் நலத்தை அடகு வைக்கிறார்கள். பின்பு அதை மீட்டெடுக்க செல்வத்தை செலவழிக்கிறார்கள்!"
"வருங்காலத்தை பற்றிய பரபரப்பில், நிகழ்காலத்தை தொலைக்கிறார்கள். ஆனால் இரு காலத்தையுமே வீணடிக்கிறார்கள்"
"இறக்கவே போவதில்லை என்பது போல் வாழ்கிறார்கள், ஆனால் மாண்டபின் மீள்வதில்லை"
நிஜம் என்னை சுட்டது. நான் சற்று அமைதியானேன்
"...சரி உங்கள் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?"
இதற்கு பின் வந்த பகுதிகள் அவ்வளவாக கவரவில்லை. எனவே, மாற்றம் செய்து உள்ளேன்
"எப்போதும் அவர்களுக்கு நான் இருக்கிறேன் அனைவருக்கும், எந்த வழியில் வந்தாலும், எல்லா வாசலிலும், என்று"
லேபிள் கடவுள், தமிழாக்கம்
என்னமோ நாம் தான் சலிப்படைந்து வளர்வது போல் சொல்கிறீர்கள்.
வளர்ச்சியும் தளர்ச்சியும் பேட்டி எடுக்கும் கடவுள் செய்யும் வேலை. எம் கையில் இல்லை.
எல்லாம் அவன் செயல் என்ற சித்தாந்தப்படி நீங்கள் சொல்வது சரி.
கடவுளையும் ஒரு மனிதனாய் எண்ணிப்பார்க்கும் போது, அவர் சொல்வதன் அர்த்தம் ஒருவேளை நமக்கு விளங்கலாம்.
இது ஒரு மொழிபெயர்ப்பு
வருகைக்கு நன்றி நவன்.
நான் அந்த அடிப்படையில் சொல்லவில்லை. யதார்த்தமாத்
தான் சொன்னேன்.
மனிதகுலத்தை பற்றி உங்களை எது வியக்கவைக்கிறது? என்ற கேள்விக்கு கடவுளின் முதலாவது பதில் அவரது முட்டாள்தனத்தை பிரதிபலிப்பதாகத் தோன்றியதால் அவ்வாறு சொன்னேன்.
இது மொழிபெயர்ப்பாக இருப்பதால் உங்கள் கற்பனையில் தவறிருக்க வாய்ப்பில்லை.
வலைப்பதிற்கு நான் புதிது. உங்கள் ஊக்கத்துக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி