இலங்கை எப்போதும் என் கனவுதேசமாகவே இருந்து வந்திருக்கிறது. அதிலும் இலங்கைத்தமிழ் மீது ஒரு மோகம். தெனாலி போன்ற படங்களும் இன்னும் சில கதைகளும் என் மோகத்தை அதிகரிக்கவே செய்தன.
இங்கு சிங்கப்பூர் வந்தவுடன், என் அலுவலகத்தில் இருவர் இலங்கையிலிருந்து வந்து மாட்டினர். என் நல்ல நேரம் இருவரும் தமிழர்களும் கூட. அவர்களுடன் பேச ஆரம்பித்தபின்தான் தெரிந்தது, இலங்கைத்தமிழை புரிந்து கொள்வதை விட அவர்களது accent -ஐ புரிந்துகொள்வது மெத்த கடினமாய் இருந்தது.
"உங்களுக்காக தமிழையும் translate செய்யவேண்டும் போல" என்று அவர்கள் கிண்டல் அடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டேன். பின் முழுமூச்சுடன் இலங்கைத்தமிழை கற்க தலைப்பட்டேன்.
அந்த முயற்சியில் எனக்கு கிடைத்த சில புதிய சொற்கள் அல்லது பழைய வார்த்தைகளின் புதிய உபயோகங்கள் பின்வருமாறு:
இதில் இருக்கும் அர்த்தங்கள் தவறாய் இருப்பின் திருத்துக. அவ்விரு நண்பர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பில் வசிப்பவர்கள். எனவே சில/பல சிங்கள சொற்களும் கலந்து இருக்கலாம். உங்களிடம் இருக்கும் புதிய வார்த்தைகளையும் பின்னூட்டமிடவும்.
இலங்கை நம்ம ஏரியா
========== =============
கனக்க= நிறைய
சிரா= சூப்பர்
ஒரே சீன் = ஒரே சண்ட
ஒரே கேம் = ஒரே சண்ட
ஒன்று = ஒன்டு
என்று = என்டு ...
வடிவு = அழகு
சொறியன்= தொல்லை கொடுப்பவன்
சொறிவிஷயம் = மோசமான விஷயம்
பொடியன் = பையன்
பெட்டை = பெண்
சம்பல் = சட்னி
வெளிக்கிடலாம் = கிளம்பலாம்
இருக்கலாம் = உட்காரலாம்
பஞ்ஜியாருக்கு = அலுப்பாய் இருக்கு
எடுக்கனும் = வாங்கனும்
பகடி = கிண்டல்
தூசனம் = கெட்டவார்த்தை
பேந்து = பின்பு
கதைக்க = பேச
ஒழும்பவில்லை = எழவில்லை
ஓம் = ஆம்
சாட்டர் = மோசமான
வருத்தம் = நோய்
துண்டு, சரக்கு = figure
மேலும் உது என்ற அருமையான வார்த்தை, உங்களிடம் மட்டும் நிலைத்திருக்கிறது
நன்றி கொண்டோடி,சயந்தன்,Paheerathan
திருத்தங்களுக்கும் மேல் விபரங்களுக்கும் மிக்க நன்றி
வகைகள்
- அரசியல் (7)
- அறிவியல் புனைகதை (1)
- அனுபவம் (5)
- இசை (2)
- இலங்கை (6)
- ஊடகம் (3)
- ஊர் சுற்றி புராணம் (2)
- என் எழுத்து (14)
- கடலூர் (5)
- கடவுள் (1)
- கவிதை பவன் (2)
- காதல் (1)
- கிரிக்கெட் (1)
- கிறிஸ்துமஸ் (2)
- கொஞ்சம் பெரிசு (1)
- கோபங்கள் (4)
- சிங்கை (4)
- சிரிப்பு (1)
- சிறுகதை (1)
- சிறுகவிதை (5)
- சினிமா (8)
- சுஜாதா (2)
- செயின்ட் ஜோசஃப் (2)
- செய்தி (1)
- ட்விட்டர் (2)
- தமிழ (1)
- தமிழாக்கம் (1)
- தமிழ் (1)
- தமிழ்மணம் (3)
- படித்தது (3)
- பதிவர் சந்திப்பு (1)
- புத்தகம் (4)
- புலம்பல் (13)
- ப்ளாகதை (2)
- மதிப்பீடுகள் (1)
- மன்னார்குடி டேஸ் (1)
- மொக்கை (3)
- வரலாறு (1)
- விளையாட்டு (1)
'பகடி' தமிழகத்தில் பயன்பாட்டிலுள்ளது தானே? வலைப்பதிவர்கள் பலர் அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். நாங்கள் 'பகிடி' என்போம்.
துண்டு, சரக்கு பற்றியெல்லாம் விலாவாரியாக வலைப்பதிவில் விவாதம் நடந்தது.
இதில 'சீன்' எண்டதெல்லாம் சினிமாப்படம் பாத்துத்தான் எங்களுக்கே தெரியும். அனேகமா உது தமிழகத்திலயிருந்துதான் ஈழத்தவரிடம் தொத்தியிருக்க வேண்டும்.
சிரா, சாட்டர் எண்ட சொற்களை இண்டைக்குத்தான் பாக்கிறன். அந்த ரெண்டு பேரும் இலங்கையில எந்தப் பக்கம்?
- ஒரு யாழ்ப்பாணத்தான் -
இவை கொழும்பில் பயன்படுத்தப்படுபவை. வேற்றுமொழி வழியாக வந்திருக்கலாம். மற்றவை யாழ்ப்பாண வட்டார மொழிகள்.
கனக்க - நிறைய
சிரா என்பது சிங்களம்
வெளிக்கிடலாம் - கிளம்பலாம்
சாட்டர் என்பதும் சிங்களம்
நீங்கள் கூறியவற்றில் கொழும்புத்தமிழும் கலந்துள்ளது
திருத்தங்களுக்கும் மேல் விபரங்களுக்கும் மிக்க நன்றி
திருத்தங்கள் செய்யப்பட்டு விட்டன.
//'பகடி' தமிழகத்தில் பயன்பாட்டிலுள்ளது தானே? வலைப்பதிவர்கள் பலர் அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். நாங்கள் 'பகிடி' என்போம்.//
உண்மைதான் ஆனால் இது ஒரு சிலரிடம் மாற்றுச்சொல்லாக வழங்கப்பட்டு வ்ருகிறது என்று நினைக்கிறேன். மற்றபடி பேச்சுத்தமிழில் நாங்கள் அதிகம் பாவிப்பதில்லை(இந்த வார்த்தை கூட நீங்கள் உபயோகப்படுத்தும் அளவு நாங்கள் உபயோகப்படுத்துவதாய் தெரியவில்லை)
//சிரா.. சாட்டர்.. சீன்.. துண்டு..
இவை கொழும்பில் பயன்படுத்தப்படுபவை. வேற்றுமொழி வழியாக வந்திருக்கலாம். மற்றவை யாழ்ப்பாண வட்டார மொழிகள்.//
//சிரா, சாட்டர் எண்ட சொற்களை இண்டைக்குத்தான் பாக்கிறன். அந்த ரெண்டு பேரும் இலங்கையில எந்தப் பக்கம்?//
கொண்டோடி,சயந்தன், பகீரதனின் பின்னூட்டம் உங்களுக்கு விளக்கம் அளிக்கும் என்று நம்புகிறேன்
//கனக்க - நிறைய
சிரா என்பது சிங்களம்
வெளிக்கிடலாம் - கிளம்பலாம்
சாட்டர் என்பதும் சிங்களம்
நீங்கள் கூறியவற்றில் கொழும்புத்தமிழும் கலந்துள்ளது//
நன்றி Paheerathan
1983ம் ஆண்டு தமிழருக்கு எதிரான போர் தொடங்கிய பின்னர்தான் சாதாரண இலங்கைத் தமிழன் வெளி நாட்டைப் பார்க்கத் தொடங்கினான். இருந்தாலும் கிராமியத் தனமான தமிழ் வழக்கு இன்னும் இலங்கையில் அழியாமல் இருப்பத்தற்கு இலங்கை ஒரு தீவாக தனியாக வாழ்ந்துவருவதுதான் காரணம். அவர்களின் பேச்சில் பழந்தமிழ் வழக்குகள் இருப்பதற்கு இதுவே காரணமாகும். கூர்மையாக அவதானித்தால் சென்னைப் பேச்சு வழக்குப் போன்று இலங்கைத் தமிழ் வழக்கும் நல்ல தமிழ் வழக்கில் இருந்து அதிக தொலைவில் விலகியிருப்பது தெரியவரும்.
டாக்டர் மு.வ அவர்கள் தனது இலங்கை குறித்த பயணக்கட்டுரையில் எழுதியுள்ளார்.
ஒரு இலங்கைத் தமிழன்
1983ம் ஆண்டு தமிழருக்கு எதிரான போர் தொடங்கிய பின்னர்தான் சாதாரண இலங்கைத் தமிழன் வெளி நாட்டைப் பார்க்கத் தொடங்கினான். இருந்தாலும் கிராமியத் தனமான தமிழ் வழக்கு இன்னும் இலங்கையில் அழியாமல் இருப்பத்தற்கு இலங்கை ஒரு தீவாக தனியாக வாழ்ந்துவருவதுதான் காரணம். அவர்களின் பேச்சில் பழந்தமிழ் வழக்குகள் இருப்பதற்கு இதுவே காரணமாகும். கூர்மையாக அவதானித்தால் சென்னைப் பேச்சு வழக்குப் போன்று இலங்கைத் தமிழ் வழக்கும் நல்ல தமிழ் வழக்கில் இருந்து அதிக தொலைவில் விலகியிருப்பது தெரியவரும்.
டாக்டர் மு.வ அவர்கள் தனது இலங்கை குறித்த பயணக்கட்டுரையில் எழுதியுள்ளார்.
ஒரு இலங்கைத் தமிழன்