இந்திய அணியின் ஒருநாள் போட்டித்தொடர்களிலிருந்து கங்குலியும் ட்ராவிடும் நீக்கப்பட்டுள்ளனர். சொல்லப்படும் காரணம் இளமை புதுமை. எல்லாம் சரி தான். ஆனால் form-ல் இருக்கும் கங்குலியை நீக்குவது ஒரு சரியான முடிவாக இருக்கப்போவதில்லை. மேலும் அது அணியின் ஒற்றுமையை அடுத்த டெஸ்ட் போட்டியில் சிதைத்துவிடும் அபாயம் இருக்கிறது.
இந்நேரத்தில், இருக்கும் இளமை கூட்டணியின் செயல்திறமையையும் ஒருமுறை பரிசீலனை செய்வது நன்று. தோனி, அவர் கடைசியாக நன்றாக விளையாடியது எப்போதென்பதே நினைவில் இல்லா அளவுக்கு இருக்கிறது அவருடைய performance! அணித்தலைவரின் நிலையே இப்படி இருக்கும்போது மற்றவர்களை எப்படி அளவிடுவது?
கண்டிப்பாக இந்திய அணி ஒருநாள் முதியோர் இன்றி விளையாடும் நிலை வரத்தான் போகிறது, அதற்காக பயிற்சி கொடுப்பதும் சரி. கங்குலி போன்றோரை நீக்குவதும் சரி. ஆனால் எல்லாவற்றிற்கும் இடம் பொருள் ஏவல் பார்ப்பது நன்று.
இன்னொரு வீரர் ட்ராவிட், தற்சமயம் இவரது form கேள்விக்குறியாக இருப்பதால் இவரை ஒருநாள் போட்டியை விட்டு விலக்குவதில் பெரிதாய் ஒன்றும் கேள்வி எழப்போவதில்லை. ஆனால் இந்திய அணியை பல ஆட்டங்களில் தன் தோளில் சுமந்த ஒரு வீரரின் இறுதி நிலை இப்படி இருக்கும் என்று யாருமே எண்ணியிருக்க மாட்டார்கள். தற்பொதைய புதிய வீரர்கள் இதை ஒரு பாடமாக கொள்வது நன்று.
"இதுவும் கடந்து போகும்"
லேபிள் அரசியல், கிரிக்கெட், விளையாட்டு
நீங்க சொல்றது 100க்கு 100 சதவீதம் உண்மை