காங்கிரஸ் அரசு ஸ்திரமான ஆட்சிமையத்தை கொண்டிருக்கவில்லை. மன்மோகன்சிங் பிரதமராக முன்னிருத்தப்பட்டாலும், சோனியா குடும்பமே ஆட்சி செய்தது. (சீனா ஒலிம்பிக் போட்டியின் போது சோனியாவிற்கு அழைப்பு அனுப்பியது ஆனால் மன்மோகன்சிங்கிற்கு அனுப்பவில்லை)

அமெரிக்காவின் கூலியாக செயல்பட்டது. இந்தியாவின் தொலைநோக்கு திட்டங்களுக்கு இது உதவுவதாக அவர்கள் கூறிக்கொண்டாலும், உலகநாடுகள் மத்தியில் இது ஒரு தலைகுனிவே.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் சாதனை என்று எந்த ஒரு விஷயத்தையும் நம்மால் எளிதில் நினைவுகூறமுடியாது. இப்படி இருந்தது ஆட்சி.

இலங்கை விஷயத்தில் தமிழர்களை மீண்டும் ஒருமுறை திட்டமிட்டு ஏமாற்றியது. பல்லாயிரம் தமிழர்கள் உயிரை இலங்கை ராணுவம் அழிக்க, இந்தியா மறைமுகமாக நேரடி உதவி அளித்தது.

இலங்கையில் நடந்த இனவொழிப்பை கண்டிக்ககூட இல்லை. காஸாவில் நடந்த யுத்தத்தை கண்டித்த காங்கிரஸ் அரசுக்கு இலங்கை கண்ணில் தெரியவே இல்லை. ஒரு குருட்டு அரசாங்கம் நடத்தப்பட்டது.

திமுக தமிழினத்தலைவரை ஒவ்வொரு முறையும் தங்கள் தலைவராக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கும் கட்சியாக இருந்துகொண்டு இலங்கை விவகாரத்தை கண்டிக்க பிரதமருக்கு கடிதம் எழுதி, தங்கள் பங்கிற்கு தமிழர்களை ஏமாற்றினர்.

திமுக ஒரு குடும்பகட்சியாக மாறி வருவதால், அவர்களை தேர்ந்தெடுத்தால் தமிழ்நாட்டிற்கு எந்த அளவில் நன்மைகள் கிடைக்கும் என்பது கேள்விக்குறி.

திமுகவால் ஒரு திறமையான ஆட்சியை தமிழகத்தில் கொடுக்க முடியவில்லை. நீதிமன்றத்தில் நடந்த வழக்கறிஞர் காவல்துறை சம்பவத்தில் மிக மோசமான அணுகுமுறையை கையாண்டது.

எதிர்கட்சிகளில் இருந்து வருபவர்களை எல்லாம் ஏற்றுக்கொள்ளும் தாராளமான கட்சியாக திமுக இருந்தாலும், கொள்கை அடிப்படை ஏதும் இன்றி வருவோரை எல்லாம் சேர்த்துக்கொள்வதால் கட்சி மீதான நம்பிக்கை குறைந்திருக்கிறது.

தமிழர்களின் உயிர்களை மிக துச்சமாக மதிக்கும் இந்த கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழர்களின் நலன் பாதிக்கப்படும்.

சுருக்கமாக சொன்னால், தமிழர்களுக்கெதிரான கூட்டணி இது.

21 Comments:

 1. நட்புடன் ஜமால் said...
  \\சுருக்கமாக சொன்னால், தமிழர்களுக்கெதிரான கூட்டணி இது.\\

  வரிகள் சுருக்கம் தான்

  வலியோ சுருக் சுருக்
  கே.ரவிஷங்கர் said...
  49 ஓ ?
  கோவி.கண்ணன் said...
  This comment has been removed by the author.
  கோவி.கண்ணன் said...
  சூப்பர், நானும் ஒரு 10 பாயிண்ட் தயார் பண்ணலாம் என்று இறங்கி எழுத ஆரம்பித்தேன், உங்களது அட்டகாசம் !

  1. சுதந்திர போராட்டம் முடிந்ததும் மகாத்மா காந்தி காங்கிரசை கலைக்கச் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல், பாரம்பரிய கட்சி என்ற பெயரில் புதியவர்களுக்கு வழிவிடாமல் குறுக்கே நிற்பது

  2. நேரு குடும்பத்திடம் இருந்து ஆயுட்கால அடகில் இருப்பது

  3. பல முறை அரசியல் பிரிவு சட்டம் 351ஐ பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கலைத்தது, கவிழ்த்து

  4. நாடுதழுவிய பலம் இல்லை என்று தெரிந்தும் மாநிலக் கட்சிகளுடன் பேரம் நடத்தி ஆட்சி நடத்துவது

  5. நரசிம்மராவ் தவிர்த்து வேறு ஒரு தென்னிந்தியருக்கு இதுவரை பிரமராகும் வாய்ப்பு அளிக்கதது
  Rajaraman said...
  தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.
  கிஷோர் said...
  நன்றி ஜமால்
  கிஷோர் said...
  //49 ஓ ?//

  இருப்பதை பார்த்தால் அந்த ஒன்று மட்டும்தான் இன்னும் கறை படியாமல் உள்ளது. அதையும் கூட பூத்தில் செயல்படுத்தமுடியுமா என்பது குழப்பம்தான்
  ராஜ நடராஜன் said...
  பதிவர்கள் மன ஓட்டங்கள் எப்படி என்பது தமிழ்மணம் பக்கம் வந்தாலே தெரிந்து விடுகிறது.ஆனால் வழியில் போய்க் கொண்டிருந்தவனை நிறுத்தி தமிழா என்று கேட்டு விட்டு(அதுதான் முகத்திலேயே ஒட்டி வைத்திருக்கிறதே:)
  ஒருத்தர் தேர்தல் முடிவை சொல்லி விட்டார்.

  திமுக காங்கிரஸ் 15

  அதிமுக கூட்டணி 15
  மிச்சமிருக்கும் 10 கொஞ்சம் கொஞ்சமா மற்ற கட்சிகளுக்குப் பிரித்துக் கொடுத்து விட்டார்.

  49-0 போடலாமுன்னு சொல்றவங்க பெரும்பாலும் வெளிநாட்டுல அல்லது தமிழ்நாட்டுல பதிவு போட்டுகிட்டு இருக்காங்க!

  முன்பு தேர்தல் நாளன்று வீட்டில் உட்காரும் நடுத்தர வர்க்கத்தைப் பார்த்து கோபம் வரும்.இப்போ?
  கிஷோர் said...
  நன்றி கோவி அண்ணா. உங்கள் 10 பாயிண்டுகளையும் போடுங்கள்.

  நம்மால் முடிந்தவரை விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். இந்த சூழலில், மற்ற கட்சிகளும் நல்ல நிலையில் இல்லாமல் இருப்பது, வளர்ந்து வரும் நம்நாட்டிற்கு சாபக்கேடே
  கிஷோர் said...
  நன்றி ராஜாராமன். உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
  லக்கிலுக் said...
  40க்கு 40ம் அதிமுக கூட்டணிக்கு வந்துவிட்டால் இந்தப் பிரச்சினைகளில் எதுவுமே இருக்காது. எனவே ஆதரிப்பீர் இரட்டை இலை, பம்பரம், மாம்பழம்...
  கிஷோர் said...
  மிக்க நன்றி ராஜ நடராஜன்
  கிஷோர் said...
  //40க்கு 40ம் அதிமுக கூட்டணிக்கு வந்துவிட்டால் இந்தப் பிரச்சினைகளில் எதுவுமே இருக்காது. எனவே ஆதரிப்பீர் இரட்டை இலை, பம்பரம், மாம்பழம்...//

  கடந்த முறை எந்த நன்மையும் செய்யாமல் இருந்த எல்லா வயிற்றெரிச்சல்களையும் கொட்டிக்கொண்ட கூட்டணிக்கு ஓட்டு போடாமல் இருப்பது வேறு, அதிமுகவிற்கு ஓட்டு போடுவது வேறு.

  கண்டிப்பாக அதிமுகவும் தனது ஈழ ஆதரவு நிலையை மாற்றிக்கொள்ளத்தான் போகிறது. அவர்களும் தமிழன் முகத்தில் கரி பூசத்தான் போகிறார்கள்.

  ஆனால் முந்தையவர்கள் பூசிய கரி இன்னும் முகத்தில் உள்ளதே.
  ’டொன்’ லீ said...
  பார்ப்போம் என்ன நடக்குது என்று...
  ramalingam said...
  என் முடிவும் இதுதான். சரியான சுயநலக்கும்பல்.
  ஜோ / Joe said...
  //கண்டிப்பாக அதிமுகவும் தனது ஈழ ஆதரவு நிலையை மாற்றிக்கொள்ளத்தான் போகிறது.//

  அப்படியென்றால் இப்போது அதிமுக ஈழ ஆதரவு நிலையில் இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள் ..ஐயகோ!
  கிஷோர் said...
  //பார்ப்போம் என்ன நடக்குது என்று...//

  ஹூம்ம்ம்ம்
  கிஷோர் said...
  நன்றி ராமலிங்கம்
  கிஷோர் said...
  //அப்படியென்றால் இப்போது அதிமுக ஈழ ஆதரவு நிலையில் இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள் ..ஐயகோ! //

  இருப்பதாக காட்டிக்கொள்கிறார்களே!! :)
  ஜோசப் பால்ராஜ் said...
  யாரையும் நம்ப முடியாது எல்லாருமே கொள்ளைக் கும்பல் தான்.
  இவங்களுக்கு எல்லாம் ஓட்டுப் போடாதிங்க நம்மல சொல்ல முடியது, ஆனா இவங்களுக்கு ஓட்டு போடுங்கன்னு எந்த கட்சியையாவது காட்ட முடியுதா நம்மால்?
  புதுசா இனிமே நல்லவங்க வந்தா தான் உண்டு.
  ஆனா எல்லா நல்லவங்களும் இப்டியே ப்ளாக் எழுதிக்கிட்டுல்ல இருக்கோம்?
  என்ன சொல்றதுன்னே தெரியாத அளவுக்கு கோபம் வருது கிஷோர்.
  கிஷோர் said...
  இந்த விஜயகாந்தும் கடைசி வரைக்கும் காங்கிரஸ் கூடவே இழுத்துகிட்டு இருந்தாரு.

  இந்த அம்மையாரு, 3வது 3வது அணினு சொல்லிகிட்டு பிஜேபிகிட்ட பேசிகிட்டு இருக்கு.

  தமிழ்நாட்டைக்காப்பாற்ற ஒருத்தர் கூட இல்லை என்பது மிக மோசமான விஷயம்

Post a Comment

Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.