மன்னார்குடி டேஸ்

மன்னார்குடி ஒரு நகரத்திற்கு சற்றும் குறைவின்றி எல்லா வசதிகளுடன், கிராமிய மணத்துடன் இருக்கும் ஒரு திருவாரூர் மாவட்ட ஊர். என்னதான் திருவாரூர் என்று சொல்லிக்கொண்டாலும் மக்கள் மனதில் இன்னும் தஞ்சாவூர்தான் விருப்பமான ஊர்.

அதிகாலையில் எழுந்துவிடும் ஊர். இன்னமும் மாட்டுவண்டிகளின் ஆதிக்கம் ரோட்டில் அதிகம் இருக்கும். அதுவும் கொம்பில்லாத ஒருவகை மாடுகள் இங்கு வண்டி இழுக்க அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

சாதிகளுக்கு தனியே வீதிகளும், விரால் மீன் விருப்பும், சட்டென சீறும் கோபமும், இன்னமும் சாணி மணம் கமழும் மண்ணும், அதிமுக பினாமிகளும், பந்தலடியும், தேரடியும், ஃபின்ட்லே மற்றும் நேஷனல் பள்ளிகளும், SGS கேபிளும் மன்னைக்கு உரித்தானவை.

மன்னை கிட்டத்தட்ட முக்கிய ஊர்களுக்கு நடுவில் இருக்கின்றது. இங்கிருந்து முக்கிய ஊர்கள் கிட்டத்தட்ட 30 முதல் 40 கிமீகளுக்குள் இருக்கின்றன என்றும் சொல்லலாம். தஞ்சை, நாகை, திருவாரூர், குடந்தை, பட்டுக்கோட்டை போன்ற ஊர்கள் அருகில் உள்ளன.

இந்த ஊரில் நான் பிறந்ததையும், விடுமுறைகளுக்கு சென்று வந்ததையும் தவிர எந்த ஒரு பெரிய சம்பந்தமும் எனக்கும் இந்த ஊருக்கும் இல்லை. எனவே என்னால் முடிந்த/தெரிந்த‌ வரை மன்னார்குடி பற்றி எழுதப்போகிறேன்.

தவறுகள் திருத்தப்படுவதற்கே, திருத்துங்கள்.

22 Comments:

 1. Suresh said...
  நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு
  நானும் இரு பதிவு நகைச்சுவையாய் போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
  படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)

  ராமதாஸின் அரசியல் யுக்தியும் அம்மாவின் புத்தியும்
  http://sureshstories.blogspot.com/2009/04/ramadoss-and-amma-politics.html

  காதல் - படித்து பாருங்க பசங்களா - பேச்சுலர் தேவதாஸ்களுக்கு
  http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_10.html
  எம்.எம்.அப்துல்லா said...
  //அதுவும் கொம்பில்லாத ஒருவகை மாடுகள் இங்கு வண்டி இழுக்க அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

  //

  mannail mattum alla....keela thanjai maavattam muluvathum athupola madugalai paarkalaam.
  ராஜ நடராஜன் said...
  என்னை மாதிரி உருப்படாத கேஸ தாராபுரத்துக்கு படிக்க அனுப்பிட்டாங்க.நல்லா படிக்கிற புள்ளைன்னு வாத்தியார் பொண்ணுக்கு மன்னார்குடியாம்.கடைசியா அதுவும் கோயம்புத்தூர் வந்தே கல்லூரிக் குப்பை கொட்டிச்சு!
  ’டொன்’ லீ said...
  மன்னார் குடி....ஏன் இந்த பெயர் வந்தது...?
  அறிவிலி said...
  சுவாரசியமான தொடரை எதிர்பார்க்கிறேன்.

  வாழ்த்துகள்
  கிஷோர் said...
  நன்றி சுரேஷ்
  கிஷோர் said...
  //mannail mattum alla....keela thanjai maavattam muluvathum athupola madugalai paarkalaam.///


  ஆமாம் ஆமாம். பார்த்திருக்கிறேன்
  கிஷோர் said...
  //என்னை மாதிரி உருப்படாத கேஸ தாராபுரத்துக்கு படிக்க அனுப்பிட்டாங்க.நல்லா படிக்கிற புள்ளைன்னு வாத்தியார் பொண்ணுக்கு மன்னார்குடியாம்.கடைசியா அதுவும் கோயம்புத்தூர் வந்தே கல்லூரிக் குப்பை கொட்டிச்சு!
  //

  :) :)
  கிஷோர் said...
  //மன்னார் குடி....ஏன் இந்த பெயர் வந்தது...?

  //

  தெரியலயேப்பா. அதெப்படி உனக்கு மட்டும் இந்த மாதிரி சந்தேகம் வருது :)
  கிஷோர் said...
  ஊக்கத்திற்கு நன்றி அறிவிலி
  VIKNESHWARAN said...
  ம்ம்ம் அடிச்சி ஆடுங்க :)
  கிஷோர் said...
  முயற்சி பண்றேன் விக்கி :)
  SK said...
  அண்ணே, அதிமுக பினாமி இல்லை.. மொத குடும்பமும் அங்கே தான் :) ஒத்தை தெரு, ரெண்டாம் தெரு, ராஜ கோபாலசுவாமி கோவில், கான்வென்ட் ஸ்கூல், தேவி, சங்கரா ஸ்கூல்.... பிள்ளையார் கோவில், அனுமார் கோவில், வடுவூர், அபிராமி மற்றும் சாமி தியேட்டர்......................

  அய்யய்ய்யோஓஓஓஒ கொசுவத்தி சுத்த வைக்கறீங்களே :)
  கிஷோர் said...
  //அண்ணே, அதிமுக பினாமி இல்லை.. மொத குடும்பமும் அங்கே தான் :) //

  இதுக்கே ஆட்டோ வருமோனு பயமா இருக்கு. நீங்க வேற‌

  //ஒத்தை தெரு, ரெண்டாம் தெரு, ராஜ கோபாலசுவாமி கோவில், கான்வென்ட் ஸ்கூல், தேவி, சங்கரா ஸ்கூல்.... பிள்ளையார் கோவில், அனுமார் கோவில், வடுவூர், அபிராமி மற்றும் சாமி தியேட்டர்//

  ஏதேது நிறைய ஆட்டோகிராஃப் இருக்கும்போல தெரியுது
  SK said...
  கொஞ்சமா நஞ்சமா :)
  கிஷோர் said...
  //கொஞ்சமா நஞ்சமா :)

  //

  அருமை அருமை.

  நீங்க எந்த ஏரியா?
  SK said...
  இப்படி கஷ்டமான கேள்விய கேட்டுபுட்டீன்களே :)

  உண்மையான பேரு கே எஸ் எஸ் ஐயர் தெருன்னு சொல்லுவாங்க. ஆனா கைலாசநாதர் கோவில் நேர் எதிர இருக்கும் தெரு. அங்கே போனா திருவாரூர் பஸ் எல்லாம் அந்த வழியா தான் போகும். பேச்சு வழக்கு பேரு ஒன்னு இருக்கு மறந்து போச்சு .. நினைவி படுத்தி சொல்லறேன்.
  கிஷோர் said...
  ஓஹோ ஓகே ஓகே. நமக்கு அந்த அளவு ஏரியா தெரியாது. :)
  SK said...
  oh sari :)
  RVS said...
  Mr. Sk,

  Athukku "Puthu Theru" nu peru.


  RVSM
  SK said...
  அதே அதே :)
  murali iyengar said...
  i dont really understand why mannargudi is full of creative guys.
  i wonder?...
  my new friend sunder alais sundar raja cholan is also a mannargudian(i named it him). suprisngly he is very great poet. i mean it. recently he has written a aanthai to lord shiva. i suppose there is something spl in mannargudi.

Post a Comment

Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.