முழு கதையும் ஒரு நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணை மறு&குறுக்குவிசாரணைகள்தான். இப்படி ஒரு கதையை படித்துவிடமுடியுமா என்ற சந்தேகத்துடன் ஆரம்பித்த என்னை, வெகு சில பக்கங்களுக்குள் முடிந்துவைத்துக்கொண்டது இந்தக்கதை.
ஒரு பெரிய பணக்காரர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு மீண்டும் உடல் தேறிவரும்போது மர்மமான முறையில் விஷம் கொடுக்கப்பட்டு உயிரிழக்கிறார். இங்கு சமய சந்தர்ப்பங்கள் வீட்டின் பெரியமாப்பிள்ளைக்கு பாதகமாக இருக்கின்றது.
அரசுதரப்பு வக்கீலுக்கு மாப்பிள்ளையை தூக்குக்கு அனுப்பியாக வேண்டிய சூழ்நிலையை வெகு சுலபமாக உருவாக்குகின்றனர் அரசுதரப்பு சாட்சிகள்.
ஆனால் எதிர்தரப்பு குற்றவாளி தரப்பு வக்கீல் அனைத்து சாட்சிகளையும், ஆயில்பேட்டால் டென்னிஸ் பந்துகளை அடித்து விளாசுவதுபோல் அனாயசமாக அடித்து ஆடுகின்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த வழக்கின் 9 ஜூரர்களையும் சம்மதிக்கவைக்கவேண்டும்.
இத்தனையையும் கடந்து வழக்கில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் கதை.
இந்த கதை பல இடங்களில் உணர்ச்சிவசப்படவும், கண்கலங்கவும், புல்லரிக்கவைக்கவும், சிரிக்கவைக்கவும் செய்தது.
அந்த காலத்து பேச்சுநடையும், நீதிமன்ற செயல்பாடுகளையும் விளக்கமாய் எடுத்துரைக்கின்றார் தேவன்.
நல்ல ஒரு வாசிப்பனுபவத்தை கொடுக்கும் புத்தகம் இது.
வகைகள்
- அரசியல் (7)
- அறிவியல் புனைகதை (1)
- அனுபவம் (5)
- இசை (2)
- இலங்கை (6)
- ஊடகம் (3)
- ஊர் சுற்றி புராணம் (2)
- என் எழுத்து (14)
- கடலூர் (5)
- கடவுள் (1)
- கவிதை பவன் (2)
- காதல் (1)
- கிரிக்கெட் (1)
- கிறிஸ்துமஸ் (2)
- கொஞ்சம் பெரிசு (1)
- கோபங்கள் (4)
- சிங்கை (4)
- சிரிப்பு (1)
- சிறுகதை (1)
- சிறுகவிதை (5)
- சினிமா (8)
- சுஜாதா (2)
- செயின்ட் ஜோசஃப் (2)
- செய்தி (1)
- ட்விட்டர் (2)
- தமிழ (1)
- தமிழாக்கம் (1)
- தமிழ் (1)
- தமிழ்மணம் (3)
- படித்தது (3)
- பதிவர் சந்திப்பு (1)
- புத்தகம் (4)
- புலம்பல் (13)
- ப்ளாகதை (2)
- மதிப்பீடுகள் (1)
- மன்னார்குடி டேஸ் (1)
- மொக்கை (3)
- வரலாறு (1)
- விளையாட்டு (1)
:)
பின்னூட்டங்கள் நுண்நவீனத்துவம் தெரிகின்றது :-)
சிறிது காலமே வாழ்ந்திருந்தாலும் பல நல்ல கதைகளை கொடுத்துள்ளார்.