சுஜாதாவின எழுத்துநடையில் சாதாரண லீவ் லெட்டர் எழுதினாலே சுவையாக இருக்கும். அதுவும் மர்மநாவல் என்றால் கேட்கவேண்டுமா?
சுஜாதா ஒருகாலகட்டத்தில் நிறைய மர்மக்கதைகள் எழுதினார், ஆனாலும் அவர் அந்த கதைகளுக்காக மக்கள் மனதில் நிலைத்திருக்கவிரும்பவில்லை என்று தெரிகின்றது. அவரது காவியக்கதாபாத்திரங்கள் கணேஷ் மற்றும் வசந்த். இந்த பெயர்களை கடக்காமல் ஒரு வாசகன் உருவாக வாய்ப்பில்லை.
கணேஷ் வசந்த் பற்றி இங்கு சொல்லப்போவதில்லை, அவர்களைப்பற்றி தனியாக எழுதலாம் என்று எண்ணியுள்ளேன். இந்த நாவலைப்போல் இவர்கள் இருவரும் அடி வாங்கியிருக்க வாய்ப்பில்லை. அவ்வளவு அடி வாங்குகின்றனர்.
மிகவும் சுவாரசியமாக ஆவி, மறுபிறப்பு சமாச்சாரங்களை கையாண்டிருக்கின்றார் சுஜாதா. அவரைப்போன்ற அறிவியல் ஆசாமிகள் இதை நம்பினால் அவரது நம்பகத்தன்மை என்ன ஆகுமென்று அனைவருக்கும் தெரியும். அதற்கேற்றார்போல் இந்த நாவலில் அவரது பாணியில் கதையை நகற்றிச்சென்றுள்ளார்.
முதல்நாள் இரவு படிக்கத்துவங்கி லேசாக பயந்து பின் இரவு முடிந்தவரை தொடர்ந்தேன். உண்மையாகவே இந்த நாவல் லேசாக பயமுறுத்துகின்றது.
ஒரு கிராமத்தில் உள்ள பூர்வீகநிலத்தை விற்க உதவ வரும் கணேஷ், வசந்த் அந்த நிலத்தில் உள்ள வில்லங்கங்களை லேசாக கிளற, அந்த நிலத்தின் சொந்தக்காரியாக இருக்கப்போகிற ஒரு மைனர் பெண்ணால் அவளைச்சுற்றி கொலைகள் நடக்க, அதற்கு பூர்வஜென்ம ஆவிகள் துணைபோவதாக ஒட்டுமொத்த கிராமமும் நம்புகின்றது. இதை கணேஷ், வசந்த் அறிவியல் மற்றும் மூடநம்பிக்கை உதவியுடன் அணுகி அனைத்தையும் சமாளித்து வெற்றி பெறுவதுதான் கதை.
நல்ல அருமையான விறுவிறுப்பான நாவல். படித்துப்பாருங்கள்
நிறைய அறிவியல் தகவல்களை அந்தகாலத்திலேயே எழுதி கலக்கியிருக்கிறார் வாத்தியார்.
லேபிள் புத்தகம்
நல்ல இரசணைங்க ...
Kalakal... attakaasamana kathai ithu...
//இந்த நாவலைப்போல் இவர்கள் இருவரும் அடி வாங்கியிருக்க வாய்ப்பில்லை. அவ்வளவு அடி வாங்குகின்றனர்.
//
Aamam.. ithai Sujathave sollirukaru.
//இதை கணேஷ், வசந்த் அறிவியல் மற்றும் மூடநம்பிக்கை உதவியுடன் அணுகி அனைத்தையும் சமாளித்து வெற்றி பெறுவதுதான் கதை//
Vetri perugirargala enbathu thaan kathai. ippadi vanthirukanumoa :)
Good writeup!
http://koottanchoru.wordpress.com/2009/02/01/கணேஷ்-வசந்த்-வாழ்க்கை-வர/
விறுவிறுப்பான நாவல்..தினமும் 2 மணித்தியாலம் என்ற கணக்கு படி 3 நாளில் படித்து முடித்தேன்...
லீனா இன்னும் என் நினைவில் ஓடிக்கொண்டிருக்கிறார்..
சுஜாதாவின் கதாநாயகிகள் ஏன் தான் இப்படி என்னை பாடாய்படுத்துகிறார்களோ..? :-))
உண்மைதான்!!!
//Vetri perugirargala enbathu thaan kathai. ippadi vanthirukanumoa :)//
எப்படியும் சுஜாதா கதை ரொம்ப நெகடிவாக இருக்காதென்பதால்தான் அப்படி போட்டிருந்தேன்
:)
நல்ல பதிவு. இதன்பிறகும் நான் கணேஷ் வசந்த் பற்றி எழுதத்தேவையில்லை :)
//லீனா இன்னும் என் நினைவில் ஓடிக்கொண்டிருக்கிறார்..//
எனக்கு அருவியில் குளித்துக்கொண்டிருக்கிறாள்.
உண்மைதான் தேவா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
:-))nijam