பிரபஞ்சத்தின் சூன்யவெளியில் நடந்துகொண்டிருந்தபோது,
சே எங்கிருந்து வந்தது உந்த கெட்ட பழக்கம், பிரபஞ்சம், சூனியம் என்ற கெட்டவார்த்தைகள்?
மரணத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையில் உள்ள வினோதமான முரண்களை கடக்க நினைக்கையில்,
எங்கிருந்தோ வந்து தெறிக்கிறது எப்போதோ மன்னித்துவிட்டு வந்த நம்பிக்கைதுரோகத்தின் கடைசி பிசிறு
வரைமுறைக்குள் செல்ல நினைத்து சாலை கடக்கையில்,
வந்து முகத்தில் அறைந்து உமிழ்ந்து செல்கிறான், எதிர் பக்க பாதசாரி.
நன்றி திரு.பாதசாரி
மனதின் வலி மனதை தேடும் தேடலில் கலந்துவிடுகின்றது
எல்லாவற்றையும் கடந்து காசிக்கு செல்ல நினைக்கையில்
முதுகில் அடிக்கிறான் நான் கடவுள் ஆர்யா
கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் செல்லும் அளவு பயம் விட்டுவிடவில்லை மனதிற்கு
எரிந்த பிணங்களும் அவற்றின் வாசமும் எங்கும் வந்து கொல்லும்.
நன்றி ராஜபக்சே
இதுவரை எழுதியதை அழிக்கமுடியவில்லை, படிப்பவர்கள் அழித்துவிடுங்கள்
நினைவின் பதிவேட்டில் ஒரு புத்தகக்குறியாய்,
திருவனந்தபுரத்து வின்ஸ்டர் ஹாஸ்டலின் மழைப்பாசியும், அழுகிய சருகுகளும்
லேபிள் என் எழுத்து, கவிதை பவன்
யாராச்சும் கண்டுபிடிச்சு சொல்லுங்கோ
அப்ப நான் எல்லாம் எப்ப பின் நவீனத்துவவாதி ஆகிறது..?
அடுத்த பதிவர் சந்திப்பில் இது பற்றி உங்களுக்கு மட்டும் தனியாக சிறப்பு வகுப்பு எடுக்கிறேன். :)