தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?
உரிமை இழந்தோம்
உடைமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
விடியலுக்கில்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?
உரிமை இழந்தோம்
உடைமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?
விடியலுக்கில்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?
உரிமை இழந்தோம்
உடைமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?
லேபிள் இலங்கை
பாட்டா ...
பாட்டா ...//
ஆமா ஆழமான அர்த்தங்கள் உள்ள பாட்டு
ஆமாம் டொன்லீ
கண்டிப்பாக. இந்த பாடல் இலங்கை வானொலியில் தடை செய்யப்பட்டதாக ஒரு தகவலும் உண்டல்லவா