எழுத்தாளர்களை எழுத்தாளர்களாக பாருங்கள்.
ஒருவர் இறந்து இருக்கும் போது அவரைப்பற்றி பாராட்ட வேண்டாம் குறைந்தபட்சம் ஒரு சவத்துக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு அமைதியாவது காக்கலாமே. அது புரியாத அறிவிலிகள் உடனே பார்ப்பனீயம் பெரியாரியல் என்று பெரிய வெங்காயப்பொறியல்களை ஆரம்பிக்கின்றன.
அவரது எழுத்தை நேசிக்காமல் அவருடைய தனிப்பட்ட விஷயங்களில் நுழைந்து விமர்சனம் செய்வது கையாகாலாகாத்தனத்தயே காட்டுகின்றது.சுஜாதா போன்ற ஒரு ஜனரஞ்சக அல்லது அறிவியல் எழுத்தாளரிடம் இருந்து எதை எதை எதிர்பார்க்கமுடியுமோ அதை மட்டும் எதிர்பாருங்கள் மூடர்களே.
டாவின்சியின் படைப்புகளை ரசிப்பவர்கள் அனைவரும் அவரின் ஓரினப்புண்ர்ச்சியையும் ஆதரிப்பவர்களா? அல்லது அந்த ஒரு விஷயத்தை வைத்து அவருடைய படைப்பு சரி இல்லை என்பீர்களா? என்ன மடத்தனமான பேச்சு.
சிலர் இப்படித்தான் இருப்பார்கள். சுதந்திரதினம் அன்று, காந்தியை திட்டுவார்கள், சுதந்திரம் கிடைக்காமல் இருந்திருக்கலாம் என்று எழுதுவார்கள். அவர்களை எல்லாம் என்னவென்று சொல்வது??? வெறும் விளம்பரப்பிரியர்கள் மட்டுமே.
சுஜாதா ஒன்றும் சமுதாய சீர்திருத்தவாதி அல்ல. அவர் ஒரு எழுத்தாளர் மட்டுமே.
அவர் வந்தார், கடமையை சிறப்பாக செய்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நேரத்தில் சில _______கள் ஹிட்ரேட்டை ஏற்றிக்கொள்ள செய்யும் இக்காரியங்கள் சுயஇன்பமே!!!!
லேபிள் சுஜாதா
இந்த சாதாரண விஷயம் கூட புரியாம நம்மூர்ல ஆளுங்க இருக்காங்களேன்னு நெனச்சா ரொம்ப வருத்தமா இருக்கு.
ஐ.ஆம்.ஸாரின்னு ஒருத்தராவது பதிவு போட்டா, சந்தோஷமாயிருக்கும். பாப்போம்.
உங்கள் எழுத்தும் கருத்தும்.
இனிமேல் தான் எழுதியுள்ளவற்றை படிக்க வேண்டும்.
வேர்ட் வெரிபிகேஷன் தேவையா?
//வேர்ட் வெரிபிகேஷன் தேவையா? //
நன்றி வடுவூர் குமார். வேரிபிகஷன் தொல்லை ஒழிந்தது.