குறும்படம் என்பது தமிழில் சோகமயமாகவோ அல்லது மெதுவான நகர்வுகளோடும் இருக்கவேண்டும் என்பது போன்ற சில விதிகளுடனே பெரும்பாலும் காணப்படும். அதை தகர்த்து கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் சொல்ல வந்த விஷயத்தை நச்சென்று சொல்லி முடிக்கின்றது தாயம். அதில் சில சமூக செய்திகளும் இருப்பது ஒரு ப்ளஸ்.

தாயம் என்ற இந்த குறும்படத்தின் இயக்குனர் மதிமாறன் புகழேந்தி.

அருண் பலமுறை எழுதியும் தேறமுடியாத ஒரு சப்ஜெக்ட்டை பேப்பர் சேசிங் மூலம் முறியடிக்க ஐடியா கொடுக்கிறான் நண்பன் சந்தோஷ். சந்தோஷுக்கு தெரிந்த பல்கலைக்கழக ஆளிடம் பணத்தை கொடுத்தபின் தான் தெரிகின்றது சந்தோஷ் ஒரு கஞ்சா பார்ட்டி என்று. சந்தோஷும் அருண் நினைத்தபடியே ஒரு ஏமாற்று வேலைதான் செய்கிறான். ஆனால் அது இறுதி வரை அருணிற்கு தெரியாமல் பார்த்துக்கொள்கிறான். இறுதியில் யார் வெல்கிறார்கள் என்பதே கதை.

அமோரஸ் பெர்ராஸ்(தமிழில் ஆயுத எழுத்து) போல் இருவரின் கண்ணோட்டத்திலும் படம் பயணிக்கின்றது. முதல்பாதி அருணின் கண்ணோட்டத்தில் அவன் தேர்வு முடிவிற்காக காத்துக்கொண்டிருப்பது வரை நீள்கின்றது.

அடுத்தபாதி சந்தோஷின் கண்ணோட்டத்தில் செல்கின்றது. இவனும் எல்லா பித்தலாட்டத்தையும் செய்து அருணின் தேர்வுமுடிவிற்காக காத்திருக்கும்போது அருண் மற்றும் சந்தோஷின் கண்ணோட்டங்கள் இணைந்து முடிவு வருகின்றது.

Part-1





Part-2






இந்த ஒரு குட்டிப்படத்தில், வாய்ப்பு(Probability) பற்றி இணைத்திருப்பது அருமை. அதேபோல் ஒரு சின்ன சமூக கருத்தையும் சொல்லி இருப்பது பாராட்டத்தக்கது.

இயக்குனர் ரஹ்மானின் இசைப்பிரியராக இருப்பதால் அடா மற்றும் ஸ்லம்டாக் மில்லியனர் பாடல்கள் மற்றும் இசை சரியான இடத்தில் பயன்படுத்தியுள்ளார்.

உச்சகட்ட காட்சியில் இசையும் காட்சியும் இணைந்து விருந்தளிக்கின்றன.

இயக்குனருக்கு முதல் முயற்சி இது என்று சொன்னால் கூட நம்ப முடியவில்லை. பாராட்டப்பட வேண்டிய ஒரு முதல்முயற்சி.

இவ்வளவு சொல்லிவிட்டு படத்தில் உள்ள குறைகளை சொல்லாமல் விடுவது சரி அல்ல. :)

படத்தின் நீளம் சற்று அதிகம். ஒரு குறும்படத்தை இவ்வளவு நேரம் தாக்குபிடித்து பார்க்கவைப்பது சற்று கஷ்டமான வேலை. ஆனால் அதில் வெற்றி கிடைத்திருக்கிறது என்று தான் நினைக்கிறேன்.

வசனம், படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கிறார்கள், பார்வையாளர்களுக்கு சில விஷயங்களை கற்றுக்கொடுப்பதுபோல் சில வசனங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அருணின் கண்ணோட்டம் இன்னும் சரியாக காட்டப்படாதது. கதையின் இரண்டாம் பாகத்தில் இருந்த அழுத்தம் முதல் பாதியில் இல்லை.

இந்த படத்தை UNCUT ஆக பார்த்தவன் என்பதால் இந்த படத்தின் எடிட்டிங் மற்றும் நேர மேலாண்மை அட்டகாசம்.

அருமையான எடிட்டிங் இந்த படத்தை தொழில்நுட்ப ரீதியில் பேசவைக்கின்றது.

வசனம் பல இடங்களில் படம் பார்க்கிறோம் என்ற உணர்வின்றி இயல்பாக இருக்கின்றது

இந்த படத்தை பார்க்கும்போது தென்படும் சில புத்திசாலித்தனமான திரைக்கதை சமாச்சாரங்களை நான் கூறினால் பார்க்கும்போது உங்கள் ஆவலை குறைத்துவிடும் என்பதால், அதை நீங்களே கண்டுகொள்ளுங்கள்.

படம் பார்த்தபின் சந்தோஷ்/அருண் யாருக்கு உண்மையில் வெற்றி என்பதை சற்று யோசித்துப்பாருங்கள், உங்களை அதன் விடை ஆச்சர்யப்படுத்தும்

9 Comments:

  1. சி தயாளன் said...
    ஓ....பார்க்கிறேன்...எங்கே தேடிப்பிடித்தீர்கள்..?
    Unknown said...
    கிஷோர்,

    அட்டகாசம்.It is a thriller.My so many guesses about the end went wrong.probability theoryயை நச்சென்று நுழைத்திருப்பது.


    கடைசியில் வழக்கமா “நான் திருந்திட்டேன் அல்லது உப்பைத் தின்னவன் தண்ணீர் குடிப்பான்” இல்லை.

    Hats off to மதிமாறன் புகழேந்தி.

    இதில் நடிப்பவர்கள் எல்லாம் நடிக்கவே இல்லை.Slick editing.இதில் வரும் நாய்,அட்டெண்டராக வருபவர் அப்படியே பொருந்துகிறார்.சாப்பிட்டு விட்டு பேசியவாறே லுங்கியில் கைத் துடைத்தப்படியே பேச்சு.

    அடுத்துபேச்சுத் தமிழ்.
    அட்டெண்டரும் அருணும் போனில் பேசும் காட்சி.

    ஒரு ஒரு குறை “பேப்பர் சேஸ்” டீல்
    ஆரம்பிக்கும் முதல் காட்சியில் ரொம்ப
    அலட்சியமாக வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசுகிறார்கள்.அருணின் பார்வையில் நம்பகத்தன்மை குறையும்.


    வாழ்த்துக்கள்.

    இப்போதுதான் உங்கள் விமர்சனத்தைப்
    படிக்கப் போகிறேன்.Why? I don't want to get influenced by your review.
    Unknown said...
    சொல்ல மறந்து விட்டேன்.இதை ரசித்து எங்கள் பார்வைக்கு கொண்டு வந்தது.
    Unknown said...
    வந்ததற்கு நன்றி.

    //இயக்குனருக்கு முதல் முயற்சி இது என்று சொன்னால் கூட நம்ப முடியவில்லை. பாராட்டப்பட வேண்டிய ஒரு முதல்முயற்சி//

    அப்படியா? நம்ப முடியவில்லை.
    கிஷோர் said...
    டொன்லீ இந்த படம் என் நண்பன் இயக்கியது. எனவே நான் எடிட்டிங்கிற்கு முன்பே பார்த்துவிட்டேன். இப்போதுதான் யூடுயூபில் ஏற்றப்பட்டது
    கிஷோர் said...
    மிக்க நன்றி ரவிஷங்கர்.

    இந்த படத்தை இயக்கிய மதிமாறன் என் நண்பன். இருந்தாலும் நான் முடிந்தவரை பயாஸ்டாக இல்லாமல் விமர்சிக்க முயற்சித்து இருக்கிறேன்.

    உங்கள் விமர்சனத்திற்கு என் நண்பனின் சார்பாகவும் நன்றிகள்.

    இது உற்சாகம் அளிக்கின்றது :)
    Venkatesh said...
    அருமையான குறும்படம்! வாழ்த்துகள்!!

    வெங்கடேஷ்
    Mukundan said...
    "ராஜ் அண்ணன்" சொல்லி இதனைப் பார்த்தேன்...மிக மிக நேர்த்தி.
    Mukundan said...
    "ராஜ் அண்ணன்" சொல்லி இதனைப் பார்த்தேன்...மிக மிக நேர்த்தி.

Post a Comment





Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.