கைமாறிய காதலி

5 நிமிட ரயில் தூரத்தில் இருந்தாலும் தினமும் பார்க்கவேண்டும் என்ற கட்டாயம் எப்படி இல்லையோ அதே போல் அடிக்கடி பார்க்கவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. நானும் ஜெய்யும் அடிக்கடி பார்த்துக்கொள்வதில்லை.

இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தோம். சிங்கப்பூர் வந்தும் கூட அடிக்கடி பார்த்துக்கொள்வதில்லை. எப்போதாவது பியர் அடிக்க ஒன்று கூடுவதுண்டு. கல்லூரியில், பசங்களுடன் நான் படத்திற்கு சென்றால், அதே ஷோவில் ஏதேனும் ஒரு கல்லூரி பெண்ணுடன் ஓரசீட்டில் உட்கார்ந்து இருப்பான். எல்லோருக்கும் இந்த மச்சம் வாய்ப்பதில்லை.

இந்த ஜெய் பயல் இன்று என்னை வரச்சொல்லி இருந்தான். இன்று தான் இந்தியா சென்று திரும்பி இருந்தான். கண்டிப்பாக விமான நிலையத்தில் இருந்து ட்யூட்டி ஃப்ரீ சரக்கு வாங்கி வந்திருப்பான். எனவே நாளை அலுவலகத்திற்கு மருத்துவ விடுப்புதான் போடப்போகிறேன்.

இவனுக்கு அரசல் புரசலாக சில தொடர்புகள் உண்டு. முன்பொரு நாள், அலுவலகத்தில் அவன் அருகில் இருந்த பெண் மருத்துவ விடுப்பில் இருந்த போது இவனை போனில் அழைத்து வீட்டிற்கு வரச்சொன்னாளாம். இவன் தகுந்த முன்னேற்பாடுகளுடன் அவள் வீட்டிற்கு செல்ல, அவள் வீட்டில் யாரும் இல்லையாம். வீடு திரும்ப மாலை ஆகிவிட்டது என்றான் ஒரு நாள் போதையில்.

இப்போது அலுவலகம் மாறிய பின் ஒரு இந்தியப்பெண்ணுடன் சுற்றிக்கொண்டிருக்கிறான். இந்த முறை இவள் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது இவளை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிக்கொண்டிருக்கிறான். இந்த பெண் ஏற்கனவே ஒருவனுடன் திருமணம் செய்யாமல் இருந்து, சக்கையான பின் அவன் சாதுர்யமாக விலகிவிட்டான். அன்புக்கு ஏங்கிக்கொண்டிருந்த போது இவன் சிக்கியிருக்கிறான். இவனும் எப்படி மடங்கினானோ தெரியவில்லை. ஆனால் வசமாக சிக்கி இருக்கிறான். இதை சொல்லும்போது அவன் கையில் மீன், சில பூ படங்கள் நீல நிற பால்பாயிண்ட் பென்னால் வரையப்பட்டிருந்தன. அவை அந்த பெண்ணால் வரையப்பட்டிருக்கலாம் என்று நினைத்தேன் பூ சற்று மென்மையாக இருந்தது

ஒருவேளை அந்த பெண் பற்றி வீட்டில் பேசியிருக்கலாம் ஏதாவது நடந்திருக்கலாம். ஹூம்ம்ம் இந்த 5 நிமிட பயணத்திற்குள் எத்தனை விஷயங்களை அசை போடுகின்றது மனது.

பாட்டிலை திறக்கும் முன் விஷயத்தை திறந்தான் ஜெய்.

“எனக்கு வீட்டில கல்யாண ஏற்பாடு பண்ணிருக்காங்க டா.”

“என்னடா சொல்ற, அப்ப அந்த கையில பூ படம் போட்ட பொண்ணு?” என்றேன் லேசான அதிர்ச்சியுடேன்.

”அதுதான்டா எனக்கும் கவலையா இருக்கு. கல்யாணம் பண்ணிகிட்டு வந்ததுக்கப்புறம், ஏதும் பிரச்சினை பண்ணக்கூடாது இல்ல”

“அடப்பாவி, அப்ப அவள கழட்டிவிடப்போறியா?“

“டேய் அப்படிலாம் சொல்லாதடா, அவ பாவம்டா. ஆனா அவளுக்கு யாராச்சும் கிடைச்சா பரவாயில்ல, அவ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிற டைப் தான்”

“என்னடா சொல்ற? வீட்டில இந்த பொண்ண பத்தி பேசலையா?”

“இல்லடா, ஒரு நல்ல கவுண்டர் பொண்ணு ஃபோட்டோ கொடுத்தாங்க, வீட்டில செம வசதி. பொண்ணும் குத்துவிளக்கு மாதிரி இருக்கு”

“இந்த பொண்ணுக்காக நீ கவலைப்பட்டா, பேசாம இந்தியாவே போய்டு. அங்க உனக்கு 75,000 சம்பளம் கொடுக்க ரெடியா இருக்காங்களே”

“இல்லடா, இந்த பொண்ணு வீட்ல நான் சிங்கப்பூர்ங்கறதால தான் பொண்ணே கொடுக்கறாங்க”

“சுத்தம். இப்போ என்னடா பண்றது."

"அதுதான்டா எனக்கும் தெரியல. பேசாம் இந்த பொண்ண நீ பாத்துக்கறியா?”

“அட நாயே என்னடா சொல்ற?”

“இல்ல மச்சி, பொண்ணு நல்ல பொண்ணுடா, நல்லா செலவு பண்ணும், ரொம்ப ஃப்ரெண்ட்லி. சோசியல் டைப் புரியுதா” இந்த புரியுதா என்ற இடத்தில் சற்று அழுத்தம் அதிகம் காட்டினான் ஜெய்.

“போடா இவனே, இதெல்லாம் கேவலமா இல்லயா?”

“டேய் நீ ஏன்டா இவ்ளோ பொங்கறே? சும்மா ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பிப்பார்”

“ஆள விடு சாமி. நானாவது நல்லாயிருக்கேன்”

“ஓகே ஒகே டென்சன் ஆகாதடா. வந்த வேலையைப்பார்ப்போம்”

2 நாட்கள் ஆகியிருக்கும். ஒரு இரவு போனில் அழைத்து, “நான் அவகிட்ட எல்லாம் சொல்லிட்டேன்” என்றான்

“என்னடா சொன்னா அவ?”

“கொஞ்ச நேரம் அமைதியா இருந்தா. அப்புறம் அவகிட்ட நான் வாங்கியிருந்த 500$ பணம் கேட்டா”

“எப்படியோ பிரச்சினை முடிஞ்சா சரி”

“ஆனாலும் அவ பாவம்டா. முடிஞ்சா அவளுக்கு ஒரு எஸ் எம் எஸ் அனுப்பிபாருடா. அவ நம்பர் உன்கிட்ட இருக்கு தானே. இப்படிதான் நானும் எஸ் எம் எஸ் அனுப்பி பிடிச்சேன்”

“போடா வெண்ண. வேலையப்பாரு போய்”

பெண் நல்ல அழகாகத்தான் இருப்பாள். சரி ஒரே ஒரு எஸ் எம் எஸ் அனுப்பித்தான் பார்க்கலாமே என்று அனுப்பும்போது எனக்கு தெரியாது, அவள் அன்றிரவு தற்கொலை செய்துகொள்வாள் என்றும் அடுத்த நாள் காலையிலேயே போலீஸ் என்னை வந்து விசாரிக்கும் என்றும்
----o0o----

15 Comments:

  1. நட்புடன் ஜமால் said...
    எங்கே எப்படி

    படிச்சிட்டு வாரேன்.
    கிஷோர் said...
    என்ன வில்லு விஜ்ய் ஸ்டைலில் சொல்றீங்க :)
    நட்புடன் ஜமால் said...
    அம்மாடியோவ்

    அந்த பேர கேட்டால சும்மா அதி ...
    நட்புடன் ஜமால் said...
    \\பெண் நல்ல அழகாகத்தான் இருப்பாள். சரி ஒரே ஒரு எஸ் எம் எஸ் அனுப்பித்தான் பார்க்கலாமே என்று அனுப்பும்போது எனக்கு தெரியாது, அவள் அன்றிரவு தற்கொலை செய்துகொள்வாள் என்றும் அடுத்த நாள் காலையிலேயே போலீஸ் என்னை வந்து விசாரிக்கும் என்றும்\\


    அட என்னாச்சி ba
    நட்புடன் ஜமால் said...
    எழுத்து நடை நல்லா இருந்திச்சி.
    நட்புடன் ஜமால் said...
    அந்த நம்பர வேற யாருக்கும் கொடுத்துடாதீங்க.
    Cable சங்கர் said...
    நைஸ்..
    கிஷோர் said...
    நன்றி ஜமால்.

    //அந்த நம்பர வேற யாருக்கும் கொடுத்துடாதீங்க.//

    அன்னைக்கு உங்களுக்கு கொடுத்த நம்பர் யாரோடதுனு நெனச்சீங்க :)
    கிஷோர் said...
    //நைஸ்..//

    நன்றி சங்கர்
    எம்.எம்.அப்துல்லா said...
    ஜீப்பர் ஸ்ப்பீடு :)
    கிஷோர் said...
    //ஜீப்பர் ஸ்ப்பீடு :)//

    நன்றி (நுண்ணரசியல் உண்டா? :) )
    சி தயாளன் said...
    என்ன இது ஆளுக்காள் சிங்கப்பூரில் இருந்து சொந்தக் கதையோட கிளம்பிட்டீங்க...?

    எனிவே..கதையை கொண்டு போய் முடிச்ச விதம் எனக்கு பிடித்திருந்தது...ஒரு திரில்லர்..தொடரட்டும் திரில்லர்கள்..:-)
    Unknown said...
    கிஷோர்,

    நல்ல திகிலோட முடிச்சிருக்கீங்க.
    நல்ல நடை.It is a well-knit story.
    கிஷோர் said...
    நன்றி டொன் லீ, நன்றி ரவி :)
    sa said...
    தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட்

    தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம்.

    மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

    http://www.newspaanai.com/easylink.php

    நன்றி.

Post a Comment





Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.