சிங்கப்பூர் வந்து நீண்ட நாட்கள் ஆனபின் திடீரென்று பழைய தமிழ் படங்களில் சிங்கை எப்படி இருந்தது என்று பார்க்க ஆவலுடன், பல படங்களையும் பாடல்களையும் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். அந்த வரிசையில் நினைத்தாலே இனிக்கும் படத்தில் இருந்து இப்பாடலை கேட்டேன்.

நிறைய முறை கேட்ட பாடல் தான், இருந்தாலும் அப்பாடலின் இசையும் பாடிய விதமும் துள்ளல் ரகம். எம்.எஸ்.வி பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

எஸ்.பி.பியும் தன் பங்கிற்கு பாடலை அட்டகாசப்படுத்தியிருக்கிறார். அழகான ஏற்ற இறக்கங்களுடன் அவர் பாடும் விதம் அருமை. குறிப்பாக, "மன்மதன் வந்தானா, சங்கதி சொன்னானா?" இடத்தை அவர் பாடும் போது, குரல் பல பரிணாமங்களை எட்டுகிறது.

தலைவர் ரஜினியின் ஸ்டைல் உச்சகட்டத்தில் இருக்கின்றது. அவரது ஸ்டைலும், டான்ஸும் அருமை. பிக கருப்பாக, எண்ணெய் ஒழுகும் முகத்தோடு இருந்தாலும், அட்டகாசமாக இருக்கிறார்.

ஏதோ லென்ஸ் ஃபில்டர் எல்லாம் போட்டு, கெடுத்து வைத்திருக்கிறார்கள் பாடலை. ஒருவேளை அந்தகால கிராஃபிக்ஸாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்படி இத்தனை துள்ளல்களோடு இருக்கும் இப்பாடலைப்பார்த்து ரசியுங்கள்.



2 Comments:

  1. Anonymous said...
    கிஷோர் அவர்களே..

    //எஸ்.பி.பியும் தன் பங்கிற்கு பாடலை அட்டகாசப்படுத்தியிருக்கிறார். அழகான ஏற்ற இறக்கங்களுடன் அவர் பாடும் விதம் அருமை. குறிப்பாக, "மன்மதன் வந்தானா, சங்கதி சொன்னானா?" இடத்தை அவர் பாடும் போது, குரல் பல பரிணாமங்களை எட்டுகிறது.//

    அதான் பாலுஜி.. கலக்கல் பாடல் பதிவிற்க்கு நன்றி.
    கிஷோர் said...
    //அதான் பாலுஜி//

    மெய் மெய்.
    நன்றி Covai Ravee :)

Post a Comment





Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.