தமிழ்மணத்தின் ராசி நன்றாக வொர்க் அவுட் ஆகின்றது. சென்ற பதிவின் தலைப்பில் வெறும் ஜட்டி என்ற ஒரே ஒரு வார்த்தைக்காக ஹிட் காட்டுத்தனமாக ஏறிவிட்டது.

இனி கொஞ்சம் உஷாராக தலைப்பிடவேண்டும் என்று நினைக்கிறேன். எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதை விட எந்த பதிவை ரசித்தார்கள் என்பதே முக்கியம் என்று நினைக்கிறேன்.

வர வர எதை பதிவிடுவது என்பது மிகப்பெரிய குழப்பமாக உள்ளது. கொஞ்ச நாளைக்கு தொழிற்நுட்பம் மற்றும் வரலாறு சம்பந்தப்பட்ட பதிவுகளை/மொழிபெயர்ப்புகளை இடலாம் என்று எண்ணியுள்ளேன்.

பதிவர் வட்டம் என்பது இன்னமும் எனக்கு பிடிபடாமல் தான் இருக்கின்றது. அதாவது, பதிவர் வட்டத்திற்காக எழுதுவது. எத்தனை பேர் அதை படிக்கிறார்கள் என்பதும், அது எத்தனை பேருக்கு புரியும் என்பதும் சற்று சந்தேகத்திற்கிடமான விஷயம் தான். மேலும் வரலாற்றில் இடம் பெறும்போது(கமென்ட் கோவிந்து: இது ரெம்ப ஓவர்) சற்று குழப்பங்களை ஏற்படுத்தலாம்.

மெயிலனுப்ப வேண்டிய விஷயங்களை பதிவிடுவதும், சாட் செய்ய வேண்டிய விஷயங்ளை ட்வீட் செய்வதும் அந்தந்த தொழிற்நுட்பங்களை அதற்கான பாதையில் இருந்து மாற்றிவிடும்.

புதிதாக டொமைன் வாங்கியிருக்கின்றேன். தற்போதைக்கு ரீடிரக்ட் செய்து வருகிறேன். புதிதாக தளம் வாங்கியபின் எல்லோரையும் போல் வேர்ட்ப்ரஸ்ஸுக்கு மாறிவிடுவேன். வேர்ட்ப்ரஸ் தரும் சுதந்திரம் தனிதான். ப்ளாக்கரைப்போல் புதிய xml வைத்து குழப்பாமல். தெளிவாக php இல் இருப்பது மிகப்பெரிய பலம்.

இந்த விவரங்கள் எல்லாம் பதிவுலகில் கொட்டை தின்று பழம் போட்டவர்களுக்கு இதெல்லாம் "என்னது இந்திராகாந்தி செத்துட்டாங்களா?" வகை மேட்டர். :)

சரி இந்த வாரம் வீக்கென்டில் சிங்கையில் சிங்கை தெற்காசிய முனைய பதிவர் சந்திப்பு !
நடைபெறவிருக்கிறது. பொதுவாக ஒரு கூட்டத்தில் கலப்பதென்பது எனக்கு எப்போதும் வேப்பங்காய் விஷயம். உடல்நிலை வேறு சற்று மோசமாக இருப்பதால், முடிந்தவரை முயற்சி செய்யலாம் என்று எண்ணியுள்ளேன்.

நிகழ்ச்சி பற்றிய தகவல்கள்:
நாள் : நவம்பர் 1, 2008
இடம் : செந்தோசா சுற்றுலாத்தலம் டால்பின் லகூன் கடற்கரை அருகில்
நேரம் : மாலை 4 - 8

கடைசியாக ஒரு ஹைக்கூவுடன்,

மீன்கடையில்
இறந்த மீனின் வாயில் விழுகின்றது
மழைத்துளி

4 Comments:

  1. Unknown said...
    உங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் படித்தேன் .மற்ற வலை பதிவுகள் போல் அசட்டுத்தனம் இல்லை.புத்திசாலித்தனம் இருக்கிறது. இது அபூர்வம் .
    இடம் (2) கவிதை போட்டிருக்க வேண்டாம் . இடம் (1) kavithai dilute ஆகி விடுகிறது .
    என்னடைய வலைபூவிற்கு வந்து விமர்சனம் செய்யலாம் .raviaditya.blogspot.com
    வாழுத்துக்கள் !
    கிஷோர் said...
    நன்றி ரவிஷங்கர்.

    இடம் கவிதைகள் பற்றிய உங்கள் கருத்துக்கள் சரிதான்.
    இரண்டாவது கவிதை சற்று redundant தான். :)

    உங்கள் வலைப்பக்கம் வந்து பார்க்கிறேன்...
    கிஷோர் said...
    ஏம்பா அகில், என்ன சொல்ல வர்ரீங்க?
    விஜய் ஆனந்த் said...
    தலைவரே...நாளைக்கு ஒழுங்கா சென்டோசா வந்து சேருங்க...

    ஊர்க்காரனின் அன்பு வேண்டுகோள்...

Post a Comment





Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.