சிங்கப்பூர் comex 2008

மீண்டும் ஒரு IT fair சிங்கப்பூர் சன்டெக்கில் 28.08.2008 முதல் 31.08.2008 வரை நடைபெறுகின்றது. வழக்கம்போல் 1,2,3,4 மற்றும் 6 வது வளாகங்களில் கம்பெனிகள் கடைவிரித்துள்ளனர். பொதுவாக இவை வெறும் Crowd-pullers தான். பெரிய தள்ளுபடியோ சலுகைகளோ எதிர்பார்க்க முடியாது. பல கம்பெனிகள் ஒரே இடத்தில் குவிந்திருப்பதால், தேர்ந்தெடுக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆப்பிள் தனது ஐபாட்‍களுக்கு 20% கழிவு தரப்போவதாக அறிவித்துள்ளது. (கடை எண்கள்: 8108,8236,6138)

ஜி.பி.எஸ் சமாச்சாரங்கள்(சிங்கப்பூருக்கு சுத்தமாக தேவை இல்லாத ஒன்று) இம்முறை பல சலுகைகளுடன் கிடைக்கும் என்று நினைக்கிறேன். HP-யில் 499$ க்கும் MIO-வில் 268$க்கும் கிடைக்கின்றது.

லேப்டாப்புகளை பொருத்தவரை லெனோவோ நிறைய தள்ளுபடியில் கிடைக்கின்றது. மற்ற கம்பெனிகளும் இன்னும் சில நாட்களில் நிறைய சலு்கைகளுடன் கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளன.

கேமிராக்களும் குவிந்து இருக்கின்றன. கிட்டத்தட்ட அனைத்து கம்பெனிகளும் கடை விரித்துள்ளன. விலை ஒன்றும் பெரிய மாற்றம் இல்லை.

பல கடைகள் பந்திக்கு முந்து கணக்கில் பல பொருட்களை தள்ளிவிடுகின்றனர். இவற்றை வாங்குவது அவ்வளவு எளிதல்ல.

பிரிண்டர் வாங்க இது நல்ல தருணம். நிறைய கம்பெனிகள் சலுகைகள் அளிக்கின்றன. Brother Printer வாங்கினால், கேர்ட்ரிட்ஜ் விலை குறைவு என்பதால், அதிக உபயோகங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஸ்கானர்கள் மற்றும் பிரின்டர்கள் சேர்ந்த ஆல்‍ இன் ஒன் வகை வாங்கச்செல்பவர்கள், ஸ்கானர் வெளியில் அமைந்தவாறு இருப்பவற்றை வாங்குவது நல்லது.

iSmart கம்பெனி எக்ஸ்டெர்னல் ஹார்ட்டிஸ்க் போன்ற பொருட்களை நிறைய தள்ளுபடியில் தருவதாக தெரிகின்றது. கடை எண் B6438

Ovation கம்பெனியும் நிறைய தள்ளுபடி விலையில் பொருட்களை வழங்குவதாக தெரிகின்றது. உதாரணம்: 320 ஜிபி 2.5" எக்ஸ்டெர்னல் ஹார்ட்டிஸ்க் விலை 125$. கடை எண் 6448

தகவல் உபயம்: The Strait Times/28.08.2008

சிம்லிம் தான் நம்ம பேட்டை என்பவர்களுக்கு இது ஒன்றும் பெரிய வித்தியாசத்தை பார்க்கமுடியாது :)

சிங்கப்பூரின் மக்கள்தொகையில் கால்வாசிப்பேர் வந்து செல்ல வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே கூட்டம் காட்டுத்தனமாக வர வாய்ப்பிருக்கின்றது.

7 Comments:

  1. nagoreismail said...
    மிக்க நன்றி, நிறைய தகவல்கள், பயன்பெறுவேன்

    "ஸ்கானர் வெளியில் அமைந்தவாறு இருப்பவற்றை வாங்குவது நல்லது"

    அது என்ன? வெளியில் அமைந்தவாறு, அது எப்படி தயவு செய்து விளக்கமளிக்க இயலுமா?

    சிங்கைவாசி
    ஜோசப் பால்ராஜ் said...
    மிக பயனுள்ள தகவல்களுடன் கூடிய அறிவிப்பு. நன்றி.
    கிஷோர் said...
    நன்றி nagoreismail,ஜோசப் பால்ராஜ்
    கிஷோர் said...
    nagoreismail,

    There are some All-in-one printers, in which we need to input the image to be scanned like inserting paper in printer. In that scanners, we cant scan business cards etc.
    Ex: http://h10010.www1.hp.com/wwpc/sg/en/ho/WF05a/18972-18972-238444-410635-410635-1146511.html

    So go for a system, in which scanner is just embedded over the printer. Which operates exactly as photocopier machine.
    Ex:http://h10010.www1.hp.com/wwpc/sg/en/ho/WF05a/18972-18972-238444-3328086-3328086-1138399.html
    ஜோசப் பால்ராஜ் said...
    வரும் சனிக்கிழமை சிங்கையில் பதிவர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது. கட்டாயம் வந்து கலந்து கொள்ளவும். எனது அலைபேசி எண் 93372775.
    கிஷோர் said...
    இந்த முறையும் பங்கேற்க முடியவில்லை ஜோசப் :(
    இந்தியா வந்திருக்கிறேன். கண்டிப்பாக அடுத்த முறை சந்திக்கிறேன் (என்ன ஒரு 5 அல்லது 6 நாட்களில் இன்னொரு சந்திப்பை போட்டுட மாட்டோம் :) )
    ஜோசப் பால்ராஜ் said...
    சரி சிங்கை வந்ததும் தொடர்பு கொள்ளுங்க. உங்கள சந்திக்கிறதுக்காகவே ஒரு சந்திப்ப ஏற்பாடு செஞ்சுருவோம். என் மின்னஞ்சல் முகவரி: joseph.paulraj@gmail.com

Post a Comment





Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.