குசேலனுக்கு என்னப்பா குறைச்சல்?

டிஸ்கி:
அதிக எதிர்பார்ப்பின்றி என்னைப்போல் தியேட்டர் மாறி நுழைந்து பாருங்கள்.

கோலாலம்பூர் ட்வின் டவர்ஸில் டார்க் நைட் படம் பார்க்க சென்ற நான், கடைசி நேரத்தில் குட்டியான‌ தலைவரின் கட் அவுட் பார்த்தபின் தான் தெரிய வந்தது குசேலன் படம் அங்கு ஓடிக்கொண்டிருப்பது. சரி தலைவர் படத்தை முதல் நாளே பார்த்து பீற்றிக்கொள்ளலாம் என்று நுழைந்தும் விட்டேன்.

டிக்கெட்டின் போது,எந்த சீட் வேண்டும் என்று டிக்கெட் விற்ற பெண் நக்கலாக கேட்டார். பார்த்தால் முழுக்க எல்லா சீட்களும் நீல நிறத்தில் இருந்தன. போச்சுடா டிக்கெட் இல்லை போல என்று நினைத்து கவலைப்படலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது கடைசி வரிசையில் ஆச்சர்யமாக ஒரு 5 சீட் காலியாக இருக்க(ஆரஞ்சு நிறம்) பிடித்தேன் ஒரு சீட்டை.

உள்ளே நுழைந்ததும் தான் தெரிந்தது, மொத்தமே தியேட்டரில் 5 பேர் தான். சூப்பரு என்று நினைத்த படி இருக்கும் போது இன்னொரு 3 ஜோடிகள் தியேட்டரின் மூலை சீட்டுகளுக்கு அடம் பிடித்து செல்ல, சரி இவர்கள் படம் பார்க்கப்போவதில்லை என்று தீர்மானித்துவிட்டபடியால் இன்னமும் மொத்த கவுண்ட் 5 தான்.

சரி என்று உட்கார்ந்தால் பசுபதியும் ஆன்ட்டியும் மன்னிக்கவும் மீனாவும் அவர்களின் இரு குழந்தைகளும் ஆடிப்பாடி கொஞ்சம் வருத்தப்பட்டுக்கொண்டு அப்படியே போய்க்கொண்டிருந்தது.

இந்த இடத்தில் குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம், கிராஃபிக்ஸ். தசாவதாரத்தின் ஆரம்ப காட்சிகளை விட நேர்த்தியான முறையில் செய்யப்பட்டிருந்தது. சிறுபிள்ளைத்தனமாக ஒரு அருவியை செட் செய்து இருந்தாலும், நேர்த்தி இருந்தது. கிட்டத்தட்ட எல்லா காட்சிகளும் டிஜிட்டல் கலர் கரெக்ஷன் அல்லது ஃபில்டர் முறையில் ரீடச் செய்யப்பட்டிருக்கின்றன. வேறு வழி, காசை செலவு செய்யவேண்டுமே.

சினிமா சினிமா பாட்டு ஏனோ ஏடிஎம் படத்தின் துவக்கப்பாட்டு எல்லாப்புகழும் பாட்டை நினைவுபடுத்தியது.

பசுபதி தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார், இருந்தாலும் விருமாண்டி, மும்பை எக்ஸ்ப்ரஸ் போல பலவித நடிப்பை காட்ட வழியில்லை.

சந்தானமும், வடிவேலுவும் படத்தில் உள்ளேன் ஐயா.

ஜி.வி.பிரகாஷின் முதிர்ச்சியின்மை பாடல்களில் தென்பட்டாலும் பாடல்கள் ஒன்றும் அவ்வளவு மோசமில்லை. ஆனால் படமாக்கப்பட்ட விதம் மிகவும் மட்டரக‌ம். நான் இடையில் சில பாடல்களுக்கு தூங்கித்தொலைந்தேன்.

இங்குள்ள தியேட்டர்களில் இடைவேளை விடப்படுவதில்லை, எனவே எல்லா பாடல்களுக்கும் கூட இருந்த 5 பேரும் வெளியேறி என்னை பயத்தில் தள்ளினர்.

ரஜினி பேய் படங்களில் தாராளமாக நடிக்கலாம். அதுவும் தலை மட்டும் வெட்டப்பட்ட காட்சியில் அய்யோ என்ன ஒரு கொடூரமாக இருக்கிறார்.

படத்தில் சிறந்த நடிப்பு நயன்தாராவிடம் இருந்து வெளிப்பட்டது. இங்கே வெளிப்பட்டது என்பது single meaning-ல் பாவிக்கப்படுகிறது. ஒரு நடிகையாக வாழ்ந்திருக்கிறார்.

சினேகாவும் குஷ்புவும் ஒரு பாடலில் ஒரு காட்சிக்கு வருகிறார்கள். இருவரும் பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள். இதை குஷ்புவுக்கான பாராட்டாகவோ அல்லது சினேகாவுக்கான அர்ச்சனையாகவோ எடுத்துக்கொள்வது உங்கள் கையில்/கண்ணில்.

மற்றபடி நிறைய பேர் மொக்கையாக படத்தில் வந்துபோகின்றனர். அவர்கள் பெயர்களை எழுத ஆரம்பித்து உண்மையாருக்கு போட்டியாக விரும்பவில்லை.

நான் ரஜினியை இந்த படத்தில் எதிர்பார்க்கவே இல்லை, எனவே எதிர்பார்ப்பும் இல்லை. ஏதோ ஷூட்டிங் பார்க்க வந்து படத்தில் குதித்தது போல் காணப்படுகின்றார்.(இந்த வரி உபயம்: ஆனந்தவிகடன் மௌனம் பேசியதே விமர்சனம்)

ரஜினியின் க்ளோஸப் காட்சிகளில், ஒட்டப்பட்ட அவரது உதடுகள் தசாவதாரத்தை நினைவூட்டுகின்றன.

மொத்ததில் நல்ல ஒரு சென்டிமென்ட் படம். சத்தியமாக ரஜினி படம் அல்ல. பி.வாசு படம்.
எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி ஒரு முறை பார்க்கலாம்.

எல்லா தரப்பையும் திருப்திபடுத்த முயற்சி செய்துள்ள பி.வாசுவின் முயற்சி தோல்வி அடைந்தாலும், குப்பை என்றெல்லாம் அவசரப்பட்டு சொல்லிவிட முடியாது.

12 Comments:

  1. rapp said...
    ஒன்னுமே புரியல (குசேலன்)உலகத்துல, என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது
    ஸ்ரீ said...
    Adhu sari adhan padam flop aayiduchu illa. Appuram ennathuku rendu idathula dasavathaarathoda compare panreenga? Pongappa ponga. Edhavadhu olunga padhivu podunga. Compare panna nallavum irukaadhu. Compare pannavum koodathu. Idha yeppodhaan purinjikuveengalo!
    கிஷோர் said...
    //ஒன்னுமே புரியல (குசேலன்)உலகத்துல, என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது//

    அட இதைப்போய் சீரியஸா எடுத்துக்காதீங்க. சும்மா உல்லலாயி :)
    கிஷோர் said...
    //Appuram ennathuku rendu idathula dasavathaarathoda compare panreenga?//

    படத்தை நான் எந்த இடத்திலும் தர அடிப்படையில் ஒப்பிட்டு பார்க்கவில்லை, ஒப்பிட்டு பார்ப்பது சுத்த கேணைத்தனம் என்று நன்றாக தெரியும் :)

    மேலும், ஒரு மாணவனை முதல் ரேங்க் எடுப்பவனோடு ஒப்பிடுவது தான் வழக்கம்.

    ஆனால் சற்று யோசித்துப்பாருங்கள், தசாவதாரத்தின் முதல் காட்சி கமல் மேடையில் பேசும் காட்சி நல்ல கிராஃபிக்ஸ் நேர்த்தியுடன் செய்யப்பட்டிருந்ததா?

    இதற்கு உங்கள் பதில் ஆம் என்றால், நீங்கள் செல்லவேண்டிய தூரம் அதிகம்
    கிஷோர் said...
    //Edhavadhu olunga padhivu podunga//

    சரிங்க சார் :)
    கார்க்கிபவா said...
    //டிக்கெட்டின் போது,எந்த சீட் வேண்டும் என்று டிக்கெட் விற்ற பெண் நக்கலாக கேட்டார். பார்த்தால் முழுக்க எல்லா சீட்களும் நீல நிறத்தில் இருந்தன. போச்சுடா டிக்கெட் இல்லை போல என்று நினைத்து கவலைப்படலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது கடைசி வரிசையில் ஆச்சர்யமாக ஒரு 5 சீட் காலியாக இருக்க(ஆரஞ்சு நிறம்) பிடித்தேன் ஒரு சீட்டை.

    உள்ளே நுழைந்ததும் தான் தெரிந்தது, மொத்தமே தியேட்டரில் 5 பேர் தான். //

    தலைவரே பொய் சொல்ல ஒரு அளவே இல்லையா? அஞ்சு சீட்டுதான் காலினு நினைச்ச‌ நீங்க அதுல ஒன்னதான் அந்த பொண்ணுக்கிட்ட சொல்லி இருப்பீங்க.அப்பவே அவங்க அது புக் ஆயிடுச்சுனு சொல்லி இருப்பாங்க..அது தெரியாம உள்ள போனேனு சொல்றத என்னனு சொல்றது?விடுங்க,நீங்க நினைச்ச மாதிரி உங்க பதிவு சூடான இடுகைகள்ல வந்துடுச்சு..அதுக்காவது ரஜினிக்கு நன்றி சொல்லுங்க...வடிவேலு சொல்ற மாதிரி சின்னப்பிள்ளைதணமா இல்ல இருக்கு....
    கிஷோர் said...
    போடப்போறது மொக்கை. இதுல என்ன பாரபட்சம் கார்க்கி :)

    அதிலும் சீரியஸ் இடுகைகள் எப்போதும் சூடான இடுகையில் வராது
    கிஷோர் said...
    No Logic... Only Magic...
    கிஷோர் said...
    //அஞ்சு சீட்டுதான் காலினு நினைச்ச‌ நீங்க அதுல ஒன்னதான் அந்த பொண்ணுக்கிட்ட சொல்லி இருப்பீங்க.//

    நான் அந்த பொண்ணுகிட்ட கடைசி ரோவில ஒரு சீட்ட போடுனு தான் சொன்னேன்.
    (இந்த சமாளிப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை)
    Mathuvathanan Mounasamy / cowboymathu said...
    யாராவது ஒருத்தர் கூட ஆதரவா வாய்ஸ் குடுக்கமாட்டேன்கிறீங்களே
    venkatx5 said...
    சூப்பர் விமர்சனம் கிஷோர்.. எல்லா புது படத்தையும் விமர்சனம் செய்யுங்க.. நாங்கள் படம் பத்தி தெரியாம தொலை காட்சியில் டிரைலர் பார்த்து ஏமாந்து பொய் மண்டை காய்ஞ்சு வர்றோம்..
    கிஷோர் said...
    //எல்லா புது படத்தையும் விமர்சனம் செய்யுங்க//

    என்னப்பா? எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? :)

Post a Comment





Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.