சாருவின் இணைய தளத்தில் அவரது பாஸ்வேர்டு திருடு போனதில் அவரின் சந்தேக ந‌பரை அடிக்கோடிட்டுள்ளார். அவர் ப்ளாகில் இருந்து செயல்படுவதாக கூறியுள்ளார். இந்த பாஸ்வேர்டு பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருக்கும் போல இருக்கிறதே.

//என் பெயரில் புகுந்து பல கிரிமினல் வேலைகளைச் செய்த நபர் யாரென்று தெரிந்து விட்டது. அவர் blog களில் மட்டுமே எழுதி மிகப் பிரபலமான ஒரு ஆள். இன்னும் அவர் பிடிக்கப் படாததால் பெயரைச் சொல்ல முடியவில்லை. என் சக எழுத்தாளர்கள் மற்றும் blog களில் எழுதுபவர்கள் கவனமாக இருக்கும் படிக் கேட்டுக் கொள்கிறேன்.//

(இது ஒன்னும் ஏப்ரல் ஃபூல் சமாச்சாரம் இல்லயே!)

இதை சரி செய்யவேமுடியாது போலிருக்கிறதே. ஜாக்கிரதையாக இருப்பதைதவிற வேறு வழியில்லை.

தத்தம் பதிவுகளை ஒரு பேக்‍அப் எடுத்துக்கொள்வது நலம்.

பதிவிட ஒரு ஐடி, மற்ற விஷயங்களுக்கு ஒரு ஐடி பயன்படுத்துவது மேலும் நலம்.

நலம் நலமறிய ஆவல்.


சாரி சாரு

முந்தைய பதிவில் வந்த தகவல்கள் பொய் போல் தெரிவதால். அன்பர்கள் ஜாக்கிரதையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

From his site:

Hackers hacked charunivedita@rediffmail.com email address, So readers contact Charu through his new Email ID, charu.nivedita18@gmail.com

But the mail i got was from hotmail
You too hotmail ;-(

இது அவரது மெயில் ஐடியை ஹேக் செய்தவர்கள் அனுப்பியது.


How are you doing today? I am sorry I didn't inform you about my traveling to Malaysia for a program called "Empowering Youth to Fight Racism, HIV/AIDS, Poverty and Lack of Education. The program is taking place in three major countries in Asia, which are Taiwan, Singapore and Malaysia. It has been a very sad and bad moment for me, the present condition that i found myself is very hard for me to explain.

I am really stranded in Malaysia because I forgot my little bag in the Taxi where my money, passport, documents and other valuable things were kept on my way to the Hotel am staying, I am facing a hard time here because i have no money on me. I now owe a hotel bill of $1,400 and they wanted me to pay the bill soon or else they will have to seize my bag and hand me over to the Hotel Management. I need this help from you urgently to help me back home, I need you to help me with the hotel bill and i will also need $1,800 to feed and help myself back home. So please can you help me with a sum of $3,200 to sort out my problems here? I need this help so much and on time because i am in a terrible and tight situation here, I don't even have money to feed myself for a day which means i had been starving, so please understand how urgent i need your help.

I am sending you this e-mail from the city Library, I will appreciate what so ever you can afford to send me for now and I promise to pay back your money as soon as i return home. So please let me know on time so that i can forward to you the details of one of the hotel manager you need to transfer the money to me through Money Gram or Western Union.

Hope to hear from you soon. The embassy here have already promised to give me a covering traveling papers that i will need to have my way back home, all i need right now is the money to settle up the bills and leave.

Thanks and get back to me soon.

Regards,Charu

இந்த வாரம் கிடைத்த 3 நாட்கள் விடுமுறையில் நிறைய படங்களை பார்த்து தள்ளினேன். அதில் முக்கியமாக நான் ரசித்த படம் இது Perfume - The Story of a murderer.

பின்நவீனத்துவம், முன்பழையத்தனம் என்றெல்லாம் ஜல்லியடிக்க தெரியாதால்(நல்லவேளை பிழைத்தோம் என்ற குரல் கேட்கிறது ;) ), ஏதோ எனக்கு பிடித்த விஷயங்களை மட்டும் கூற விழைகிறேன்.


எனக்கு படத்தின் இயக்குனர், நடிகர்கள், நடிகைகள் பெயர் கூட தெரியாது. வேண்டுவோர் தயவு செய்து நண்பர் IMDB-ஐ கேட்கவும். தப்பித்தவறி ஆங்காங்கே இடம்பெற்றிருக்கும் சில தகவல்கள், முழுக்க முழுக்க copy-pase மட்டுமே.


Patrick Süskind எழுதிய Perfume என்ற நாவலைத்தழுவி எடுக்கப்பட்டிருக்கும் படம் இது.

ஒரு அழுக்கான மீன் மார்க்கெட்டில் பிறக்கும் ஒரு குழந்தை பிறந்தவுடன் தன் அம்மாவை காவு வாங்கி ஒரு அனாதை விடுதிக்கு வந்து சேர்கிறது. அங்கும் கீழ்த்தரமான சூழ்நிலையில் வளரும் அவன் 5 வயது வரை பேச்சு வராமல் இருக்கிறான். அங்கு அவனுக்கு ஒரு அதிசய ஆற்றல் இருப்பதை உணர்கிறான். அவனால் சாதாரணமானவர்களால் உணர்வதை விட பல மடங்கு மோப்பசக்தி இருக்கிறது.


இதை படத்தில் காட்டும் முதல் காட்சி, அவனை பின்னால் இருந்து ஒருவன் ஆப்பிளால் அடிக்க, அதை அவன் பின்திரும்பாமல் தலையை திருப்பி தப்பிக்கிறான். படுத்துக்கொண்டு பல வித வாசனைகளையும் அவன் மோப்பம் பிடித்து சொல்லும்போது நாமும் நம்மை அறியாமல் மோப்பம் பிடிப்பது திரைக்கதையின் வெற்றி.


அவன் விடுதியிலிருந்து வெளியேற்றி வேலைக்கு செல்லும்போது, முதன்முறையாக ஒரு இளம்பெண்ணின் வாசனையில் மனதை பறிகொடுத்து அதை கைப்பற்றும் முயற்சியில் அந்த பெண்ணை கொன்று விடுகிறான்.


அதிலிருந்து பெண்ணின் வாசனையை கைப்பற்றி பாதுகாத்துக்கொள்ளும் முயற்சியில் ஒரு Perfumer(நறுமணாளன் ;-) ) - இடம் வேலைக்கு சேர்கிறான். அங்கும் அவனால் பெண்ணின் நறுமணத்தை கைப்பற்றும் வித்தையை கற்றுக்கொள்ளமுடியாமல் வேறொரு ஊருக்கு சென்று தன் பணியை ஆரம்பிக்கிறான். அங்கு அதை கற்றுக்கொள்ளும் அவன் பல பெண்களை கொன்று அவர்களின் மணத்தை கொண்டு ஒரு தெய்வீக(!) நறுமணத்தைலத்தை தயாரிக்கிறான்.

இந்த முயற்சியில் கைதாகும் அவனுக்கு மரணதண்டனை அளிக்கப்படிகிறது. அப்போது அந்த தைலத்தை கொண்டு முழு ஊரையும் தன்வசப்படுத்தி தப்பிக்கிறான். இந்த காட்சியில் சுமார் 750 பேர் நிர்வாணமாகி புணர்வில் ஈடுபடுகின்றனர். அழகாக படமாக்கப்பட்டுள்ளது இந்த காட்சி (இதற்காகத்தான் நான் படம் பார்க்கவே ஆரம்பித்தேன் ஆனால் படத்தோடு ஒன்றுகையில் காட்சியில் அழகின் வீரியம் மட்டுமே உணர முடிகிறது).


இதில் நான் கதையை ஒரு Developing-Hints பாணியில் தான் சொல்லியுள்ளேன். இது ஒரு விஷுவல் திரைப்படம் இதை நான் காட்சிப்படுத்தி அழகை கெடுக்க விரும்பவில்லை(கெடுத்த வரை போதும் ;-) )


இதில் எனக்கு பிடித்த காட்சிகளாக பல காட்சிகள் அமைந்துள்ளன.


முதன் முறை பெண்ணை வாசனை பிடிக்கும் காட்சியை அழகாக எடுத்துள்ளனர். அந்த பெண் பிணமான பின்னும் அவன் அவளை வாசனை பிடிப்பது படு ஜோராக எடுக்கப்பட்டுள்ளது. பெண்ணின் ஸ்பரிசத்தில் அவள் மணத்தை உணர்ந்தவர்களால் இதை எளிதாக காட்சிப்படுத்திபார்க்க முடியும்.(இது ஆணாதிக்கத்தில் எழுதப்படவில்லை ;-) )


அவனுக்கு அடைக்கலம் தந்தவர்களை விட்டு அவன் பிரியும் போதெல்லாம் அவர்கள் இறப்பது மனதை என்னவோ யோசிக்கவைக்கிறது.


கதையோடு வரும் அந்த narration சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.


எல்லோரின் மணத்தையும் உணரும் அவன், மணமில்லா இடத்திற்கு வருவதும், அப்போது அவன் தனக்கென்று ஒரு மணம் இல்லாததை உணர்வதும் ஒரு அழகான self-realization. அந்த குகையும் அவனின் சிந்தனையும், திருவண்ணாமலை ரமணர் குகையும் ரமணரையும் நினைவு படுத்தியது.


இறுதிக்காட்சியில், ஒரு பெண்ணின் தந்தை அவனிடம் பேசுவதும்,அப்போது அவன் தன் முதல் கொலையை நினைத்து பார்ப்பதும் அழகான காட்சியமைப்பு.

படத்தினூடே வரும் பெண்களின் முழுஅழகு காட்சிகள் அழகான விதத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன.

மொத்ததில் நன்கு ரசிக்ககூடிய படம்.

Dont miss it.




இந்தியா போன்ற ஒரு ஹாட் நாட்டில் ஏன் இன்னும் விபச்சாரம் இன்னும் அரசு அங்கீகாரம் இன்றி இருக்கின்றது?

கலாச்சார சீரழிவு என்று கூச்சல் போடுவோர் தயவு செய்து கடந்த புத்தாண்டு தினத்தன்று நாடெங்கும் நடந்தேறிய கலாச்சார கலக்கல்களை நினைவில் கொள்ளவும்.

15 வயது அல்லது அதற்கு குறைவான வயதிலேயே ஆணின் உணர்வுகள் பொங்கி எழ ஆரம்பிக்கின்றன. பெரும்பாலானோர் சுய இன்பம் மட்டுமே போதும் என்று தங்களை திருப்திபடுத்திக்கொண்டு வாழ்க்கையில் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு சென்றுகொண்டிருக்கின்றனர்.(நான் அப்படி எல்லாம் செய்ததே இல்லை என்று சொல்லும் நல்லவர்களை பசித்த புலி தின்னட்டும்) சுய இன்பம் பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.
அப்படி சுய இன்பத்தை தாண்டி தன் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் போதுதான் அது வக்கிரமாக வெளிப்படுகிறது.

அப்படிப்பட்ட வக்கிரங்கள் தான் பெண்களிடம் அல்லது பெண்களுக்கு எதிராக வன்முறையாக வெளிப்படுகின்றன‌. குறைந்தபட்சம் பேருந்தில் உரசுதலில் தொடங்கி, கெட்ட தீண்டல்கள் வரை செல்கிறது. கலவி பற்றிய ஒரு விழிப்புணர்வு இல்லாததும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. பெண்ணின் கலவி சார்ந்த உடல்கட்டமைப்பு என்பது வெளித்தோற்றத்தில் மட்டும் இருக்கிறது என்று இன்னும் தவறாக எண்ணிக்கொண்டிருக்கும் பல ஆண்கள் இருக்கும் சமூகத்தில் கலவி அல்லது பாலியல் விழிப்புணர்வு என்பது ஒரு முக்கிய தேவையாகும். பஞ்சதந்திரம் படத்தில் கமல் சொல்லும் "என் செக்சுவல் ஆர்கன் என் தலையில் இருக்கு" என்னும் வசனம் பெண்களுக்கு மிகவும் பொருந்தும் என்பது ஒவ்வொரு ஆணும் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம்.

அப்படி வக்கிரத்தை எப்படியாவது திருப்தி படுத்தவேண்டும் என்று ஒரு சமுதாய பொறுப்புகளை மறக்கும் அல்லது மறைக்கும் ஆண் சென்று சேரும் இடம் கண்டிப்பாக நல்ல இடமாக இருக்கப்போவதில்லை. கால் சென்டர் செல்லும் பெண்களை வன்புணர்ச்சி செய்து கொன்று பின் காவல்துறையிடம் சரண் அடையும் வரை அவர்களை கொண்டு சென்று விடுகிறது. இது ஒரு எடுத்துக்காட்டுதான். இன்னும் பல எடுத்துக்காட்டுகள் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அப்படி ஹார்மோன் பகுத்தறிவை மீறும் அளவிற்கு ஆட்டம் போடவைக்கும் நிலையில், இப்படிப்பட்ட சீர்கேடுகளை தடுக்க மற்றும் "AIDS" போன்ற கொடும் நோய்களைத்தடுக்க அரசு விபச்சாரத்தை அங்கீகரிக்க வேண்டும். இன்னும் மும்பை, கொல்கத்தா மற்றும் பல நெடுஞ்சாலைகளிலும் சட்டப்பூர்வ அங்கீகாரமின்றி செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் இந்தியா கிட்டத்தட்ட 50 லட்சம் AIDS நோயாளிகளுடன் தடுமாறிக்கொண்டிருக்கிறது.

அரசாங்கம் ஒன்றும் TASMAC போல வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்கத்தேவை இல்லை. இருக்கும் சட்டங்களை சற்று சீரமைத்து, பாலியல் தொழிலாளர்களின் உடல்நிலை மற்றும் சுகாதாரமான சூழ்நிலை அமைத்துக்கொடுக்க முன் வரவேண்டும் என்பது என் எண்ணம்.

வழக்கம்போல் இதில் உள்குத்துகளை எதிர்பார்க்காமல், வெளி மனதால் யோசிக்காமல் ஒவ்வொருவரும் உண்மையான மனதுடன் யோசித்துப்பாருங்கள்.

இது பெண்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டதல்ல. அழிக்கமுடியாத ஒரு விஷயத்தை சற்று சீர்படுத்தலாம் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டது.

இதனால் வளரும் தலைமுறை கெட்டுவிடும் என்று நினைப்பவர்கள், அருகில் இருக்கும் பார்க்குகளுக்கு அல்லது இன்டர்நெட் சென்டர் சென்று இறைவன் அருள் பெற்று மறுபரிசீலனை செய்க.

சிங்கப்பூர் IT Show 2008 பற்றி நேற்றே சுடச்சுட ஒரு பதிவு நேற்றே போட்டாகிவிட்டது. இன்று அதைப்பற்றி ஒரு ஒரு அலசல்.
நான் வாங்க நினைத்திருப்பது ஒரு நல்ல Configuration லேப்டாப். இம்முறை ஐ.பி.எம் லெனோவோ மற்றும் திங்க்பேடில் அப்படி ஒன்றும் பெரிய Offer-கள் இல்லை.


SONY VAIO, பக்கம் கூட நெருங்கமுடியவில்லை. விலை சற்று குறைந்திருந்தாலும் அப்படி ஒன்றும் நல்ல configuration கிடைக்கவில்லை. இருப்பினும், அதன் look and feel அற்புதமாக உள்ளது.

Dell பொருத்தவரை ஆன்லைனில் இருக்கும் அதே Offer-கள் தான். முதல் நாளே சற்று இறுதி நேர மாறுதல்கள் தெரிந்தன(திடீரென்று 250GB Harddisk upgrade என்று கூறினர்). எனவே, இறுதி நாள் வரை காத்திருந்தால் இன்னும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ACER இல் சில நல்ல மாடல்கள் நல்ல விலையில் கிடைக்கின்றன. நான் ஒரு கடையில் விசாரித்துக்கொண்டிருக்கும் போது 3GB RAM upgrade கேட்டபோது உங்களுக்காக இலவசமாக தர முயற்சி செய்கிறேன் என்றார் சேல்ஸ் பையன். எனவே இறுதி நாள் வரை காத்திருந்தால் இன்னும் நல்ல Offer கிடைக்கும் என்றே நம்புகிறேன்.

MAC பக்கம் சென்றபோது அங்கு புத்தம்புதிய MAC AIR மாடல் நல்ல ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது.

கடந்த முறை, SITEX ‍இல் என் நண்பர் ஒருவர் அட்டகாசமான configuration இல் ஒரு லெனோவோ லேப்டாப் ஒன்றை இறுதி நாளன்று நல்ல விலையில் அள்ளினார். எனவே இந்த முறையும் பொருத்திருந்து பார்க்கலாம் என்றே நம்புகிறேன்.

காமிராக்களும் LCD TV களும் இடங்களை வியாபித்திருந்தன. DSLR காமிராக்கள் 1500$க்கு குறையாமல் இருந்தன. எனவே சந்தைக்கும் இங்குக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாய் தெரியவில்லை.

புதிதாய் செல்பவர்களுக்கு,
உங்கள் விருப்பம் லேப்டாப் அல்லது ப்ரின்டர் என்றால் கண்ணைமூடிக்கொண்டு 4வது ஃப்ளோருக்கு செல்லுங்கள்.

உங்கள் விருப்பம் மற்ற சிறிய கணிப்பொறி பாகங்கள் என்றால் நேரடியாக 6வது ஃப்ளோர் செல்லுங்கள்.

உங்கள் விருப்பம் சோனி அல்லது ஸ்டார்ஹப் என்றால் நீங்கள் செல்ல வேண்டியது 3வது ஃப்ளோருக்கு.

நீங்கள் எதை வாங்க தீர்மானித்திருக்கிரீர்களோ, அந்த செக்ஷனுக்கு முதலில் செல்லுங்கள்.ஒருமுறை சென்று விலைகளை கவனித்துக்கொள்ளுங்கள். அப்புறம் இறுதி நாள் மதியம் அல்லது சாயங்காலம் சென்று வாங்கிவாருங்கள். ஏனெனில் விலை குறையக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Smooth talk ‍ன் பின்னூட்டத்தையும் கொஞ்சம் நினைவில் கொள்ளுங்கள்.

Happy Shopping

சிங்கப்பூர் IT Show 2008

SITEX Expoவுக்கு பிறகு க்ரெடிட் கார்டுக்கு ஆப்பு வைக்க வந்திருக்கும் அடுத்த IT-திருவிழா. இம்முறை சன்டெக் மாலில் 4 ஃப்ளோர்களில் பட்டாசாக இருக்கிறது IT Show 2008. முதல் ஃப்ளோரில் என்னால் ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லை Panasonic தவிர. ஒரு சில IP Phone, Laptop-களைத்தவிர பெரிதாக ஒன்றும் போட்டு விடவில்லை. ஒரு laptop தண்ணீரில் நனைந்து கொண்டிருப்பது போல் வைத்திருந்தார்கள். வியாபார தந்திரம்!!!

3வது ஃப்ளோரில் நுழைந்தவுடன் StarHUB மட்டுமே தென்பட்டது. போச்சுடா இது SITEX மாதிரி இல்லை போல என்று திரும்பினால், அங்கே ஒரு பெரிய வீதி நீளத்திற்கு திருவிழா கடை போட்டிருந்தது நம்ம சோனி. எங்கு பார்த்தாலும் VAIO-களும் LCD TV and DSLR camera-களுமே இருந்தன. அந்த கும்பலுக்கு நடுவிலும் நம்மாட்கள்(நம்ம வயது ஆட்கள் பா. உடனே இதுக்கும் சண்டைக்கு வராதீங்க) வாயை பிளந்து ரெக்கார்ட் டான்ஸ் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆமாம் சோனி ‍க்கு எதற்கு செல்கிறோமோ இல்லையோ, குறைந்தபட்சம் டான்ஸ் பார்க்கவாவது போகலாம். சும்மா வாங்கி போட்டு குத்துகிறார்கள்.

4வது ஃப்ளோரில் நுழைந்தவுடந்தான் மூச்சே வந்தது. எங்கு பார்த்தாலும் நம்ம லாப்டாப் மற்றும் ப்ரிண்டர் ஆசாமிகள்தான். இந்த முறையாவது ஒரு நல்ல புது மாடல் லாப்டாப் வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்த என்னை, வாடா என் ராசா என்பது போல் உள்ளே அழைத்துக்கொண்டது அந்த ஃப்ளோர். ஒரு பேப்பர் பொறுக்கும் பையனின் ஆர்வத்துடன் உள்ளே நுழைந்து அனைத்து விளம்பரசீட்டுகளையும் வாங்கிக்கொண்டேன்(பொறிக்கிக்கொண்டேன்). ஆங்காங்கே குனிந்து நின்று ஆர்வத்துடன் கவனித்துக்கொண்டிருந்த பெண்களைக்கூட பார்க்காமல் சுற்றினேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

6வது ஃப்ளோரில் முழுக்க குட்டி குட்டி கடைகள். அவைகளை இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு முடிந்தால் படத்துடன் தொடர்கிறேன்.


என் ஜூர எழுத்துக்கள்

உடல் முழுதும் வெப்பம் ஏறிக்கொண்டிருக்கிறது
எப்போதாவது வந்து செல்லும்
"ஏன் வாழ வேண்டும்" எண்ணம் தோன்றுகிறது
நலமாய் இருப்போரைக்கண்டால் எரிச்சல் வருகிறது
மருந்துகள் மட்டுமே உடனிருக்கின்றன‌
உடலில் இருந்து வெப்பம் வெளியேறும் நிகழ்வு,
கலவி முடிவில் கிடைக்கும் உணர்வின் வலிமையோடு
மிகுந்த வலியுடன் நிகழ்கிறது.
கலவியில் நேர்வதைப்போல்
உடல் மனதை முந்திச்செல்கிறது.
கலவியில் ஒருமுறை வரும் உச்சகட்டம்,
இங்கு விட்டு விட்டு வந்து செல்கிறது
என் எழுத்துக்களை கொல்ல முயற்சிக்கிறது தலைவலி
பேனாமுனையை
ஒரு வரியில் இருந்து இன்னொரு வரிக்கு தள்ளிவிட்டு
கொல்லப்பார்க்கிறது.
ஒவ்வொருமுறையும் ஜூரம் வரும்போது புரியுமிவை அனைத்தும்
அடுத்தவருக்கு வரும்போது புரிய மறுக்கிறது



Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.